பெங்களூர் மக்களுக்கு வருடம் 52,264 ரூபாய் நஷ்டம்.. எப்படித் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூர் நகரம் எந்த அளவிற்கு ஐடி துறைக்குப் பிரபலமோ, அதே அளவிற்கு டிராபிக்-க்கும் பேமஸ். கடந்த 15 வருடத்தில் பெங்களூர் நகரம் தொழில்நுட்பம், வர்த்தகம், ரியல் எஸ்டேட், போக்குவரத்து, பல மாநில மக்களின் வருகை, புதிய டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் தாயகம் என மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது நாம் அனைவருக்கும் தெரியும், இந்த வளர்ச்சியில் மிகப்பெரிய பிரச்சனை தான் இந்த டிராபிக்.

 

பெங்களூர் டிராபிக்-ஆல் பெங்களூர் மக்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு பணத்தை இழக்கிறார்கள் தெரியுமா..?

96% பேருக்கு ஹெச்1பி விசா.. டிரம்ப் ஆட்சியில் புதிய உச்சம்..!

ஆய்வு

ஆய்வு

Institute of Social and Economic Change (ISEC) கல்வி அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மக்களின் திறனை நேரடியாகப் பாதிக்கும் பெங்களூர் வாகன எண்ணிக்கை, வாகன நெரிசல், இதனால் மக்கள் உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஒரு மிகப்பெரிய ஆய்வைச் செய்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் பல வெளிவந்துள்ளது.

427 பெங்களூர்வாசிகள்

427 பெங்களூர்வாசிகள்

ISEC சேர்ந்த விஜயலட்சுமி மற்றும் பேராசிரியர் கிருஷ்ண ராஜ் ஆகியோர் சுமார் 427 பேரிடம் கலந்துரையாடல் செய்துள்ளனர். இவர்கள் பெங்களூரில் பஸ், மெட்ரோ, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தினசரி பயணிப்பவர்கள். இந்த ஆய்வின் முடிவில் 'Economic Estimation of Health and Productivity Impacts of Traffic Congestion: A case of Bengaluru City' என்ற தலைப்பில் முக்கியமான ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்

ஆஸ்துமா முதல் மன அழுத்தம்
 

ஆஸ்துமா முதல் மன அழுத்தம்

இந்த ஆய்வில் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவோர் சுமார் 37 சதவீதம் பேருக்கு ஆஸ்துமாவும், 47 முதல் 50 சதவீதம் பேருக்கு மன அழுத்தம், சுவாச பிரச்சனை, முதுகுத்தண்டு வலி, ரத்த அழுத்தம் போன்றவை பொதுவான பிரச்சனையாக இருப்பது தெரியவந்துள்ளது.

37 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா என்பது போக்குவரத்தின் போது மாசு அடைந்த சுற்றுச்சூழ்நிலையில் இருப்பதால் ஏற்பட அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

பஸ் மற்றும் மெட்ரோ

பஸ் மற்றும் மெட்ரோ

இதேபோல் பஸ் மற்றும் மெட்ரோ போன்ற பொது வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கு 22 சதவீத பேருக்கு தான் ஆஸ்துமா உள்ளது. மேலும் 40 சதவீத பேருக்குச் சுவாச பிரச்சனை, 55 சதவீத பேருக்கு மன அழுத்தம், ரத்த அழுத்தம் ஆகியவை உள்ளது தெரியவந்துள்ளது.

சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவோரை விடவும் பொது வாகனங்களைப் பயன்படுத்துவோருக்குப் பாதிப்பு குறைவாகத் தான் உள்ளது.

உடல் நலம் மேம்பாடு

உடல் நலம் மேம்பாடு

மேலும் சமீப காலத்தில் மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்திற்கு மாறியவர்களின் உடல்நலம் மேம்படுவதுள்ளதாக மக்கள் கூறியுள்ளதாக விஜயலட்சுமி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆனால் செலவுகள் சற்று அதிகரித்துள்ளாகவும் தெரிவித்துள்ளனர்.

செலவுகள்

செலவுகள்

போக்குவரத்து பிரச்சனையால் ஏற்படும் உடல பாதிப்புகளுக்காக வருடத்திற்கு மக்கள் சராசரியாக 4,944 ரூபாயும், வேலைத் திறன் பாதிப்பதால் வருடத்திற்கு 15,520 ரூபாய் வரையிலும், இந்தப் பிரச்சனையில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் முன்னெச்சரிக்கைகளுக்காக வருடத்திற்கு 31,800 ரூபாய் என வருடத்திற்குப் பெங்களூர்வாசிகள் சராசரியாக 52,264 ரூபாய் அளவிலான பணத்தை இழக்கிறார்கள் என இந்த அறிக்கை கூறுகிறது.

முன்னெச்சரிக்கை பிரிவில் கேப்-ல் செல்வது, உடல் பாதிப்பால் விடுமுறை எடுப்பது போன்றவையும் இதில் அடங்குகிறது.

பெங்களூர் டிராபிக்-ஆல் நீங்களும் இதுபோன்ற உடல் பாதிப்புகளை அனுபவித்துள்ளார்களா, கமெண்ட்-ல் பதிவு செய்யுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bengaluru's traffic cost an average of Rs 52,264 per year for a person.. How?

Bengaluru's traffic cost an average Rs 52,264 per year for a person.. How?
Story first published: Saturday, August 22, 2020, 17:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X