ஒரேயொரு ஜூம் காலில் சுமார் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த அமெரிக்காவின் Better.com நிறுவன சிஇஓ விஷால் கார்க் வெறும் 3 மாதத்தில் அடுத்த ஜூம் கால்-க்கு தயாராகியுள்ளது. விஷால் கார்க்-ன் 900 ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கை பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் பல ஊழியர்கள் தானாக நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.
இதனால் ஒட்டுமொத்த நிர்வாகமே தடுமாற்றத்தில் இருக்கும் போது Better.com நிறுவன சிஇஓ விஷால் கார்க் மிகப்பெரிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Better.com நிறுவனம்
அமெரிக்காவின் முன்னணி ஹோம்ஓனர்ஷிப் நிறுவனமான Better.com நிறுவன சிஇஓ விஷால் கார்க் 900 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பின்பு அதிகப்படியான எதிர்ப்புகளைச் சந்தித்த நிலையில், அனைத்து ஊழியர்கள் மத்தியிலும் மன்னிப்பு கேட்டுவிட்டு சில வாரங்களுக்கு விடுமுறைக்குச் சென்றார். இந்த விடுமுறையில் பெட்டர்.காம் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க வேண்டும் என முடிவு செய்தார்.
இந்தியாவில் ஊழியர்கள்
இதன் படி மிகவும் குறுகிய காலகட்டத்திற்குள் அமெரிக்க வர்த்தகத்திற்காக இந்தியாவில் அதிகப்படியான ஊழியர்களை நியமித்தார். இதன் மூலம் வர்த்தகத்தை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து சிறப்பான முறையிலும் மிகவும் குறைந்த செலவிலும் வர்த்தகத்தை நடத்த துவங்கியது. இந்த இந்திய மாடல் வெற்றிபெற்ற நிலையில் முக்கியமான முடிவை எடுத்துள்ளார் பெட்டர்.காம் சிஇஓ விஷால் கார்க்.
4000 ஊழியர்களைப் பணிநீக்கம்
தற்போது பெட்டர்.காம் நிறுவனத்தில் இருந்து சுமார் 50 சதவீத ஊழியர்கள் அதாவது 4000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு வருவதாகவும். அதற்கான பணிகளை விஷால் கார்க் தலைமையிலான நிர்வாகக் குழு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது டெக் கிரன்ச்.
சாப்ட்பேங்க்
கொரோனா காலத்தில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்ற காரணத்தால் பெட்டர்.காம் 6 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் சுமார் 500 மில்லியன் டாலர் வரையிலான முதலீட்டை ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவனத்திடம் இருந்து ஏப்ரல் 2021ல் பெற்றது.
Peloton, Better.com
ஆனால் கொரோனா தொற்றுக்குப் பின்பு வர்த்தகம் பெரிய அளவில் குறைந்த காரணத்தாலும், வட்டி விகிதம் அதிகரித்து விட்டதாலும், இத்துறையில் இருக்கும் Peloton, Better.com ஆகிய இரு நிறுவனமும் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டது. இதனால் Peloton, Better.com ஆகிய இரு நிறுவனமும் அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
100 மில்லியன் டாலர் நஷ்டம்
கொரோனா கால வர்த்தகத்திற்காக அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்த்தது. இதனால் கடந்த டிசம்பர் காலாண்டில் மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தைப் பெட்டர்.காம் எதிர்கொண்டு உள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications