எல்லோருக்கும் இலவச கொரோனா டெஸ்ட் கிட்.. கிரண் மசும்தார் அதிரடி அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி பணக்காரர் பெண் மற்றும் பயோகான் நிறுவனத்தின் தலைவருமான கிரண் மசும்தார் ஷா, உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸை பரிசோதனை செய்யும் சோதனை கிட்-ஐ இலவசமாகக் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இது நடந்தால் பல கோடி ஏழை மக்கள் பெரிய அளவிலான பயன் அடைவார்கள் அதுமட்டும் அல்லாமல், மக்கள் அனைவரும் கிரண் மசும்தார் ஷா மற்றும் பயோகான் நிறுவனத்தைப் பாராட்டத் துவங்கியுள்ளனர்.

 கொட்டிக் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்..! #Covid19 #Corona கொட்டிக் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்..! #Covid19 #Corona

அப்போலோ

அப்போலோ

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் விதமாகத் தனிப்பட்ட சிகிச்சை அறை உருவாக்க அப்போலோ மருத்துவமனை நிறுவனத்துடன் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாச்சீஸ் வங்கி, OYO, சோமோட்டோ மற்றும் லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தனிச் சிகிச்சை அறைகளை உருவாக்கும் பிராஜெக்ட் ஸ்டே 1 திட்டம் இன்று துவங்கப்பட்டது.

ஹோட்டல்கள் இணைப்பு

ஹோட்டல்கள் இணைப்பு

இத்திட்டத்தில் OYO, லெமன் ட்ரீ ஹோட்டல் மற்றும் ஜின்ஜர் ஹோட்டல் நிறுவனங்கள் சுமார் 5000 படுக்கைகள் கொண்ட அறைகளைக் கொரோனா சிகிச்சைக்காகக் கொடுத்துள்ளது.

மருத்துச் செலவுகள்

மருத்துச் செலவுகள்

தனிச் சிகிச்சை அறைகள் அமைப்பதற்கான செலவுகள் மற்றும் மருந்து செலவுகள் எஸ்பிஐ, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டாச்சீஸ் வங்கி ஏற்க உள்ளது. முதலில் அவர்கள் தான் இச்செலவுகளை ஏற்க முன்வந்ததாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சங்கீதா ரெட்டி,

சங்கீதா ரெட்டி,

இத்துவக்க விழாவில் வீடியோ கான்பிரென்ஸ் மூலம் கலந்துகொண்டார் கிரண் மசும்தார் ஷா. இப்போது அப்போலோ மருத்துவமனை தலைவர் சங்கீதா ரெட்டி, கிரண் தற்போது ஒரு வாட்ஸ்அப் குழுவை துவக்கியுள்ளார், இக்குழுவில் பல முக்கிய அதிகாரிகள் இணைந்துள்ளனர். இக்குழு கொரோனா ஒழிப்பதற்கான வழி மற்றும் செயல்முறையை உருவாக்குவதில் ஈடுபட உள்ளது என அறிவித்தார்.

கிரண் மசும்தார் ஷா

கிரண் மசும்தார் ஷா

மேலும் அப்போலோவின் பிராஜெக்ட் ஸ்டே 1 திட்டத்தின் ஆலோசகராகவும் கிரண் மசும்தார் ஷா உள்ளார். இப்போது அவர் கூறுகையில், மக்கள் தற்போது வீட்டில் இருக்கும் காரணத்தால் மருத்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு சிறிய கால அவகாசம் கிடைத்துள்ளது.

இதில் எவ்வளவு சீக்கிரம் மருத்து அல்லது வைரஸ் கட்டுப்படுவதது வழிமுறையைக் கண்டுப்பிடுக்கிறோம் என்பது தான் முக்கியம் எனக் கிரண் மசும்தார் ஷா கூறினார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Billionaire Kiran Mazumdar Shaw says she is willing to provide free testing for coronavirus

Kiran Mazumdar Shaw, chairperson and managing director of Biocon, said that she is willing to provide free testing kits for coronavirus. Shaw mentioned that she is working with Apollo to figure out how they can provide testing for the deadly virus. She is an advisor for Apollo’s Stay I project – where Apollo is building quarantine facilities.
Story first published: Tuesday, March 31, 2020, 8:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X