இந்தோனேஷியா சமீபத்திய உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு, பாமாயில் இறக்குமதியினை தடை செய்தது.
இது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது எனலாம். ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா பிரச்சனை காரணமாக சன்பிளவர் ஆயில் இறக்குமதியிலும் தாக்கம் இருந்து வரும் நிலையில், சமையல் எண்ணெய் விலை உச்சம் தொட்டிருந்தது.
டிவிட்டரை விட்டு தெறித்து ஓடிய 3 அதிகாரிகள்.. ஆட்டம் காணும் அஸ்திவாரம்..!
இந்த நிலையில் இந்தோனோஷியாவின் அறிவிப்பானது இன்னும் விலையினை அதிகரித்தது.

மிகப்பெரிய ஏற்றுமதியாளர்
இந்தோனேஷியா சர்வதேச அளவில் சுமார் 50 சதவீதம் அளவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகின்றது. ஆக இந்தோனேஷியாவின் ஒற்றை அறிவிப்பானது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. குறிப்பாக சாமானிய மக்கள் மத்தியில் இந்த தடை அறிவிப்பானது இன்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தடை நீக்கம்
இந்த நிலையில் உள்நாட்டு சமையல் எண்ணெய் விநியோக நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, மே 23 முதல் பாமாயில் தடையை இந்தோனேஷியா மே 23 முதல் தடையை நீக்கும் என ஜோகே விடோடா அறிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்
நூற்றுக்கணக்கான இந்தோனேஷியா சிறு விவசாயிகள், தலைநகர் ஜகார்த்தாவிலும், நாட்டின் பிறபகுதிகளிலும் தங்கள் வருமானத்தை குறைத்துள்ள பாமாயில் ஏற்றுமதி தடையை நீக்க கோரி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் தான் இந்த தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிக் ரிலீப்
இந்தியா இந்தோனேசியா நாட்டிலிருந்து அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்கிறது. மாதத்திற்கு சுமார் நாற்பது லட்சம் டன் எண்ணெய் இறக்குமதியை இந்தோனேசியாவிடம் இருந்து இந்தியா மேற்கொள்கிறது. ஏற்கனவே, சன்பிளவர் எண்ணெய் இறக்குமதி உக்ரைன் போர் காரணமாக இந்தியாவில் பாதிப்புக்குள்ளான நிலையில் இந்தோனேசியாவின் இந்த முடிவும் இந்தியாவில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இந்தோனேஷியாவின் தடை நீக்க அறிவிப்பினால், சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய ரீலிப்பினை கொடுக்கலாம்.

இறக்குமதி
இந்தியாவின் 60% சமையல் எண்ணெய் விகிதமானது இறக்குமதி மூலம் சரி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக மொத்த பாமாயில் எண்ணெய் இறக்குமதியில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட அளவு 30% ஆகும். இது இது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்ஸ், அதானி வில்மர் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்கிலும் எதிரொலிக்கலாம்.