இந்திய டெக் மற்றும் ஐடி சேவைத் துறையில் முக்கியமான பிரச்சனையாக விளங்குவது வொர்க் ப்ரம் ஹோம் மற்றும் முன்லைட்டிங் தான்.
பெரும்பாலான நிறுவனங்கள் முன்லைட்டிங் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக வொர்க் ப்ரம் ஹோம் சலுகையை நீக்கி வருகிறது.
இதன் மூலம் அனைத்து முன்னணி நிறுவனங்களும் மூன்லைட்டிங் தான் முக்கியப் பிரச்சனையாக விளங்கி வருகிறது, இதைச் சமாளிக்கப் பல முக்கியமான நடவடிக்கைகளும் விப்ரோ, இன்போசிஸ், happiest minds போன்ற நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

சிறு மற்றும் நடுத்தர ஐடி நிறுவனங்கள்
இதே வேளையில் இந்திய ஐடி சேவை துறையில் பெரு நிறுவனங்களுக்கு இல்லாத தைரியம் சிறு மற்றும் நடுத்தர ஐடி நிறுவனங்களுக்கு வந்துள்ளது. பெரிய நிறுவனங்கள் மூன்லைட்டிங் பிரச்சனையைப் பணிநீக்கத்தால் மட்டுமே சரி செய்ய முடியும் என நம்பும் நிலையில் சிறிய நிறுவனங்கள் மாஸ் காட்டி வருகிறது.

மூன்லைட்டிங்
மூன்லைட்டிங் செய்வது பெரும் குற்றமாகப் பார்க்கப்படும் நிலையில் நாட்டின் நடுத்தர டெக் நிறுவனங்களும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இந்த மூன்லைட்டிங்-ஐ வாரியணைத்து வருகிறது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் தனக்கான சுதந்திரம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

ஊழியர்களிடம் நேரடி பேச்சுவார்த்தை
இந்தியாவில் முன்னணி நடுத்தர, சிறிய ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முன்லைட்டிங் குறித்துத் தனது ஊழியர்களிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த நிறுவனம், எந்தத் திட்டம், எந்த வகையான தொழில்நுட்பம் வரை அனைத்தையும் விசாரித்து அனுமதி அளிக்கிறது.

ஸ்டார்ட்அப்
Zoho, kissflow, M2P பின்டெக் போன்ற முன்னணி ஸ்டார்ட்அப் மற்றும் நடுத்தர ஐடி சேவை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் மிகவும் வெளிப்படையாக முன்லைட்டிங் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

intellectual property முக்கியம்
இதேபோல் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்கள், எதிர்காலத் திட்டங்கள், வர்த்தகத் தொடர்புகள் போன்ற முக்கியமான நிறுவன intellectual property பாதிக்கக் கூடாது என்பதை ஊழியர்கள் மத்தியில் உறுதி செய்துள்ளது.

மேனேஜர்களிடம் ஆலோசனை
இதேபோல் ஊழியர்கள் பிற நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்றால் தங்களின் மேனேஜர்களிடம் ஆலோசனை செய்ய அறிவுறுத்தியுள்ளது. மேலும் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களின் நிறுவன கொள்கை மற்றும் ஊழியர்களின் பணி நியமன ஒப்பந்தம் ஆகியவற்றைத் திருத்தம் செய்து வருகிறது.

திருத்தம்
இந்த மாற்றம் ஊழியர்களை மூன்லைட்டிங் செய்ய அனுமதி அளிக்கும் வண்ணம் மாற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல ஐடி நிறுவன ஊழியர்கள் குறிப்பாக 1 முதல் 4 வருட அனுபவம் கொண்ட டெக் ஊழியர்கள் பெரிய நிறுவனத்தில் இருந்து சிறிய ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வர துவங்கியுள்ளனர்.

ஸ்டார்ட்அப் நிறுவனத் தலைவர்கள்
இந்தியாவில் பல ஸ்டார்ட்அப் நிறுவனத் தலைவர்களும் தற்போது மூன்லைட்டிங்-ஐ ஏற்று வருகின்றனர், இதற்கு முக்கியக் காரணம் ஊழியர்களைத் தவறுகளைச் செய்வதில் இருந்து தடுப்பதில் முதல் ஊழியர்களும், வர்த்தகம் கையைவிட்டுச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவும் இதை அனுமதித்து வருகிறது.

மூன்லைட்டிங் புதியது இல்லை
மூன்லைட்டிங் காலம் காலமாக நடந்து வந்தாலும் கடந்த 3 வருடத்தில் ஐடி சேவைக்கான தேவை அதிகரித்தும், ஐடி ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தாலும் ப்ரீலான்சிங் மற்றும் ஒப்பந்தப் பணிகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது மூன்லைட்டிங் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.

ஸ்விக்கி, இன்போசிஸ்
இந்தியாவில் முதல் முறையாக மூன்லைட்டிங்-ஐ ஏற்று, தனது நிறுவன கொள்கை அளவில் மாற்றம் செய்த நிறுவனம் ஸ்விக்கி, இதேபோல் பெரிய ஐடி சேவை நிறுவனங்கள் மத்தியில் இன்போசிஸ் ஊழியர்களின் வெளியேற்றத்தைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக மூன்லைட்டிங் மற்றும் வொர்க் ப்ரம் ஹோம் ஆகியவற்றை அனுமதி அளித்துள்ளது.