இந்தியாவினைத் விடாமல் துரத்தும் கொரோனா.. வங்கி முதல் 4 முக்கிய துறைக்கு பெருத்த அடி தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் மக்கள் கொரோனாவால் இறப்பதை விட பட்டினியால் அதிகம் இறந்து விடுவார்களோ என்ற பயம் தான் எழுகிறது.

ஏனெனில் சாமனியன் முதல் பணக்காரர்கள் வரை கொரோனாவினால் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரை தங்கள் கைகளில் இருந்த பணம், சேமிப்பு, அரசின் உதவி என இருந்தவற்றை வைத்து காலத்தினை போக்கிய மக்கள், அரசு கொடுக்கும் ரேஷன் அரிசி கூட வரும் காலத்தில் கிடைக்காமல் போய்விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றனர்.

எந்தெந்த துறைகள் பாதிக்கும்

எந்தெந்த துறைகள் பாதிக்கும்

இப்படி சாமனிய பொதுமக்கள் பெரும் பொருளாதார பற்றாக்குறையால் அவதிப்படும் நிலையில், சில முக்கிய துறைகள் இந்தியாவில் பெருத்த அடி வாங்கக் கூடும் என்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக வங்கித் துறை, சில்லறை வர்த்தகம், ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் துறை என பல முக்கிய துறைகளும் பெருத்த அடி வாங்க கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சரி எந்த துறை எப்படியெல்லாம் பிரச்சனையை சந்திக்கலாம். வாருங்கள் பார்க்கலாம்.

வங்கிதுறை

வங்கிதுறை

நாட்டில் மிக வேகமாக படையெடுத்து வரும் கொரோனாவால் கடன் வளர்ச்சி பெரிதும் பாதிக்கும். குறிப்பாக மோசமான கடன் அளவினையும் இது அதிகரிக்கும். மேலும் சில்லறை கடன் துறையில் பெருத்த அடி வாங்கலாம் என்று DSP இன்வெஸ்ட்மென்ட்ஸ் அறிக்கை கூறுகிறது. ஏனெனில் 2021ம் நிதியாண்டில் 20%+க்கும் அதிகமான வருவாய் குறைக்கப்படுவதை நாங்கள் கண்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் பிரச்சனை

சில்லறை வர்த்தகத்தில் பிரச்சனை

சமூக இடைவெளி என்பது வரும் காலத்தில் சில்லறை வர்த்தகத்தினை கணிசமான அளவு பாதிக்கப்படக்கூடும். சில்லறை வர்த்தகம் பொதுவாக வாடகை, பணியாளர் செலவு மற்றும் பயன்பாடு ஆகியவை இயற்கையில் பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இது அதிக செயல்பாட்டுத் திறன் கொண்ட ஒரு வணிகமாகும். ஆக இந்த கொரோனாவினால் சில்லறை துறையும் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.

பாதிப்பு யாருக்கு?

பாதிப்பு யாருக்கு?

ஆக எந்த ஒரு வருவாய் இழப்பும் இந்த சில்லறை வணிகத்தினை பெரிதும் பாதிக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஆடை சில்லறை விற்பனையாளர்கள் தான் என்று கூறுகிறது இந்த அறிக்கை. இதே உணவு சில்லறை விற்பனையாளர்கள் (உணவகங்கள்), மளிகை சில்லறை விற்பனையாளர்கள் மிகக் குறைவாகவே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறியுள்ளது.

ரியல் எஸ்டேட் துறை

ரியல் எஸ்டேட் துறை

ஏற்கனவே பொருளாதார மந்த நிலையினால் பெருத்த அடி வாங்கியுள்ள ரியல் எஸ்டேட் துறையானது, கொரோனா தாக்கத்திற்கு பின்பு சொல்லவா வேண்டும். இந்த துறை மீண்டு வர நீண்ட காலம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. அதிலும் தற்போது நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் சில்லறை துறையானது பெரிதும் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

வணிகப் பிரிவிலும் விற்பனை குறையும்

வணிகப் பிரிவிலும் விற்பனை குறையும்

வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் நிலையில் இல்லாத நிலையில், வாடகையும் கிடைக்க வழி இல்லை. லாக்டவுனுக்கு பிறகும் கொடுப்பது மிக எளிதல்ல. இதே இதில் வணிகப்பிரிவும் குறிப்பிடத்தக்க அளவு பிரச்சனையை மேற்கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இத்துறையில் வணிகப்பிரிவில் கிடைக்கும் வருமானமும் குறைவாகவே இருக்கும். இதனால் வணிகத் துறையிலும் விற்பனை குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறை

கடந்த ஆண்டில் இருந்தே பெருத்த அடி வாங்கி வந்த ஆட்டோமொபைல் துறையானது, மெல்ல மெல்ல ஏற்றம் காணத் தொடங்கிய நிலையில் தான், கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. இத்துறையினை பொறுத்த வரையில் தேவையும் குறைந்துள்ளது. அதோடு விநியோக சங்கிலியும் வெகுவாக குறைந்துள்ளது. ஆக ஆட்டோமொபைல் துறை மீண்டும் ஒரு முறை பெருத்த அடி வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இவர்களுக்கும் அடி தான்

இவர்களுக்கும் அடி தான்

மேற்கண்ட துறைகள் மட்டும் தான் பாதிக்கப்படும் என்பதல்ல, மீதமுள்ள துறைகளும் பல்வேறு விதங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ள கூடும். இதில் குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறை, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், டெக்ஸ்டைல், கேப்பிட்டல் கூட்ஸ், சிமெண்ட், கட்டுமானம், ஹாஸ்பிட்டல், கேஸ், ஆயில் உற்பத்தி மற்றும் மார்கெட்டிங், மெட்டல் உற்பத்தி என பலதுறைகளும் அடிவாங்கலாம் என டிஎஸ்பி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Banking, retail, real estate, auto worst hit sectors amid coronavirus

DSP investment report said Banking, retail, real estate, and auto are among the worst affected sectors due to coronavirus pandemic.
Story first published: Wednesday, April 22, 2020, 14:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X