அட இனி இவங்க காட்டில் மழைதான் போங்க.. வோகோ, பவுன்ஸ். யூலுவுக்கு லக்கு தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளது.

 

ஒரு வேளை லாக்டவுனில் இருந்து இதற்குப் சற்று தளர்வு அளிக்கப்பட்டாலும் கூட, இனி பொது போக்குவரத்துகள் முன்பு போல பயன்படுத்தப்படுமா? செயல்படுமா? என்பதும் சந்தேகம் தான்.

ஏனெனில் கொரோனாவின் தாக்கம் பரவாமல் இருக்க, நாம் முக்கியாக கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயம் சமூக இடைவெளி தான்.

பொது போக்குவரத்து பாதிக்கப்படலாம்

பொது போக்குவரத்து பாதிக்கப்படலாம்

ஆனால் பொதுப்போக்குவரத்து என்று செல்லும்போது அது எந்தளவுக்கு சாத்தியமான ஒரு விஷயம் என்று தெரியவில்லை. ஆக வரும் காலத்தில் லாக்டவுன் நீக்கப்பட்டாலும் கூட, மக்கள் அதனை விரும்பாமல் சொந்த வாகனங்களில் செல்ல விரும்பலாம் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள். இதே வசதி இருப்பவர்கள் வாகனங்களை வாங்கிக் கொள்ளலாம். இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

அதற்கும் ஒரு வழி உள்ளது. அது வாகன வாடகை சேவை தான். அதன் மூலம் நாம் வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, நாமே செல்ஃப் டிரைவும் செய்து கொள்ளலாம். ஆக இது போன்ற சேவையினை, இரு சக்கர வாகனம் மூலம் அளித்து வரும் பவுன்ஸ், வோகோ மற்றும் யூலு போன்ற நிறுவனங்களுக்கு இனி வரும் காலத்தில், நல்ல வாய்ப்புகள் உள்ளது எனலாம்.

வாடிக்கையாளர்களை கவர திட்டங்கள்
 

வாடிக்கையாளர்களை கவர திட்டங்கள்

ஏனெனில் கால் டாக்ஸியை புக் செய்ய முடியாதவர்கள், பொது போக்குவரத்தினையும் விரும்பாதவர்கள் இதுபோன்ற சேவையினை நாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் இந்த நிறுவனங்கள் இன்னும், ஒரு படி மேலே போய் நீண்டகாலத்திற்கு வாடகை வாகன திட்டத்தினையும் செய்துள்ளது. ஆக இது இனி வரும் காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஜிஎஸ்டியை குறைக்க பரிந்துரை

ஜிஎஸ்டியை குறைக்க பரிந்துரை

இதற்கிடையில் நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், பல சம்பள குறைப்பு, பணி நீக்கம் என உள்ள நிலையில், அரசு தரப்பில் இருந்து ஜிஎஸ்டி வரி விகிதத்தினை 28 சதவீதத்தில் இருந்து, 0 சதவீதமாக குறைக்கவும் இத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

வாடகை வாகன சேவை அதிகரிக்கலாம்

வாடகை வாகன சேவை அதிகரிக்கலாம்

ஆக கொரோனா லாக்டவுனுக்கு பின்பு, இந்த வாடகை வாகன சேவையானது அதிகரிக்கலாம். மக்கள் கையில் பணப்புழக்கம் என்பது மிகக் குறைவாக இருந்தாலும், பாதுக்காப்பும் முக்கியம் என்பதால் நிச்சயம், இதன் வளர்ச்சி வரும் காலத்தில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bounce, vogo and yulu startups expect to ride high in coming days

Self drive scooter businesses like bounce, vogo and yulu expect to ride high in coming weeks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X