பட்ஜெட் 2022 மூலம் எந்தெந்த நிறுவனத்திற்கு லாபம்..? நஷ்டம்..? - முழு விபரம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவழியாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட் அறிக்கை வந்தாச்சு, பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அனைத்தும் 2022-23 ஆம் நிதியாண்டின் முதல் நாளான ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா 2வது அலையில் சிக்கி மாட்டிக்கொண்ட MSME நிறுவனங்களுக்கான அவசர கால நிதியுதவி திட்டம் 2023 மார்ச் வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் தனிநபர் உட்படப் பல துறைகளுக்கு மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் சாதகமாக அறிவிப்புகளை வெளியிடவில்லை.

இதேவேளையில் இன்பரா, கட்டுமானம், டேட்டா சென்டர், டெக் துறைக்குப் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் எந்தத் துறைக்குச் சாதகமாகவும், எந்தத் துறைக்குப் பாதகமாகவும் இருக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.

பட்ஜெட் பற்றி தெறிக்கவிடும் ட்விட்டர் வாசிகள்.. மிடில் கிளாஸை விட்டீங்களே..! பட்ஜெட் பற்றி தெறிக்கவிடும் ட்விட்டர் வாசிகள்.. மிடில் கிளாஸை விட்டீங்களே..!

 EV பேட்டரி உற்பத்தி - வெற்றி

EV பேட்டரி உற்பத்தி - வெற்றி

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது மத்திய அரசு ஏற்கனவே இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தும் பேட்டரியை தயாரிக்க PLI திட்டம் வெளியிட்டுள்ள நிலையில் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் பேட்டரி ஸ்வாப்பிங் கொள்கையை அறிவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது புதிய வர்த்தகத்தை உருவாக்குவது மட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் வாகன துறையை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும்.

இந்த அறிவிப்பு மூலம் இத்துறையில் ஏற்கனவே இருக்கும் எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், அமர ராஜா பேட்டரீஸ், புதிதாகக் களமிறங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றுக்கு லாபமாக அமைந்துள்ளது.

 பொதுத்துறை வங்கிகள் - தோல்வி

பொதுத்துறை வங்கிகள் - தோல்வி

இந்தப் பட்ஜெட் அறிக்கையில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது, இது நாணய சந்தையில் பொதுத்துறை வங்கிகளின் ஆதிக்கத்தைப் பெரிய அளவில் குறைக்கும்.

இதனால் பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி பட்ஜெட் அறிவிப்பு மூலம் பாதிக்கப்பட உள்ளது.

 போக்குவரத்து, இன்பரா - வெற்றி

போக்குவரத்து, இன்பரா - வெற்றி

மத்திய அரசு சாலை கட்டுமானத்தை 2023ஆம் நிதியாண்டுக்கு 25,000 கிலோமீட்டரை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது, இதேபோல் அடுத்த 3 வருடத்தில் 400 வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் லார்சன் & டூப்ரோ, ஜிஎம்ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், ஐஆர்பி இன்ஃப்ரா, கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் மற்றும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப் ஆகிய நிறுவனங்கள் பலன் அடையும்

 கிரிப்டோ - தோல்வி

கிரிப்டோ - தோல்வி


கிரிப்டோ மற்றும் அனைத்தும் டிஜிட்டல் சொத்துக்கள் மீதான முதலீட்டில் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது இதனால் முதலீட்டாளர்களின் வருமானம் குறையும், இதன் வாயிலாகக் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்-ன் வர்த்தகம் பாதிக்கப்படும்.

இந்த அறிவிப்பு மூலம் இந்திய சந்தையில் இருக்கும் WazirX, Zebpay, CoinDCX மற்றும் Coinswitch Kuber ஆகிய நிறுவனங்கள் பாதிக்கும்.

 உலோகம் - வெற்றி

உலோகம் - வெற்றி

மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அரிக்கையில் 38 மில்லியன் வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் அளிக்கும் திட்டத்திற்காகச் சுமார் 60,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இதேபோல் சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கும் திட்டங்கள் மூலம் உலோக பயன்பாடு இந்தியாவில் அதிகரிக்கும்.

இந்த அறிவிப்பு மூலம் வேதாந்தா, டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஜிண்டால் ஸ்டெயின்லெஸ், பைப்மேக்கர்ஸ் ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ், கேஎஸ்பி, கிர்லோஸ்கர் பிரதர்ஸ், ஆகிய நிறுவனங்கள் பலனடையும்.

 நிலக்கரி மற்றும் தெர்மல் பவர் - தோல்வி

நிலக்கரி மற்றும் தெர்மல் பவர் - தோல்வி

பட்ஜெட் அறிக்கையில் சோலார் மின்சாரத்திற்கு அளிக்கப்பட்டு உள்ள முக்கியத்துவம், நிதி ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்கப் பயோமாஸ் பெல்லெட்-டை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் கோல் இந்தியா சிங்கரேணி காலியரீஸ் கோ, அதானி எண்டர்பிரைசஸ். ஆகிய நிறுவனங்கள் பாதிக்கப்பட உள்ளது.

 சோலார் - வெற்றி

சோலார் - வெற்றி

இந்தியாவில் சோலார் பேனல் உற்பத்தி செய்ய PLI திட்டம் மூலம் 19,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் டாடா பவர், சுஸ்லான் எனர்ஜி, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பலன் பெறும்

 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் - தோல்வி

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் - தோல்வி

இந்தப் பட்ஜெட் அறிக்கையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மீதான சில முக்கிய வரி விதிப்புகளை நீக்கப்பட்டு உள்ளதால் ஸ்டீல் விலை மீண்டும் உயர உள்ளது.

இதனால் ஜின்சால் ஸ்டெயின்லெஸ், டாடா மெடாலிக்ஸ் நிறுவனங்கள் பாதிக்கப்பட உள்ளது.

 சிமெண்ட், கட்டுமானம் - வெற்றி

சிமெண்ட், கட்டுமானம் - வெற்றி

மத்திய அரசு வீடு கட்டுமான திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளதோடு, பல்வேறு ஸ்மார்ட்சிட்டி திட்டம், உள்கட்டமைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த உள்ளது.

இதன் மூலம் அல்ட்ராடெக் சிமெண்ட், அம்புஜா சிமெண்ட்ஸ், பிர்லா கார்ப் மற்றும் ஏசிசி ஆகிய நிறுவனங்கள் பலனடையும்.

 ஆட்டோமொபைல் - தோல்வி

ஆட்டோமொபைல் - தோல்வி

சிப் தட்டுப்பாடு மூலம் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் ஆட்டோமொபைல் துறைக்கு மத்திய அரசு சிறு அளவிலான முக்கியதுவம் மட்டுமே கொடுத்துள்ளது.

இது இந்தியாவில் இருக்கும் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா ஆகிய நிறுவனங்களைப் பாதிக்கும்.

 டெலிகாம், டேட்டோ சென்டர் - வெற்றி

டெலிகாம், டேட்டோ சென்டர் - வெற்றி

இந்தப் பட்ஜெட் அறிக்கையில் விரைவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடக்க உள்ளதாகவும், டேட்டா சென்டரை ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு மூலம் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வோடபோன் ஐடியா, மகாநகர் டெலிபோன் நிகாம், எச்எஃப்சிஎல், தேஜாஸ் நெட்வொர்க்ஸ், ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் பலன் அடையும்.

 டிஜிட்டல் பைனான்ஸ் - வெற்றி

டிஜிட்டல் பைனான்ஸ் - வெற்றி

இந்தியாவில் டிஜிட்டல் நிதியியல் சேவைகளைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதோடு, நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அளிக்கும் வகையில் மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு மூலம் PB பின்டெக், ஓன்97 கம்யூனிகேஷன்ஸ், ஈகிளார்க் சர்வீசஸ், பைசாலோ டிஜிட்டல் ஆகியவை பலன் பெறும்.

 பாதுக்காப்புத் துறை உற்பத்தியாளர்கள் - வெற்றி

பாதுக்காப்புத் துறை உற்பத்தியாளர்கள் - வெற்றி

பாதுக்காப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 68 சதவீதத்தை இந்திய உற்பத்தியாளர்களுக்கு அளிக்க உள்ளதாகப் பட்ஜெட்-ல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் லார்சன் & டூப்ரோ, பாரத் ஃபோர்ஜ் மற்றும் பாராஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ். ட்ரோன் ஸ்டார்ட் அப்களில் ஜீயஸ் நியூமெரிக்ஸ், நியூ ஸ்பேஸ் இந்தியா மற்றும் பாட்லேப் டைனமிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் பலன் அடையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Big winners and big losers of Nirmala Sitharaman's Budget 2022

winners and losers of Nirmala Sitharaman's Budget 2022 பட்ஜெட் 2022ல் யாருக்கெல்லாம் வெற்றி.. யாருக்கெல்லாம் தோல்வி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X