நீங்க வாங்கும் மருந்து போலியானதா..? உண்மையை தெரிந்துகொள்ள புதிய வழி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் வாங்கும் மருந்து பாதுகாப்பானதா அல்லது போலி மருந்தா எனப் பலருக்கும் பல முறை சந்தேகம் வந்து இருக்கும், ஆனால் அதை எப்படிச் செக் செய்வது என்பதில் பல குழப்பமும், சவால்களும் உள்ளது.

இந்த நிலையைச் சமாளிக்க மக்கள் போலியான மற்றும் தரம் குறைந்த மருந்துகளை வாங்குவதில் இருந்தும், பயன்படுத்துவதில் இருந்தும் காப்பாற்ற டிராக் அண்ட் டிரேஸ் என்னும் முறையை அதிகம் விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் மருந்துகளின் தரத்தை நிலைநிறுத்த முடியும் என அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..! டிசிஎஸ்: வாரம் 3 நாள் கட்டாயம் ஆபீஸ்.. புதிய உத்தரவு..!

300 முக்கிய மருந்துகள்

300 முக்கிய மருந்துகள்

இத்திட்டத்தின் படி இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் டாப் 300 மருந்துகளின் ப்ரைமரி பேகேஜிங்-ல் பார் கோடு அல்லது QR கோடு நிறுவப்படுகிறது. ப்ரைமரி பேகேஜிங் என்பது ஒரு மருந்தின் பாட்டில், கேன், ஜார் அல்லது டியூபி ஆகியவற்றில் இந்தப் பார் அல்லது QR கோடு இருக்கும்.

100 ரூபாய்

100 ரூபாய்

மேலும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஆன்டிபயோடிக், கார்டியாக், பெயின் கில்லர், அன்ட் அலர்ஜி மருந்துகளில் 100 ரூபாய்க்கு அதிகமாக விலை கொண்ட மருந்துகள் அனைத்திற்கும் முதல் கட்ட டிராக் அண்ட் டிரேஸ் என்னும் முறையை அமலாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

பார்மா நிறுவனங்கள்

பார்மா நிறுவனங்கள்

மத்திய அரசு ஜூன் மாதமே இதற்கான உத்தரவை வெளியிட்டு உள்ளதால் பார்மா நிறுவனங்கள் இந்த டிராக் அண்ட் டிரேஸ் முறையை அமலாக்கம் செய்யப் பார் அல்லது QR கோடு-ல் எந்த வகையான தகவல்களைச் சேமிக்க வேண்டும், அதை எளிதாகப் பயன்படுத்தும் வகையில் கட்டமைத்துள்ளது.

WHO அமைப்பு

WHO அமைப்பு

உலகச் சுகாதார அமைப்பின் தரவுகள் படி உலகில் குறைவான மற்றும் நடுத்தரப் பொருளாதார நாடுகளில் 10 சதவீத மருந்துகள்
தரமற்ற அல்லது போலியான மருந்துகளாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்தால் கட்டாயம் போலியான மருந்துகள் சந்தைக்கு வருவதைக் குறைக்க முடியும்.

டிராக் அண்ட் டிரேஸ் முறை

டிராக் அண்ட் டிரேஸ் முறை

இந்த டிராக் அண்ட் டிரேஸ் முறை அமலாக்கம் செய்த பின்பு மக்கள் அந்த அட்டையில் இருக்கும் unique ID-ஐ மத்திய அரசு உருவாக்கும் இணையத் தளத்தில் பதிவிட்டு மருந்தின் உண்மைத் தன்மையை அறிய முடியும். பின்னாளில் இதை மொபைல் போன் வாயிலாகவும் தெரிந்துகொள்ள முடியும். இவை அனைத்தும் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big Blow to fake medicines in India; government plans to launch ‘track and trace’ mechanism

Big Blow to fake medicines in India; government plans to launch ‘track and trace’ mechanism for 300 most selling antibiotics, cardiac, pain-relief pills, anti-allergic medicines in soon with QR code
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X