பாம்பே ஷேவிங் கம்பெனியின் நிறுவனர்-சிஇஓ சாந்தனு தேஷ்பாண்டே, இளம் வயதில் பணியில் சேர்பவர்கள் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் என்று குறைந்தது 4-5 வருடங்கள் பணியாற்றுங்கள் என்று தனது லிங்க்ட்இன் கணக்கில் பதிவிட்டார்.
Pristyn Care நிறுவனத்தின் இணை நிறுவனரான ஹர்சிமர்பீர் சிங் தனது லிங்கிடுஇன் கணக்கில் தனது நிறுவனத்தில் சரியான ஊழியர்களைச் சேர்வு செய்யப் பயன்படுத்தும் கொடுமையான இண்டர்வியூ ஹேக் பற்றிய பதிவுகள் இணையத்தில் டிரெண்டிங்க் ஆனது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீஷோ நிறுவனம் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க 11 நாள் விடுமுறை அறிவித்துள்ளது.
பெங்களூர் - மீஷோ
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஈ-காமர்ஸ் நிறுவனமான மீஷோ, வரவிருக்கும் பண்டிகைக் காலத் தள்ளுபடி விற்பனை தணிந்தவுடன், ஊழியர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அனைத்து ஊழியர்களுக்கும் 11 நாள் விடுமுறை (Mental Health Break) அறிவித்துள்ளது.
மீஷோ 11 நாள் விடுமுறை
ஆன்லைன் ஃபேஷன் ஸ்டோர் ஆக அழைக்கப்படும் மீஷோ அனைத்து ஊழியர்களுக்கும் அக்டோபர் 22, 2022 முதல் நவம்பர் 1, 2022 வரையில் தங்களை "ரீசெட் செய்து ரீசார்ஜ்" செய்யும் வரையில் 11 நாள் விடுமுறை எடுக்க அனுமதிக்க உள்ளது. இது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இருக்கும் மீஷோ அறிவித்துள்ளது.
சஞ்சீவ் பர்ன்வால்
யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனமாக விளங்கும் மீஷோ-வின் நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான சஞ்சீவ் பர்ன்வால் தனது ட்விட்டரில், வொர்க் - லைப் பேலென்ஸ் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த முடிவை அறிவித்தார். இந்த நேரத்தில், ஊழியர்கள் தங்களுக்குப் பிடித்தவாறு நேரத்தை செலவிடலாம். மேலும் மென்டல் ஹெல்த் மிகவும் முக்கியம் எனழும் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் நலன்
பொதுவாக இந்திய நிறுவனங்கள் ஊழியர்கள் நலனில் அக்கறை செலுத்துவது இல்லை என்று கூறும் வேளையில், சில புதிய தலைமுறை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தலைவர்கள் ஊழியர்களுக்குப் பல சலுகைகளை அளிக்கின்றனர்.
உங்க நிறுவனம் எப்படி..?
ஆனால் இதேபோல் பாம்பே ஷேவிங் கம்பெனி நிறுவனர்-சிஇஓ சாந்தனு தேஷ்பாண்டே, Pristyn Care நிறுவனத்தின் இணை நிறுவனரான ஹர்சிமர்பீர் சிங் போன்றோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். சரி உங்க நிறுவனம் எப்படி..? மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க...
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications