ஜோ பைடனின் புதிய குடியுரிமை மசோதா.. ஐடி ஊழியர்களுக்கு பயனளிக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தான் பதவியேற்ற முதல் நாளிலேயே டிரம்ப்பின் பல முக்கிய கட்டுப்பாடுகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 

ஆரம்பத்தில் இருந்தே டிரம்புக்கு எதிரான பிரச்சாரத்தில், பைடன் தான் பதவிக்கு வந்தால் விசா தடையை முழுமையாக நீக்குவேன் என்பது தான் அவரின் முக்கிய பரப்புரையாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே பல முக்கிய நட்வடிக்கைகள் பற்றி உத்தரவிட்டுள்ளார். அதில் ஒன்று தான் குடியேற்ற உரிமை கட்டுப்பாடுகள். மேலும் விரைவில் இந்திய ஐடி ஊழியர்களால் பெரிதும் விரும்பப்படும் விசா கட்டுப்பாடுகளில் முக்கிய மாற்றம் விரைவில் வரலாம் என்றும் தெரிகிறது.

ஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..? உண்மை நிலவரம் என்ன..!ஜோ பிடனால் இந்தியாவிற்கு என்ன லாபம்..? உண்மை நிலவரம் என்ன..!

இந்திய ஐடி ஊழியர்களின் கனவு

இந்திய ஐடி ஊழியர்களின் கனவு

ஏனெனில் இந்திய ஐடி ஊழியர்களில் பெரும்பாலானோரின் கனவே இது தான். அதாவது அமெரிக்கா சென்று பணியாற்றுவது தான். ஏனெனில் அதிக சம்பளம், சொகுசான வாழ்க்கை இப்படி பலவற்றையும் நினைத்து தான், நம்மவர்கள் கனவு கோட்டையை கட்டி வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடுவது போல, கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஹெச்1பி விசா மற்றும் இன்னும் விசாக்களுக்கு தடையை விதித்தார்.

அமெரிக்கர்களுக்கு தான் வாய்ப்பு

அமெரிக்கர்களுக்கு தான் வாய்ப்பு

மேலும் கொரோனா காலத்தில் வேலையின்மை விகிதம் அதிகரித்து வந்த நேரத்தில் தான், டிரம்பின் அறிவிப்பு வந்தது. அதாவது ஹெச் 1 பி மற்றும் சில விசாக்களை தற்காலிகமாக ரத்து செய்தார். மேலும் இந்த வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டும். அமெரிக்கர்களுக்கு கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் மாற்றக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

பச்சை கொடி காட்டிய பைடன்
 

பச்சை கொடி காட்டிய பைடன்

இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தான் ஜோ பைடன் தான் பதவிக்கு வந்த முதல் நாளே, பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதோடு விரைவில் இந்திய ஐடி ஊழியர்களின் விருப்பமான விசா கட்டுப்பாடுகளிலும் மாற்றம் வரலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வாய்ப்புகள் அதிகரிக்கும்

வாய்ப்புகள் அதிகரிக்கும்

அமெரிக்க அதிபர் பைடனின் அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியில், விசா தளர்வுகள் அளிக்கப்பட்டால் இந்திய ஐடி ஊழியர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்காவில் ஹெச் 1பி விசாவினை பயன்படுத்துபவர்களில் அதிகம் இந்தியர்கள் தான். ஆக ஐடி துறையில் வாய்ப்புகள் அதிகரிக்கும் போது, அது நிச்சயம் இந்திய ஊழியர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே இருக்கும். அதோடு இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் இது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஐடி நிறுவனங்கள் இனி ஹெச் 1பி விசா மூலம் இந்திய ஊழியர்களை பணியில் அமர்த்த முடியுமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Biden's immigration bill may benefit Indian IT peoples

Indian IT employees have good news from US new president
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X