13 வயது மும்பை சிறுவனை பாராட்டிய பில்கேட்ஸ்.. எதற்கு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத்தாலியில் நடைபெற்ற யூத் பிரிட்ஜ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மும்பையை சேர்ந்த 13 வயது சிறுவன் சாம்பியன் பட்டம் பெற்றார்.

இளம் வயதில் சாம்பியன் பட்டம் பெற்று வரலாறு படைத்த இந்த சிறுவனுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் தான் தாமதமாக வாழ்த்தியதற்கு தனது வருத்தத்தையும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சரிவு.. உங்கள் ஊரில் விலை என்ன?வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சரிவு.. உங்கள் ஊரில் விலை என்ன?

யூத் பிரிட்ஜ் விளையாட்டு

யூத் பிரிட்ஜ் விளையாட்டு

யூத் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் என்ற போட்டி சீட்டுக்கட்டை போன்ற ஒரு விளையாட்டு என்பதும் இதில் சிறு வயதிலிருந்தே அன்ஷூல் பட் மிகச் சிறப்பாக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை சிறுவன்

மும்பை சிறுவன்

இந்த நிலையில் சமீபத்தில் இத்தாலியில் நடந்த யூத் பிரிட்ஜ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உலகெங்கிலும் இருந்து பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சேர்ந்த அன்ஷூல் பட் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதில் ஒன்று ஒட்டுமொத்த செயல்திறனுக்கு ஆன பதக்கம் என்பது குறிப்பிடதக்கது.

பில்கேட்ஸ் வாழ்த்து

பில்கேட்ஸ் வாழ்த்து

கடந்த மாதம் நடந்த இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று வரலாறு படைத்த அன்ஷூல் பட் என்ற சிறுவனுக்கு நாடெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது வாழ்த்து தாமதமானது என்றாலும் எனக்கு பிடித்த இந்த பொழுதுபோக்கு விளையாட்டில் புதிய இளைஞர் ஒருவர் சாம்பியன் பட்டத்தை வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

அன்ஷூல் பட்

அன்ஷூல் பட்

மும்பையில் உள்ள திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த அன்ஷூல் பட், கார்டுகளை பகுப்பாய்வு செய்வதில் மிகவும் திறமையாக விளையாடி உள்ளார். நான் புதிய நண்பர்களை சந்திப்பதால் இந்த பிரிட்ஜ் விளையாட்டை மேலும் மேலும் மேம்படுத்திக் கொள்கிறேன் என்று சில சமீபத்தில் அளித்த பேட்டியில் அன்ஷூல் பட் கூறியுள்ளார்.

தவறுகளில் இருந்து பாடம்

தவறுகளில் இருந்து பாடம்

ஒவ்வொரு முறையும் நான் தவறு செய்யும்போது அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வேன் என்றும் அடுத்த ஆண்டு என்னை நான் மேலும் இந்த விளையாட்டில் மேம்படுத்தி கொள்வேன் என்றும் சாம்பியன் பட்டம் வென்ற அன்ஷூல் பட் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bill Gates congrats to 13 years boy Anshul Bhatt, for Championship in Youth Bridge

Bill Gates congrats to 13 years boy Anshul Bhatt, for Championship in Youth Bridge | 13 வயது மும்பை சிறுவனை பாராட்டிய பில்கேட்ஸ்.. எதற்கு தெரியுமா?
Story first published: Saturday, October 1, 2022, 14:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X