கொரோனா பாதிப்பின் காரணமாக இந்திய முதலீட்டு சந்தை முதல் அமெரிக்க முதலீட்டு சந்தை வரையில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் முதலீட்டாளர் தங்களது முதலீட்டை பாதுகாப்பான தளத்தில் முதலீடு செய்ய வேண்டும் எனத் தங்கத்திலும், வங்கி வைப்பு நிதியிலும் முதலீடு செய்து வரும் நிலையில் ஒரு குறிப்பிட்ட சதவீத முதலீட்டாளர்கள் தொடர்ந்து கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர்.
பிப்ரவரி மாதம் வரையில் தொடர்ந்து பிட்காயின் மதிப்பு சரிந்து வந்த நிலையில், கொரோனா தாக்கம் சீனாவை தாண்டி வெளிநாடுகளில் பரவத் துவங்கிய பின் பங்குச்சந்தை, கச்சா எண்ணெய் முதலீட்டுச் சந்தை என அனைத்தும் சரிந்தது. இதேகாலகட்டத்தில் தான் பிட்காயின் மதிப்பு தாறுமாறாக உயரத் துவங்கியுள்ளது.
சாம்சங் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. மகிழ்ச்சியில் திளைக்கும் ஊழியர்கள்..!

10000 டாலர்
கிரிப்டோகரன்சி உலகின் ராஜாவாக விளங்கும் பிட்காயின் மதிப்பு நீண்ட நாட்களுக்குப் பின், அதுவும் மிகவும் குறைந்த காலகட்டத்தில் 10000 டாலர் மதிப்பீட்டைத் தாண்டி உள்ளது.
பங்குச்சந்தை, கச்சா எண்ணெய் மோசமான நிலையில் இருக்கும் இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்குக் கிரிப்டோகரன்சியின் வளர்ச்சி ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை ஆசிய சந்தை வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 2.2 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பிட்காயின் மதிப்பு 10,015 டாலராக உயர்ந்துள்ளது.
மார்ச் 14ம் தேதி ஒரு பிட்காயின் மதிப்பு வெறும் 5,165.25 அமெரிக்க டாலராக இருந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 10,015 டாலராக உயர்ந்து அசத்தியுள்ளது. கிட்டதட்ட 2 மாதம் காலத்தில் 100 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

மே 11
பிட்காயின் சந்தையைக் கட்டுப்படுத்தப் புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு 2.10 பிட்காயினுக்கும் அல்லது 4 வருடத்திற்கு ஒரு முறை, பிட்காயின் தயாரித்தவர்களுக்குக் கட்டணத்தைச் செலுத்தப்படும், அப்போது புதிய பிட்காயின் சந்தை வர்த்தகத்திற்குள் வரும்.
இந்த நடைமுறை வருகிற மே 11ஆம் தேதி நடக்க இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் பிட்காயின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

மோசமான நிலை
பிட்காயின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கும் போது அதைக் கட்டுப்படுத்த பல்வேறு அரசு கட்டுப்பாடுகளும், முதலீட்டு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இந்தியா உட்படப் பல நாடுகள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைத் தடை செய்த காலத்தில் பல்வேறு மோசமான பாதிப்புகளைக் கிரிப்டோகரன்சி சந்தித்தது.
இந்தத் தடைகளுக்கு முன்பு அதாவது டிசம்பர் 2017 காலத்தில் ஒரு பிட்காயின் மதிப்பு 20,000 அமெரிக்க டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய முதலீட்டுத் திட்டங்கள்
கிரிப்டோகரன்சி மீதான வர்த்தகத்திற்குத் தற்போது பல்வேறு அரசு கட்டுப்பாடுகள் மத்தியில் இயங்கி வரும் நிலையில், முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். 1970களில் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டியதை போல் தற்போது பிட்காயின் விளங்குகிறது.
மேலும் தற்போது கிரிப்டோகரன்சியில் பியூச்சர்ஸ் மற்றும் ஆப்சன்ஸ் முதலீடுகளும் வந்துள்ளது குறிப்பித்தக்கது.