ஒரே ஒரு கஸ்டமர்-காக இயங்கும் வங்கி கிளை.. யாருப்பா இது, ரொம்ப ஸ்பெஷல்லா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதிர்காலத்தில் வங்கி சேவைகள் மற்றும் வங்கி கிளைகள் எப்படி இருக்கும் என்பதற்கான முதல் உதாரணம் இது தான். வங்கி சேவைகள் கடந்த 10 வருடத்தில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது.

 

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என நீங்கள் சொன்னால், கடந்த 3 முறை எத்தனை மாதத்தில் சென்றுள்ளீர்கள் என்பதைக் கணக்கிட்டால் மட்டுமே போதும், வங்கி சேவைகளை நாம் எந்த அளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் இணையம் வாயிலாகப் பெறுகிறோம் என்பது தெரிந்துவிடும்.

இந்த நிலையில் பிரிட்டன் நாட்டில் ஒரு வங்கி கிளையில் ஒரு வாடிக்கையாளருக்கு மட்டுமே வங்கி அதிகாரிகள் சேவை அளித்து வந்த நிலையில், தற்போது இந்த வங்கி கிளை மூட முடிவு செய்யப்பட்டு உள்ளது. யார் இந்த ஒற்றை வாடிக்கையாளர்.

Barclay வங்கி

Barclay வங்கி

உலகின் 10 பெரிய வங்கியாக இருக்கும் Barclays கடந்த சில ஆண்டுகள் டிஜிட்டல் வங்கி சேவையில் அதிகப்படியான முதலீட்டைச் செய்து அனைத்து விதமான சேவைகளை இண்டர்நெட் மற்றும் மொபைல் வங்கி சேவை வாயிலாக அளித்து வருகிறது. இதனால் வங்கி கிளைக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது.

பீட்டர் விஸ்பை

பீட்டர் விஸ்பை

இந்த நிலையில் தான் தென் லண்டனை சேர்ந்த ஒரு Barclays வங்கி கிளையில் வெறும் ஒரு வாடிக்கையாளருக்காக ஒட்டுமொத்த வங்கி கிளையும் இயங்கி வருகிறது. தென் லண்டனில் Bermondsey பகுதியில் டவர் பிரிட்ஜ் சாலையில் இருக்கும் Barclays வங்கி கிளையில் 84 வயதான பீட்டர் விஸ்பை என்பவர் மட்டுமே வங்கி கிளைக்கு வரும் வாடிக்கையாளராக உள்ளார்.

இண்டர்நெட் வங்கி
 

இண்டர்நெட் வங்கி

பீட்டர் விஸ்பை-க்கு இண்டர்நெட் வங்கி பயன்படுத்தத் தெரியாது என்பதால் இவர் மட்டுமே டவர் பிரிட்ஜ் சாலையில் இருக்கும் Barclays வங்கி கிளைக்கு வந்து பணத்தை டெபாசிட் செய்வதோ அல்லது வித்டிரா செய்து வரும் நபராக உள்ளார். இந்த நிலையில் Barclays வங்கி நிர்வாகம் இக்கிளையை மூட முடிவு செய்துள்ளது.

பியூச்சர் போன்

பியூச்சர் போன்

இப்பகுதியில் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் இண்டர்நெட் வங்கி சேவையைப் பயன்படுத்தும் காரணத்தால் வங்கி கிளைக்கு யாருமே வருவது இல்லை. பீட்டர் விஸ்பை மற்றும் அவரது மனைவியும் சாதாரணப் பியூச்சர் போன் மட்டுமே பயன்படுத்தும் காரணத்தால் இண்டர்நெட் வங்கி சேவையைப் பயன்படுத்த முடியாமல் உள்ளார்.

Barclays வங்கி நிர்வாகம்

Barclays வங்கி நிர்வாகம்


இந்த நிலையில் பீட்டர் விஸ்பை-க்கு அவரது பேரப்பிள்ளைகள் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்து இணைய வங்கி சேவையைப் பயன்படுத்த கற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்தக் காரணத்தால் இந்த Barclays வங்கி கிளையை மூட முடிவு செய்துள்ளது.

ஏடிஎம் மெஷின்

ஏடிஎம் மெஷின்

இதேபோல் பீட்டர் மற்றும் அவரது மனைவியும் ஏடிஎம் மெஷின் கூடப் பயன்படுத்துவது இல்லை, ஏடிஎம் இயந்திரங்களை அவர்கள் மோசடி செய்யும் இயந்திரம் என நினைக்கும் காரணத்தால் ஏடிஎம்-ஐ பயன்படுத்த மறுக்கின்றனர்.

பீட்டர் விஸ்பை பிரச்சனை

பீட்டர் விஸ்பை பிரச்சனை

பீட்டர் விஸ்பை தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் பகுதி Southwark Park Road, ஆனால் அதுவும் சில வருடங்களுக்கு முன்பே மூடப்பட்டது, தற்போது தொலைவில் இருக்கும் Tower Bridge சாலை கிளைக்குப் பீட்டர் வருகிறார். தற்போது இதுவும் மூடப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Barclays Bank have only one customer in Bermondsey branch; Management decided to close the branch

Barclays Bank have only one customer in Bermondsey branch; Management decided to close branch
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X