பிட்காயினுக்கு 4 வருடத்திற்குப் பின் 'டேப்ரூட்' அப்டேட்.. நவம்பர் 12 தேதி முதல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய சந்தை மதிப்புக் கொண்ட கிரிப்டோகரன்சியாக விளங்கும் பிட்காயின் ஜூன் 12ஆம் தேதி டேப்ரூட் என்ற புதிய அப்டேட் பெறப்போகிறது.

 

கிரிப்டோகரன்சி அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி செய்யப்படும் காரணத்தால் அதில் உள்ள சில முக்கியமான பிரச்சனைகளைத் தீர்க்கும் வண்ணம் பிட்காயின் கேர் டெவலப்பரான கிரெக் மேக்ஸ்வெல் டேப்ரூட் அப்டேட்-ஐ முன்வைத்தார். இதில் BIP 340, BIP 341 மற்றும் BIP 342 ஆகிய 3 மாற்றங்கள் அடங்கிய டேப்ரூட் அப்டேட்-ஐ பிட்காயின் உற்பத்தி தொழில்நுட்பம் பெற்ற உள்ளது.

 பிட்காயினுக்கு 4 வருடத்திற்குப் பின் 'டேப்ரூட்' அப்டேட்.. நவம்பர் 12 தேதி முதல்..!

இந்த அப்டேட்-க்கு சுமார் 90 சதவீத பிட்காயின் உற்பத்தியாளர்கள் ஒப்புதல் அளித்த காரணத்தால் 12ஆம் தேதி பிட்காயின் டேப்ரூட் அப்டேட்-ஐ பெற உள்ளது. இதில் BIP என்றால் Bitcoin Improvement Protocols என்பது பொருள்.

2017ல் பிட்காயின் செர்விட் என்ற பெரிய அப்டேட்-ஐ பெற்ற நிலையில் அதன் பின்பு பெரிய அப்டேட் எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில் டேப்ரூட் அப்டேட் பிட்காயின் உற்பத்தியில் இருந்து வர்த்தகம் வரையில் பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்கொள்ளப் போகிறது என்பது தெளிவாகியுள்ளது.

பிட்காயின் நெட்வொர்க் தளத்தில் தற்போது இருக்கும் ஸ்மார்ட் கான்டிராக் மூலம் பரிமாற்ற கட்டணம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் பிட்காயின் டேட்டா அளவையும் அதிகரிக்கிறது, இதை டேப்ரூட் அப்படேட்-ல் சரி செய்யப்படுகிறது. டேப்ரூட் அப்படேட்-ல் ECDSA-க்கு பதிலாக Schnorr Signature Algorithm (SSA) பயன்படுத்த பட உள்ளது.

இதன் மூலம் பிட்காயின் வேலெட்-ல் செய்யப்படும் பல பரிமாற்றத்தை தனித்தனியாகக் காட்டாமல் ஓரே பரிமாற்றமாக யூனிக் கீ கீழ் சேர்க்கப்படுகிறது. இது பல வழிகளில் பிட்காயின் நெட்வொர்க்-ல் பயன்படும்.

மேலும் புதிய அப்டேட்-ல் ஸ்மார்ட் கான்டிராக்ட் பயன்படுத்தும் போது MAST பயன்படுத்தும் போது பரிமாற்ற கட்டணம் குறைந்து பிட்காயின் டேட்டா அளவும் குறையும். தற்போது பிட்காயின் நெட்வொர்க்-ல் ஒரு நொடிக்கு 4 முதல் 5 பரிமாற்றம் செய்யப்படும், இதற்கு 75 டாலர் அதற்கும் அதிகமான தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆனால் டேப்ரூட் அப்டேட் மூலம் பெரிய அளவில் இதைக் குறைக்க முடியும்.

 

அனைத்தையும் தாண்டி பிட்காயின்-க்கு கிடைக்க இருக்கும் டேப்ரூட் அப்டேட் மூலம் அதிகப்படியான privacy கிடைக்க உள்ளது. உலகம் முழுவதும் பிட்காயின் மற்றும் இதர கிரிப்டோகரன்சி பயன்படுத்த துவங்கியுள்ள நிலையில் privacy மேம்பாடு அதிகளவிலான பிட்காயின் உற்பத்தியாளர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bitcoin Network gets Taproot Update on November 12, 2021 after segwit update

Bitcoin Network gets Taproot Update on November 12, 2021 after segwit update
Story first published: Wednesday, November 10, 2021, 20:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X