பிஜேபி-க்கு கொட்டி கொடுத்த கார்ப்பரேட் நிறுவனங்கள்.. அப்போ திமுக, அதிமுக-விற்கு..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2019-20ஆம் நிதியாண்டில் மட்டும் பிஜேபி கார்பரேட் மற்றும் தனிநபர் வாயிலாகச் சுமார் 785.77 கோடி ரூபாய் அளவிலான நிதியை நன்கொடையைப் பெற்றுள்ளது என இக்கட்சி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த அறிக்கையின் வாயிலாகத் தற்போது இத்தகவல் தெரியவந்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் பிஜேபி-க்கு பல கார்பரேட் நிறுவனங்கள் தானாக முன்வந்து அதிகளவிலான தொகையை நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு கொடுத்துள்ளது என்பதை எப்போது பார்ப்போம்..

குறிப்பாகப் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களாகக் கூறப்படும் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி எவ்வளவு கொடுத்துள்ளார்கள் என்பதையும் பார்ப்போம்.

பிஜேபி கட்சி

பிஜேபி கட்சி

இந்தியாவின் முதன்மையான கட்சிகளில் ஒன்றான பிஜேபி நேரடியாக நன்கொடை வாங்குவது இல்லை, எலக்டோரல் டிரஸ்ட் நிறுவனத்தின் வாயிலாகவே தனிநபர் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெறுகிறது. இதன் படி பிஜேபி 2019-20ஆம் நிதியாண்டில் சுமார் 5 எலக்டோரல் டிரஸ்ட் மூலம் பணத்தைப் பெற்றுள்ளது.

ப்ரூடென்ட் எலக்டோரல் டிரஸ்ட்

ப்ரூடென்ட் எலக்டோரல் டிரஸ்ட்

ப்ரூடென்ட் எலக்டோரல் டிரஸ்ட் வாயிலாகப் பார்தி ஏர்டெஸ், டிஎல்எப், ஜிஎம்ஆர் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் போன்ற பல முன்னணி கார்ப்பேரட் நிறுவனங்கள் இணைந்து சுமார் 217.75 கோடி ரூபாய் அளவிலான நிதியை நன்கொடையாகக் கொடுத்துள்ளனர். இந்த நிறுவனங்களைத் தொடர்ந்து ஐடிசி, ஹால்திராம் ஸ்னாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலும் நன்கொடை கொடுத்துள்ளது.

ஜன்கல்யான் எலக்டோரல் டிரஸ்ட்

ஜன்கல்யான் எலக்டோரல் டிரஸ்ட்

இதைத் தொடர்ந்து ஜன்கல்யான் எலக்டோரல் டிரஸ்ட் வாயிலாக JSW சிமெண்ட், JSW எனர்ஜி, JSW எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் மற்றும் இதர பிற நிறுவனங்கள் இணைந்து சுமார் 45.95 கோடி ரூபாய் அளவிலான நிதியை நன்கொடையாக அளித்துள்ளது. இதேபோன்று ஏபி எலக்டோரல் டிரஸ்ட் வாயிலாக 9 கோடி ரூபாயும், சமாஜ் எலக்டோரல் டிரஸ்ட் வாயிலாக 3.75 கோடியும் நன்கொடை அளித்துள்ளது.

ரிலையன்ஸ், அதானி பெயர்

ரிலையன்ஸ், அதானி பெயர்

பிஜேபி அளித்துள்ள நன்கொடை பட்டியலில் ரிலையன்ஸ், அதானி குழுமம், முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோரின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக 20000 ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை அளிக்கப்பட்டால் மட்டுமே கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும் என்பது விதி என்பதால் தேர்தல் ஆணையத்திடம் இதற்கான கணக்கீடு மட்டுமே வந்துள்ளது.

காங்கிரஸ் நன்கொடை

காங்கிரஸ் நன்கொடை


இதற்கிடையில் 2019-20ஆம் நிதியாண்டில் நாட்டின் 2வது பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் இக்காலகட்டத்தில் வெறும் 139.01 கோடி ரூபாய் அளவிலான நன்கொடை வந்துள்ளதாகத் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் பெற்ற தொகையை விடவும் கிட்டதட்ட 5 மடங்கு தொகையைப் பிஜேபி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

மேலும் மேற்கு வங்காளத்தின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 8.08 கோடி ரூபாயும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 19.69 கோடி ரூபாயும், என்சிபி கட்சி 59.64 கோடி ரூபாய் அளவிலான நன்கொடையும் பெற்றுள்ளது.

டாப் 5 கட்சிகள்

டாப் 5 கட்சிகள்

இந்தியாவின் டாப் 5 கட்சிகளான பிஜேபி, காங்கிரஸ், என்சிபி, சிபிஎம் மற்றும் டிஎம்சி ஆகியவை 2018-19ஆம் நிதியாண்டில் 876.1 கோடி ரூபாய் அளவிலான நன்கொடை மட்டுமே பெற்ற நிலையில் 2019-20ஆம் நிதியாண்டில் கூடுதலான நிதியை நன்கொடையாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எலக்டோரல் டிரஸ்ட் என்றால் என்ன..?

எலக்டோரல் டிரஸ்ட் என்றால் என்ன..?


எல்லாம் சரி, அது என்ன எலக்டோரல் டிரஸ்ட்..?

எலக்டோரல் டிரஸ்ட் என்பது லாபமற்ற நிறுவனங்களாகும், இவை அரசியல் கட்சிகளுக்கு நிதி திரட்டி விநியோகம் செய்யும் ஒரு அமைப்பாக விளங்குகிறது. 2013ஆம் ஆண்டுக் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது எலக்டோரல் டிரஸ்ட் திட்டத்தை, 1956 நிறுவன சட்டம் பிரிவு 25 கீழ் அமலாக்கம் செய்யப்பட்டது.

பிறமுக்கிய அரசியல் கட்சிகள்

பிறமுக்கிய அரசியல் கட்சிகள்

தெலுங்கான ராஷ்டிர சமதி - 130.46 கோடி ரூபாய்
ஷிவ் சேனா - 111.4 கோடி ரூபாய்
YSR காங்கிரஸ் கட்சி - 92.7 கோடி ரூபாய்
பிஜூ ஜனதா தல் - 90.35 கோடி ரூபாய்
அதிமுக - 89.6 கோடி ரூபாய்
திமுக - 64.90 கோடி ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BJP received five times of Congress donations in FY20: Check DMK, ADMK Donations

BJP received five times of Congress donations in FY20: Check DMK, ADMK Donations
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X