இனிமேல் தண்ணீர் பிரச்சனையே இல்லை: பெங்களூர், மால்கள், தொழிற்சாலைகள் நிம்மதி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் ஒவ்வொரு நாளும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக தொழிற்சாலைகள் மற்றும் மால்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெங்களூரில் தொழிற்சாலை மற்றும் மால்களுக்கு தேவையான தண்ணீரை சப்ளை செய்வதில் போசன் ஒயிட்வாட்டர் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த நிறுவனம் கழிவு நீரை சுத்திகரித்து தூய நீராக மாற்றி தொழிற்சாலை மற்றும் வணிக வளாகங்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகம் செய்து வருகிறது.

நீங்கள் ஒரு அரசு ஊழியரா? கோடக் மஹிந்திரா வங்கி உங்களுக்கு தரும் செம சலுகை!நீங்கள் ஒரு அரசு ஊழியரா? கோடக் மஹிந்திரா வங்கி உங்களுக்கு தரும் செம சலுகை!

கழிவுநீர் சுத்திகரிப்பு

கழிவுநீர் சுத்திகரிப்பு

கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் தூய தண்ணீராக மாற்றும் நிறுவனத்தை கொண்டுள்ள போசன் ஒயிட்வாட்டர் நிறுவனம் டேங்கர்வாலா என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இந்த சேவையை தொடங்கியுள்ளது.

டேங்கர்வாலா

டேங்கர்வாலா

டேங்கர்வாலா நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் தேவைகளை முன்பதிவு செய்து அவர்களுக்கு வழங்கி வருகிறது. இதன்படி பெங்களூரில் உள்ள வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கி வருகிறது.

டெக்னாலஜி

டெக்னாலஜி

கழிவு நீரை STP (Sewage Treatment Plants) என்ற டெக்னாலஜி மூலம் தூய நீராக மாற்றும் சுத்திகரிப்பு செயல்முறையை செய்துவரும் போசன் ஒயிட்வாட்டர் நிறுவனம் இந்த தூய தண்ணீரை பரிசோதனைக்கு உட்பட்டு அதன்பின் நுகர்வோர்களுக்கு வழங்கி வருகிறது.

போசன் ஒயிட்வாட்டர்

போசன் ஒயிட்வாட்டர்

இது குறித்து போசன் ஒயிட்வாட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் பிரம்மாவர் அவர்கள் கூறியபோது 'STP மூலம் கழிவுநீரை குடிநீராக மாற்றக்கூடிய தரத்தை எங்கள் நிறுவனம் உருவாக்குகிறது என்றும் இதன் நன்மை என்னவென்றால் தொழிற்சாலைகள் நாங்கள் தரும் தண்ணீரில் ரசாயனத்தை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நாங்கள் தரும் தண்ணீரை தொழிற்சாலைகள் நேரடியாகவே பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

கட்டணம்

கட்டணம்

மேலும் தேவையின் அளவைப் பொருத்து லிட்டருக்கு 14 முதல் 18 காசுகள் வரை மால்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து கட்டணமாக வசூலித்து வருகிறோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கட்டமைப்புடன் கூடிய தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப எங்கள் நிறுவனத்தை அணுகி வருகின்றன என்றும் இந்த சேவையால் தண்ணீர் பிரச்சனையை நாங்கள் எளிதாக்கி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்புகள்

அடுக்குமாடி குடியிருப்புகள்

குடியிருப்பு வளாகங்களில் இருந்து வரும் கழிவு நீரை திறமையாக சுத்திகரித்து அதில் உள்ள கழிவுகளை கண்டறிந்து தூய நீராக மாற்றும் கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றும் பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள் எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன என்றும் அதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை சுத்திகரித்து நாங்கள் மால்கள், தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் சென்னையில்

விரைவில் சென்னையில்

தற்போது மேலும் 11 அடுக்குமாடி குடியிருப்பு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் டிசம்பர் மாதத்திற்கு முன்பு மேலும் சில குடியிருப்புகளில் இருந்து கழிவு நீரை பெற்று ஆண்டுக்கு 75 கோடி லிட்டர் தண்ணீரை சப்ளை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் 2025 ஆம் ஆண்டுக்குள் 100 கோடி லிட்டர் வரை தண்ணீரை சேமித்து வழங்குவதே எங்கள் இலக்கு என்றும் பெங்களூர் மட்டுமின்றி எதிர்காலத்தில் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் எங்கள் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தண்ணீர் தேவை

தண்ணீர் தேவை

இதுகுறித்து டேங்கர்வாலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோந்தி கூறுகையில், 'இந்த கூட்டணி மூலம், அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட நீர் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு சுத்தமான தண்ணீர் தேவைப்படும் தொழிற்சாலைகளுக்கு நாங்கள் இடைவெளியின்றி வழங்கி வருகிறோம்' என்றும் தெரிவித்தார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bengaluru malls can now tap into a supply of treated sewage water

Bengaluru malls can now tap into a supply of treated sewage water | இனிமேல் தண்ணீர் பிரச்சனையே இல்லை: பெங்களூர், மால்கள், தொழிற்சாலைகள் நிம்மதி
Story first published: Tuesday, June 14, 2022, 9:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X