திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கி சில நிமிடத்திலேயே கிரிப்டோகரன்சி சந்தையின் முன்னணி வர்த்தகப் பொருளாக இருக்கும் பிட்காயின் மதிப்பு 58,332.36 டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில் அடுத்த சில நிமிடங்களில் சரியத் துவங்கியது.
இதன் எதிரொலியாகத் தொடர் சரிவில் காரணமாகப் பிட்காயின் மதிப்பு இன்று ஒரு நாளில் மட்டும் 4 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிவை சரிந்துத்து 53.562 டாலர் அளவீட்டை அடைந்துள்ளது.
அமெரிக்கப் பத்திர சந்தையில் அதிகளவிலான லாபம் கிடைக்கும் காரணத்தால் அமெரிக்க முதலீட்டாளர்கள் உலக நாடுகளில் செய்துள்ள முதலீடுகளைத் திரும்பப் பெற்று வரும் காரணத்தால் இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங் உட்படப் பல நாடுகளின் பங்குச்சந்தை இன்று சரிவைச் சந்தித்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்று குறுகிய கால முதலீட்டு நோக்கில் கிரிப்டோகரன்சி சந்தையில் முதலீடு செய்தவர்கள் அதிகமானோர் இன்று லாப நோக்கத்திற்காகப் பிட்காயினை அதிகளவில் விற்பனை செய்த காரணத்தால் இன்று அதிகளவிலா சரிவு பதிவாகியுள்ளது.
Heard a rumor some crypto coin was pegging the dollar 🤣🤣
— Elon Musk (@elonmusk) February 20, 2021
இதேவேளையில் எலான் மஸ்க் தொடர்ந்து ஆதரித்து வரும் டோஜ்காயின் மதிப்புத் தற்போது 0.055 டாலருக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இன்று அதிகப்படியாக 0.060814 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரு நாளில் மட்டும் டோஜ்காயின் 3 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் டோஜ்காயின் ஒரு டாலர் மதிப்பிற்குச் சமூக வலைத்தளத்தில் கருத்து நிலவும் நிலையில் எலான் மஸ்க் தனது டிவிட்டர் கணக்கில் இது உண்மையா என்பது போல் கேட்டுள்ளார்.