இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு பொதுத்துறை வங்கிகளும் சரி, தனியார் வங்கிகளும் சரி மூன்று நாட்களுக்கு வங்கி சேவை கிடைக்காது என்று கூறப்படுகிறது.
ஏனெனில் இன்று மஹாசிவராத்திரியின் காரணமாக வங்கிகளின் கிளைகள் இன்று வணிகத்திற்காக திறக்கப்படாது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் இன்றிலிருந்து அடுத்து வரும் மூன்று நாட்களுக்கும் வங்கி சேவைகள் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.
கொரோனா பீதியில் முடங்கிய வைர வியாபாரம்.. கதறும் இந்திய வியாபாரிகள்..!

நாளை நான்காவது சனிக்கிழமை
இதுவே நாளை நான்காவது சனிக்கிழமையாதாலால் வங்கிகள் எப்போதும் போல விடுமுறை. ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வங்கி சேவைகள் முடங்கலாம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அதற்கேற்றாற்போல் செயல்பட வேண்டும். காசோலைகள் அனுமதி போன்ற சில வங்கி சேவைகள் பாதிக்கப்படுவதால் உங்களது வங்கி குறித்தான நடைமுறைகள் பாதிக்கப்படலாம். ஆக மக்கள் இதிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வங்கி ஸ்டிரைக்
இதே போல அடுத்தமாதம் வங்கிகள் மார்ச் 11 -13 முதல் வங்கிகள் வேலை நிறுத்தத்திற்கு அழைத்துள்ளன. இந்த மூன்று நாட்கள் ஸ்டிரைக் காரணமாக வங்கிகள் இயங்காமல் போகலாம். அடுத்து வரும் மார்ச் 14ம் தேதி அன்று மட்டும் வங்கி இயங்கினாலும், அடுத்து மார்ச் 15 ஞாயிற்குகிழமை என்பதால் அன்றும் வங்கி விடுமுறை. ஆக மக்கள் அதற்கேற்றவாறு தங்களது கடமைகளை செய்து கொள்ளலாம்.

தொடரும் போராட்டம் எதற்காக?
இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வங்கித்துறையானது வாராக்கடன், நிர்வாகப் பிரச்சனை, சம்பள பிரச்சனை என பல பிரச்சனைகளை வலியுறுத்தி கடந்த மாதமே போராட்ட களத்தில் ஈடுபட்டன. இது குறித்தான பேச்சுவார்த்தையில் வங்கி ஊழியர் சங்கம் ஈடுபட்ட நிலையிலும், சரியான தீர்வு கிடைத்தாக தெரியவில்லை. மேலும் இந்த பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தால் போராட்டத்தை கைவிட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மார்ச்சில் மீண்டும் இந்த போராட்டம் தொடர வாய்ப்புள்ளது.

இந்த சேவைகள் எல்லாம் பாதிக்கலாம்
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பணம் எடுக்க முடியாமல் போகவும், பணம் செலுத்துவதற்காகவும், வங்கி கணக்கு புத்தகத்தில் பதிவுகள் போடுவதற்காக என்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்கப்படலாம். குறிப்பாக காசோலைகள் அடுத்தகட்ட நிலையை எட்டமுடியாமல் தேக்கம் அடையலாம். மேலும் ஏ.டி.எம் சேவை கூட இந்த சமயங்களில் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.