அமெரிக்க அரசு கிரிப்டோகரன்சி மீதான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் பிட்காயின் மதிப்பு பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது.
இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் எதிர்கால லாப நோக்கத்திற்காக சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து பிட்காயின் வாங்கியதை அடுத்து பிட்காயின் மதிப்பு அதிரடியாக அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தவும் வர்த்தகம் செய்யவும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித் தர மாஸ்டர்கார்டு, பாங்க் ஆப் நியூயார்க் மெலான் கார்ப் ஆகிய முன்னணி நிதி நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளது.
தங்கம் வாங்க இது பொன்னான வாய்ப்பு.. இரண்டாவது நாளாக தொடரும் சரிவு.. இன்னும் குறையுமா?

பிட்காயின் புதிய உச்சம்
இந்த அறிவிப்பு வெளியான முதல் பிட்காயின் மதிப்பு சுமார் 8.1 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் ஒரு பிட்காயின் மதிப்பு 48,925 என்ற வரலாற்று உச்சத்தை அடைந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

டெஸ்லா பிட்காயின் பரிமாற்றம்
பேபால் ஏற்கனவே கிரிப்டோகரன்சி பேமெண்ட்-ஐ ஏற்று வரும் நிலையில், டெஸ்லா திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கூடிய விரைவில் கிரிப்டோகரன்சியைக் கொண்டு டெஸ்லா கார் வாங்கும் முறையைத் தனது நிறுவனத்தின் கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நிறுவனங்களின் ஆதரவு
டெஸ்லா, மாஸ்டர்கார்டு, பாங்க் ஆப் நியூயார்க் மெலான் கார்ப் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்து கிரிப்டோகரன்சி மற்றும் அதன் வர்த்தகத்திற்கு ஆதரவு அளித்து வரும் நிலையில் உலக நாடுகளின் அரசுகள் இதை முழுமையாகத் தடை செய்ய முடியாது. இதன் எதிரொலியாகத் தற்போது பிட்காயின் மதிப்பு 48,925 டாலர் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

50,000 டாலர்
இதன் மூலம் அடுத்த சில நாட்களில் பிட்காயின் மதிப்பு 50000 டாலரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலகில் பல நாடுகள் தற்போது பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சியைத் தடை செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கி இந்த வர்த்தகத்தை எப்படி முறைப்படுத்துவது என்பதில் கவனத்தைச் செலுத்தி வருகிறது.