ரெப்போ வட்டி விகித உயர்வால் வங்கிகள் உயர்த்தும் வட்டி சதவிகிதம் எவ்வளவாக இருக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்று இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியதால் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்படும் என்பதை பார்த்தோம்.

 

வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு திண்டாட்டம் என்றும் ஆனால் அதே நேரத்தில் வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்தபவர்களுக்கு கொண்டாட்டம் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ரெப்போ வட்டி விகிதம் 50 புள்ளிகள் உயர்ந்துள்ளதால் வங்கிகளின் வட்டி விகித உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது குறித்து பொருளாதார அறிஞர்கள் கூறியதை பார்ப்போம்

ரெப்போ விகித உயர்வு.. பங்குச்சந்தையில் ஆச்சரிய மாற்றம்..!

ரெப்போ

ரெப்போ

ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கே பால் தாமஸ் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ரெப்போ 50 புள்ளிகள் உயர்ந்ததால் வங்கியின் வட்டி வைப்பு விகிதங்கள் 20-25 bps வரை உயரக்கூடும் என்று கூறினார்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி இந்த நிதியாண்டுக்கான பணவீக்க முன்னறிவிப்பை 100 bpsஆல் 6.7 சதவீதமாக உயர்த்தியுள்ள நிலையில், மத்திய வங்கி அதன் கொள்கை விகிதத்தை தொடர்ந்து உயர்த்தும் என்று தாமஸ் கூறினார். ஆனால் அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், கடன் தேவையில் எந்த பாதிப்பும் இருக்காது' என்று தாமஸ் கூறினார்.

வீட்டுக் கடன் வட்டி
 

வீட்டுக் கடன் வட்டி

HDFC ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் எம்டி ரேணு சுத் கர்னாட் அவர்களும் கிட்டத்தட்ட இதே கருத்தை தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 50-பிபிஎஸ் ரெப்போ விகித உயர்வு, கடன் வட்டி விகிதங்கள் மற்றும் வைப்பு விகிதங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும், ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி என்றும் கூறினார். மேலும் இந்த வட்டி விகித உயர்வு காரணமாக வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் உயரும் என்றும், EMIகளையும் பாதிக்கும்' என்றும் கூறினார்.

கடன் தேவை

கடன் தேவை

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவரும் எம்.டியுமான உமேஷ் ரேவங்கர் இதுகுறித்து கூறியபோது, 'கடன் வழங்கும் விகிதத்தில் 25 பிபிஎஸ் அதிகரிப்பு இருக்கும் என்றும், ஆனால் இது பொருளாதார நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் கடன் தேவையை பாதிக்காது என்றும் கூறினார். மே 20ஆம் தேதியுடன் முடிவடைந்த பதினைந்து நாட்களில் வங்கிகளின் கடன் ரூ.120.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும், அதேபோல் இன்னொரு பக்கத்தில் டெபாசிட்கள் 165.74 லட்சம் கோடியாக இருந்தது என்றும் கூறினார்.

கிராமங்கள்

கிராமங்கள்

ஐடிபிஐ வங்கியின் துணை நிர்வாக இயக்குநர் சுரேஷ் கட்டன்ஹர் அவர்கள் இதுகுறித்து கூறியபோது மத்திய வங்கி இந்த நிதியாண்டுக்கான வளர்ச்சி முன்னறிவிப்பை 7.2 சதவீதத்தில் தக்கவைத்துக்கொண்டதாகவும், வட்டி விகித உயர்வுகள் இருந்தபோதிலும் கடன் தேவையை நிலைநிறுத்துவதைக் குறிக்கிறது என்றும் கூறினார். மேலும் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து கடன் தேவையில் முன்னேற்றம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் எழும்

மீண்டும் எழும்

சவுத் இந்தியன் வங்கியின் எம்.டி மற்றும் சி.இ.ஓ முரளி ராமகிருஷ்ணன் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, 'புவிசார் அரசியல் பதட்டங்கள் தணிந்து, தொற்றுநோயால் ஏற்படும் சவால்கள் தணிக்கப்பட்டவுடன் இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் எழும் என்று தெரிவித்தார். தொற்றுநோய் காரணமாக நீண்டகால சரிவுக்குப் பிறகு பல்வேறு காலாண்டுகளில் பொருளாதாரம் மீண்டு வருவதால், நாட்டின் வளர்ச்சிக்காக வட்டி விகிதங்கள் விரைவில் சீரமைக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.

வளர்ச்சி

வளர்ச்சி

SVC கூட்டுறவு வங்கியின் MD, ஆஷிஷ் சிங்கால் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, 'நேற்று எடுக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் வீட்டுத் துறைக்கான கடன் தேவையை அதிகரிக்கும் மற்றும் கூட்டுறவு வங்கித் துறையின் வருவாய் வளர்ச்சியும் யை அதிகரிக்கும் என்று கூறினார்.

20-25 புள்ளிகள்

20-25 புள்ளிகள்

மொத்தத்தில் பொருளாதார வல்லுனர்கள் கூறியதன் அடிப்படையில் ரெப்போ வட்டி விகித உயர்வால் 20-25 புள்ளிகள் வங்கி வட்டிக்கடன் விகிதம் உயரும் என்றும், இந்த வட்டி விகித உயர்வால் கடன் தேவையை எந்த அளவுக்கும் பாதிக்காது என்றும் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bankers expect interest rates to rise by 20-25 basis points post RBI’s 50 bps rate hike

Bankers expect interest rates to rise by 20-25 basis points post RBI’s 50 bps rate hike | ரெப்போ வட்டி விகித உயர்வால் வங்கிகள் உயர்த்தும் வட்டி சதவிகிதம் எவ்வளவாக இருக்கும்?
Story first published: Thursday, June 9, 2022, 7:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X