போர் சீசன்ஸ் ஹோட்டலை கைப்பற்றினார் பில்கேட்ஸ்.. அடேங்கப்பா.. கொரோனா நேரத்தில் செம ஐடியா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய டெக் மற்றும் மென்பொருள் சேவை நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ், பெண் ஊழியர் உடனான தொடர்பு வைத்துக்கொண்ட காரணத்திற்காகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து மொத்தமாக வெளியேறினார்.

 

இந்த வெளியேற்றத்திற்குப் பின்பு தனது காதல் மனைவியான மெலிண்டா கேட்ஸிடமிருந்து விவாகரத்து பெற்றார். இந்த மோசமான காலகட்டத்திலும் பில் கேட்ஸ் தனது சொந்த முதலீட்டு நிறுவனமான கேஸ்கேட் இண்வெஸ்ட்மென்ட்ஸ் மூலம் தொடர்ந்து முதலீடு செய்து வளர்ச்சி அடைந்து வருகிறார்.

பிட்காயின்-ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு எல் சல்வடோர்..! பிட்காயின்-ஐ அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்த உலகின் முதல் நாடு எல் சல்வடோர்..!

ஆடம்பர ஹோட்டல் நிறுவனம்

ஆடம்பர ஹோட்டல் நிறுவனம்

உலகின் முன்னணி ஆடம்பர ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றான ஃபோர் சீசன்ஸ் நிறுவனம் சுமார் 47 நாடுகளில் சுமார் 121 சொத்துக்கள் உடன் மிகப்பெரிய அளவிலான ஹோட்டல் மற்றும் ரெசார்ட் வர்த்தகத்தைச் செய்து வருகிறது. இந்நிறுவனத்தை 3 பெரும் முதலீட்டாளர்கள் இணைந்து உலகம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.

ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல்

ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல்

ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் நிறுவனத்தைப் பில் கேட்ஸ்-ன் கேஸ்கேட் இண்வெஸ்ட்மென்ட்ஸ், சவுதி அரேபியா இளவரசர் அல் வலீத் பின் தலால் அல் சவுத் தலைமை வகிக்கும் கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் மற்றும் Isadore Sharp-ன் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து நிர்வாகம் செய்து வருகிறது.

சவுதி அரேபியா இளவரசர்
 

சவுதி அரேபியா இளவரசர்

இந்நிலையில் சவுதி அரேபியா இளவரசர் அல் வலீத் பின் தலால் அல் சவுத் தலைமை வகிக்கும் கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் நிறுவனத்தில் வைத்திருந்த பங்குகளில் சுமார் 23.8 சதவீத பங்குகளைப் பில் கேட்ஸ்-ன் கேஸ்கேட் இண்வெஸ்ட்மென்ட்ஸ் கைப்பற்றியுள்ளது.

பில் கேட்ஸ் பங்கு இருப்பு

பில் கேட்ஸ் பங்கு இருப்பு

இந்தப் பங்கு கைப்பற்றல் மூலம் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் நிறுவனத்தில் பில் கேட்ஸ்-ன் கேஸ்கேட் இண்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்கு இருப்பு 71.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 23.8 சதவீத பங்குகளைப் பில் கேட்ஸ் 2.21 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ள நிலையில், ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலின் மொத்த மதிப்பு 10 பில்லியன் டாலர் அளவீட்டைத் தொட்டு உள்ளது.

கிங்டம் ஹோல்டிங் நிறுவனம்

கிங்டம் ஹோல்டிங் நிறுவனம்

சவுதி அரேபியா இளவரசர் அல் வலீத் பின் தலால் அல் சவுத்-ன் கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் மற்றும் Isadore Sharp-ன் நிறுவனமும் மீதமுள்ள 28.7 சதவீத பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்க முடிவு செய்துள்ளது. கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டல் மட்டும் அல்லாமல் சிட்டி குரூப் இன்க், டாக்சி சேவை நிறுவனமான LYFT ஆகிய நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது.

கிங்டம் ஹோல்டிங்-ன் தொடர் விற்பனை

கிங்டம் ஹோல்டிங்-ன் தொடர் விற்பனை

சவுதி அரேபியா இளவரசர் அல் வலீத் பின் தலால் அல் சவுத்-ன் கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் பல ஹோட்டல் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து வருகிறது. 2018ல் ரிட்ஸ் கார்ட்லான், தற்போது ஃபோர் சீசன்ஸ் என இந்த 10 வருடத்தில் சிறிதும் பெரிதுமாகப் பல ஹோட்டல் பங்குகளை விற்பனை செய்துள்ளது கிங்டம் ஹோல்டிங்.

ஃபோர் சீசன்ஸ் பங்கு விற்பனை

ஃபோர் சீசன்ஸ் பங்கு விற்பனை

ஃபோர் சீசன்ஸ் பங்குகள் விற்பனை மூலம் பெற்ற 2.21 பில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் எதிர்கால வளர்ச்சி திட்டத்தில் முதலீடு செய்யவும், தற்போது நிலுவையில் இருக்கும் கடன்களைத் தீர்க்கவும் முடிவு செய்துள்ளார் சவுதி அரேபியா இளவரசர் அல் வலீத் பின் தலால்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் பல துறை சார்ந்த நிறுவனங்களின் மதிப்பீடு பெரிய அளவில் மாறியுள்ளது. சமீபத்தில் டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாத் கொரோனா தொற்றுக் காலத்தில் ஐடி மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவில் இருக்கும் நிறுவனங்களின் மதிப்பு அதிகரித்துள்ளதால், நிறுவன கைப்பற்றல் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறினார்.

செம ஐடியா

செம ஐடியா

இதேபோன்று உலகம் முழுவதும் கொரோனா தொற்றுப் பாதிப்பு அதிகமாக இருக்கும் நேரத்தில் ஹோட்டல் நிறுவனங்கள் வர்த்தகத்தைப் பெரிய அளவில் இழந்துள்ளதால் இத்துறை நிறுவனங்களின் மதிப்பு மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு உள்ளார் பில் கேட்ஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bill Gates's acquired majority stake in Four Season hotel from Saudi Alwaleed bin talal

Bill Gates's cascade investment acquired a majority stake in Four Season hotel from Saudi Arabia Price Alwaleed bin talal's Kingdom holdings company.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X