புதுக் கார் வாங்க யாருக்குத் தான் ஆசை இருக்காது, அந்த வகையில் கனவு காரை வாங்க முன் சில முக்கியக் காரணிகளை முன்வைத்து ஆய்வு செய்தால் மிகக் குறைந்த வட்டியில் கார் லோன் பெற்று உங்களுக்குப் பிடித்த காரை வாங்கி வீட்டுக்கு ஓட்டி செல்லலாம்.
இந்தியாவில் எப்போதும் இல்லாமல் வகையில் அதிகளவில் வட்டி விகிதம் குறைந்துள்ள நிலையில் சொந்தமாக வீடு, கார் வாங்குவது மிகவும் எளிதான ஒன்றாக மாறியுள்ளது.

7 வருடம் வரையில் கடன்
இதுமட்டும் அல்லாமல் இந்திய வங்கிகள் வர்த்தகம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் 5 வருடம் மட்டுமே கார் கடன் அளிக்கும் வங்கிகள் தற்போது 7 வருடம் வரையில் கார் லோன் அளிக்கிறது. இதைப் பயன்படுத்தி மிகவும் குறைந்த ஈஎம்ஐ தொகையில் சொந்த கார் வாங்கலாம்.

80 சதவீதம் தொகைக்குக் கடன்
மேலும் வங்கிகள் நீங்க தேர்வு செய்யும் கார்களுக்கு 80 சதவீதம் வரையிலான தொகைக்குக் கடன் வழங்குகிறது. இதன் மூலம் சில லட்ச ரூபாய் மட்டுமே முன் தொகையாக வைத்து நீங்கள் விரும்பிய கனவு காரை வாங்க முடியும்.

வட்டி விகிதம் மிகவும் முக்கியம்
இவை அனைத்திற்கும் மேலாகக் கார் லோன் வாங்கும் முன் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் முக்கியமானதாகும். இது தான் மொத்த கடனுக்கான ஈஎம்ஐ தொகை மற்றும் கார்-ன் மதிப்பை முழுமையாக மதிப்பிட முடியும். எனவே கார் கடனுக்கான வட்டி குறைவாக இருப்பது மிகவும் முக்கியமானது.

குறைவான வட்டி விகிதம்
இந்தியாவில் மிகவும் குறைவான வட்டியில் கார் லோன் அளிக்கும் வங்கி இதுதான்.
- சென்டரல் பாங்க் ஆப் இந்திய - 7.05 முதல் 7.80 சதவீதம் வரை
- பாங்க் ஆப் பரோடா - 7.05 முதல் 10.10 சதவீதம் வரை
- யூனியன் பாங்க் ஆப் இந்தியா - 7.15 முதல் 7.50 சதவீதம் வரை
- பஞ்சாப் நேஷனல் வங்கி - 7.30 முதல் 7.80 சதவீதம் வரை
- கனரா வங்கி - 7.05 முதல் 9.90 சதவீதம் வரை
- எஸ்பிஐ - 7.70 முதல் 11.20 சதவீதம் வரை
- ஐசிஐசிஐ வங்கி - 7.90 முதல் 9.85 சதவீதம் வரை