பிட்காயின் விலை 8000 டாலராகச் சரியும்.. அதிர்ச்சி அளிக்கும் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணவீக்கத்தின் பாதிப்பால் பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வால் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நிலையில் பிற நாட்டு நாணயங்கள் மட்டும் அல்லாமல் நாணயங்களுக்கு மாற்றாகக் கருதப்படும் கிரிப்டோகரன்சிகள் அதிகளவிலான சரிவைப் பதிவு செய்து வருகிறது.

 

அதிலும் முக்கியமான ஸ்டேபிள்காயின் எனக் கூறப்படும் டாலர் மதிப்புக்கு இணையான கிரிப்டோகரன்சிகள் சரியும் வேளையில், பில் கேட்ஸ் முதல் வாரன் பபெட் வரையில் பல பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் கிரிப்டோவுக்கு எதிரான கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிட்காயின் 8000 டாலர் வரையில் குறையும் என முன்னணி முதலீட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒரு பங்குக்கு ரூ.30 டிவிடெண்ட் அறிவித்த பார்மா பங்கு.. உங்க போர்ட்போலியோவிலும் இருக்கா? ஒரு பங்குக்கு ரூ.30 டிவிடெண்ட் அறிவித்த பார்மா பங்கு.. உங்க போர்ட்போலியோவிலும் இருக்கா?

பிட்காயின்

பிட்காயின்

பிட்காயின் ஏற்கனவே வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் மேலும் வீழ்ச்சியடையும் என்றும், அதன் தற்போதைய நிலைகளில் இருந்து வெறும் 8,000 டாலராகக் குறையும் என Guggenheim பார்ட்னர்ஸ் என்னும் முன்னணி முதலீட்டு நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி ஸ்காட் மினெர்ட் திங்கட்கிழமை கணித்துள்ளார்.

பிட்காயின் விலை

பிட்காயின் விலை

இது திங்கட்கிழமை ஒரு பிட்காயின் விலை 30,000 டாலர் அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது பிட்காயின் உச்ச விலையில் இருந்து சுமார் 70 சதவீத வீழ்ச்சியாகும். தற்போது ஒரு பிட்காயின் விலை 30,403.60 டாலராக உள்ளது, இந்த அளவில் இருந்து 8000 டாலருக்கு சரிந்தால் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் அதிகப்படியான நஷ்டம் உருவாகும்

ஸ்காட் மினெர்ட்
 

ஸ்காட் மினெர்ட்

பிட்காயின் தொடர்ந்து 30,000 டாலர்களுக்குக் கீழே இருக்கும் போது மத்திய வங்கிகளின் திட்டம், வட்டி விகித உயர்வு, கிரிப்டோ மீதான கட்டுப்பாடுகள், தடைகள் ஆகியவற்றைப் பார்க்கும் போது 8000 டாலர்களுக்குக் கீழ் குறைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என ஸ்காட் மினெர்ட் தெரிவித்துள்ளார்.

பெடரல் ரிசர்வ்

பெடரல் ரிசர்வ்

மைனெர்ட் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துவதையும் பணவியல் கொள்கையை இறுக்குவதையும் மையமாக வைத்து திங்களன்று சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின் பேட்டியில் கூறியுள்ளார்.

கிரிப்டோகரன்சி விலை

கிரிப்டோகரன்சி விலை

பிட்காயின் - 30,403.60 டாலர்

எதிரியம் - 2,069.56 டாலர்
டெதர் - 1.00 டாலர்
பினான்ஸ் - 334.02 டாலர்
USD காயின் - 1.00 டாலர்
ரிப்பிள் - 0.43 டாலர்
கார்டானோ - 0.55 டாலர்
பினான்ஸ் USD - 1.00 டாலர்
சோலானோ - 53.87 டாலர்
டோஜ்காயின் - 0.0876 டாலர்
போல்காடாட் - 10.65 டாலர்
அவலான்சி - 31.89 டாலர்
வார்ப்டு பிட்காயின் - 30,390.42 டாலர்
ட்ரான் - 0.07612 டாலர்
ஷிபா இனு - 0.00001240 டாலர்
டாய் - 1.00000 டாலர்
பாலிகான் - 0.69630 டாலர்
லைட் காயின் - 72.87 டாலர்
க்ரானோஸ் - 0.1991 டாலர்
UNUS Sed - 4.9100 டாலர்
நியர் ப்ரோடோகால் - 6.370 டாலர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bitcoin could fall to 8000 dollar say Guggenheim partner CIO Scott Minerd

Bitcoin could fall to 8000 dollar say Guggenheim partner CIO Scott Minerd பிட்காயின் விலை 8000 டாலராகச் சரியும்.. அதிர்ச்சி அளிக்கும் கணிப்பு..!
Story first published: Monday, May 23, 2022, 22:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X