புதிய நிறுவனத்தை துவங்கும் பாரத்பே அஷ்னீர் குரோவர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபின்டெக் தளமான BharatPe இன் இணை நிறுவனரும் முன்னாள் நிர்வாக இயக்குநருமான அஷ்னீர் குரோவர் மற்றும் அவரது மனைவியும் இணைந்து நிறுவன பணத்தில் பல்வேறு மோசடிகளைச் செய்தது தெரியவந்த நிலையில் இருவரும் பாரத்பே நிறுவன பொறுப்புகளில் இருந்து வெளியேறினர்.

 

இந்தப் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்த நிலையில், அடுத்தச் சில வாரத்திலேயே ட்ரெல் நிறுவனத்தின் நிறுவனர்கள் சிலர் முதலீட்டாளர்களின் பணத்தைப் பார்ட்டி என்ற பெயரில் கணக்கு காட்டி முறைகேடு செய்தது வெளியானது.

இந்நிலையில் அஷ்னீர் குரோவர் புதிய நிறுவனத்தைத் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தங்க நகை வாங்கும் போது அதன் ரசீதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் தெரியுமா?

அஷ்னீர் குரோவர்

அஷ்னீர் குரோவர்

அஷ்னீர் குரோவர் மீண்டும் விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகப் புதிதாக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் துவங்க போவதாக அறிவித்துள்ளார். இந்த முறை முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெறாமல் தனது சொந்த பணத்தையும் முயற்சியையும் முதலீடாகக் கொண்டு நிறுவனத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

புதிய நிறுவனம்

புதிய நிறுவனம்

சண்டிகரில் சமீபத்தில் நடைபெற்ற TiECon-2022 ஸ்டார்ட்-அப் மற்றும் தொழில் முனைவோர் நிகழ்வின் போது, "எனது சொந்த பணத்தில் நிறுவனத்தைத் தொடங்கி லாபம் ஈட்ட விரும்புகிறேன்" என்று அஷ்னீர் குரோவர் கூறினார்.

மாதுரி ஜெயின்
 

மாதுரி ஜெயின்

அஷ்னீர் குரோவர் மற்றும் அவரது, தனது மனைவி மாதுரி ஜெயின் ஆகியோர் பாரத்பே நிறுவனத்தில் பணியாற்றிய போது "நிறுவனத்தின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். மேலும் நிறுவன செலவுக் கணக்குகளைத் திருத்தி தங்களுக்கான சொத்துக்களைச் சேர்த்துக்கொண்டும், ஆடம்பரமான வாழ்க்கையை வாழவும் நிறுவன பணத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

பாரத்பே

பாரத்பே

இதனால் பாரத்பே நிறுவனத்தின் உயர் பதவிகளில் இருந்த அஷ்னீர் குரோவர் மற்றும் மாதுரி ஜெயின் ஆகிய இருவரையும் நிறுவனத்தின் அடிப்படை பணியில் இருந்து நீக்கப்பட்டது மட்டும் அல்லாமல் நிறுவன பங்குகளையும் விற்பனை செய்யக் கட்டளையிடப்பட்டது.

சமுகவலைத்தளம்

சமுகவலைத்தளம்

இதைத் தொடர்ந்து அஷ்னீர் குரோவர் பாரத்பே நிறுவனத்தின் தற்போதைய சுஹைல் சமீர் மீது கடுமையான கருத்துக்களைச் சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இது மேலும் பாரத்பே நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BharatPe Ex MD Ashneer Grover plans for new startup with own money

BharatPe Ex MD Ashneer Grover plans for new startup with own money புதிய நிறுவனத்தைத் துவங்கும் பாரத்பே அஷ்னீர் குரோவர்..!
Story first published: Tuesday, May 3, 2022, 21:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X