இந்திய சந்தையில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள முதலீடுகள் பொதுவாக 2 காரணத்திற்காகக் குறையும். ஒன்று உள்நாட்டுச் சந்தை மோசமாக இருந்தாலோ அல்லது சரிவை நோக்கிச் சென்றாலோ குறையும். மற்றொன்று இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ள வெளிநாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சரிந்தால் குறையும்.
தற்போது 2 காரணங்களும் ஒன்று சேர்ந்துள்ளதால் இந்தியாவின் அன்னிய செலாவணி எப்போதும் இல்லாத வகையில் 12 வருட சரிவை அடைந்துள்ளது.
கொரோனா ஆரம்பம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே 8 வருட சரிவில் இருந்த நிலையில் அன்னிய செலாவணி கணிசமாகக் குறைந்துகொண்டே வந்த நிலையில், சீனாவில் கொரோனா பிரச்சனை வெடித்தது. இதன் மூலம் சர்வதேசச் சந்தையின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி அளவீடுகள் பாதித்தது.
12 வருட சரிவு
இதைத் தொடர்ந்து சீனாவில் மட்டுமே இருந்தே கொரோனா உலக நாடுகளுக்கு வேகமாகப் பரவியது. இதனால் சர்வதேச பங்குச்சந்தைகளை மளமளவெனச் சரியத் துவங்கியது. இது போதாத இந்தியாவின் அன்னிய செலாவணி குறைவதற்கான காரணம். இப்படிப் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் அன்னிய செலாவணி 12 வருட சரிவை சந்தித்து.
11.98 பில்லியன் டாலர்
மார்ச் 20 வரையில் முடிந்த வாரத்தில் மட்டும் இந்திய சந்தையில் இருந்து சுமார் 11.98 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் வெளியேறியது. இதே காலகட்டத்தில் தான் ரூபாய் மதிப்பின் சரிவைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கையை எடுத்தது.
ஆனால் பன்னாட்டுச் சந்தைகள் தங்களது முதலீட்டை காப்பாற்றும் நோக்கில் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றியது.
தடாலடி சரிவு
மார்ச் 20 உடன் முடிந்த வாரத்தில் 11.98 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகள் குறைந்த நிலையில் இந்திய சந்தையில் மொத்த அன்னிய செலாவணி தொகை எப்போதும் இல்லாத வகையில் 469.9 பில்லியன் டாலராகக் குறைந்தது.
இதேபோன்ற சரிவு 2008ஆம் ஆண்டு நடந்த சர்வதேச நிதி நெருக்கடிக் காலத்தில் ஏற்பட்ட பாதிப்பைப் போலவே உள்ளது.
2008 நிதிநெருக்கடி
அக்டோபர் 24, 2008 முடிந்த வாரத்தில் இந்திய சந்தையில் வரலாறு காணாத விதமாகச் சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய செலாவணி வெளியேறியது.
அப்போது அமெரிக்காவில் பல வங்கி திவாலாகி முடங்கி ஒட்டுமொத்த உலகளாவிய சந்தையும் முடங்கியது. இதேபோன்ற நிலை தான் தற்போது உருவாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications