உஷார் மக்களே.. நாளை முதல் 2 நாள் ஸ்டிரைக்.. ஏடிஎம் சேவை தடைபடலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வரும் 15, 16-ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, மார்ச் 13 அன்று மாதத்தின் 2-வது சனிக்கிழமையாகும். இதனையடுத்து மார்ச் 14-ம் தேதி ஞாயிற்ற்கு கிழமை என்பதால் வங்கி விடுமுறை நாளாகும்.

இதனை தொடந்து நாளையும், நாளை மறுநாளும் வங்கி விடுமுறை என்பதால், வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனினும் தனியார் வங்கிகள் வழக்கம்போல செயல்படும்.

எதற்காக இந்த போராட்டம்?

எதற்காக இந்த போராட்டம்?

அரசு கூறியதுபோல பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால், வங்கி ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலைக்கு தள்ளப்படலாம் என ஊழியர் சங்கங்கள் அஞ்சுகின்றன. இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியும் அதற்கு சரியான முடிவு எட்டப்படாத நிலையில், வங்கி ஊழியர்கள் சங்கங்கள் வங்கி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

Array

Array

பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ & கனரா வங்கி மற்றும் சில வங்கிகள், வங்கிகள் சேவைகள் பாதிக்கப்படலாம் என வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளன. வங்கிகள் தனியார்மயமாக்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் தாக்கலின் போது கூறியிருந்தார். ஏற்கனவே அரசு ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்ற நிலையில், அவ்வங்கி தனியார்மயமாக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள்?

இந்த போராட்டத்தில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள்?

UFBU, AIBEA-ன் உறுப்பினர்கள், அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை அடங்கும். இவர்களோடு இந்திய தேசிய வங்கி ஊழியர் சம்மேளனம், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ், வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு ஆகியவை இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவைகள் முடங்கலாம்

சேவைகள் முடங்கலாம்

ஏற்கனவே சனி ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறை. இதனை தொடர்ந்து அடுத்த இரு நாட்கள் ஸ்டிரைக் என்பதால், ஏடிஎம் சேவைகள், வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. இதனால் பணத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் முன் கூட்டியே செலுத்தி விடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank strike: PSU bank employees plans to two days strike from march 15, ATM Services may hit

Bank strike updates.. PSU bank employee’s plans to two days strike from march 15, ATM Services may hit
Story first published: Sunday, March 14, 2021, 22:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X