#BoycottChineseProduct எதிரொலி! ரத்து செய்து பின் வாங்கிய சீனாவின் Oppo!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா என்கிற நாட்டுக்குள், மாநிலம், மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என எது வேண்டுமானாலும் மாறுபட்டு இருக்கலாம்.

ஆனால் இந்தியர்கள் என்கிற உணர்வில் எப்போதும், எல்லோரும் ஒன்றாகத் தான் இருக்கிறோம் என்பதற்கு இப்போது ஒன்று பட்டு, இந்திய ராணுவ வீரர்களின் வீர மரணத்துக்கு கேள்வி கேட்கும் இந்தியர்களே சான்று.

இந்திய ராணுவ வீரர்களின் வீர மரணத்துக்கு, சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரலும் வலுவாக எழுந்து கொண்டு இருக்கிறது.

மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

விரைவில் தரமற்ற & விலை மலிவான பொருட்களை சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது தடுக்கப்படும். அதற்கான சட்டம் விரைவில் வரும் என, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் சொல்லி இருக்கிறார். அதோடு சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்.

ஓப்போ பிரச்சனை

ஓப்போ பிரச்சனை

இப்படி சீன பொருட்கள் புறக்கணிப்புக்கு மக்கள் மத்தியில் அதிகம் ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்க, சீன நிறுவனமான ஒப்போவோ தன் புதிய ஸ்மார்ட்ஃபோன் லைவ் லாஞ்ச் திட்டத்தையே கைவிட்டு இருக்கிறது. ஓப்போ நிறுவனம் தன் புதிய Find X2 ரக ஸ்மார்ட்ஃபோனை நேற்று 17 ஜூன் 2020 மாலை 4 மணிக்கு live unveiling செய்ய இருந்தது.

பின் வாங்கிவிட்டது

பின் வாங்கிவிட்டது

ஆனால் திட்டமிட்ட படி, ஓப்போ தன் live unveiling நிகழ்ச்சியைச் செய்ய வில்லை. அதற்கு மாறாக ஒரு 20 நிமிட வீடியோவை அப்லோட் செய்து இருக்கிறதாம். அதில், ஓப்பொ நிறுவனம், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், இந்திய அதிகாரிகளுக்கு எப்படி உதவியது என்பதையும் உள்ளே சேர்த்துச் சொல்லி இருக்கிறார்களாம்.

லைவ் மிண்ட் பத்திரிகை

லைவ் மிண்ட் பத்திரிகை

இந்தியாவின் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததில் இருந்து சீன பொருட்களைத் புறக்கணிப்பது தொடர்பான செய்திகள் நிறைய சமூக வலைதளங்களில் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஒப்போ தேவை இல்லாமல் எதையாவது செய்து, அது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டுவிடுவோ என்கிற அச்சத்தில் live unveiling நிகழ்ச்சியை ரத்து செய்து இருப்பதாக விஷயம் தெரிந்த ஒருவர் லைவ் மிண்ட் பத்திரிகைக்குச் சொல்லி இருக்கிறார்.

சீன ஸ்மார்ட்ஃபோன்கள்

சீன ஸ்மார்ட்ஃபோன்கள்

இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் சந்தையில், ஓப்போ போன்ற சீன நிறுவனங்களுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது. ஓப்போ, விவோ, ரியல் மீ ஒன் ப்ளஸ், சியாமி என பல ஸ்மார்ட்ஃபோன் பிராண்டுகள் இந்தியாவில் ஆழமாக சந்தையைப் பிடித்து இருக்கிறார்கள். இந்தியாவில் விற்பனை ஆகும் 10 ஸ்மார்ட்ஃபோன்களில் 8 ஸ்மார்ட்ஃபோன்கள் சீன நிறுவனத்துக்குச் சொந்தமானவை என்பதும் இங்கு அழுத்தமாக குறிப்பிட வேண்டி இருக்கிறது.

வாய் பேச்சு அல்ல

வாய் பேச்சு அல்ல

இந்த சீன பொருட்களை கைவிடுதல், புறக்கணித்தல் வெறுமனே வாய்ப் பேச்சாக இருந்து இருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்தியாவின் வர்த்தகர்கள் சம்மேளனம் (Confederation of All India Traders CAIT) முன் வந்து சீன பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்து இருக்கிறது என்பது தான் இதில் எல்லா சீன நிறுவனங்களும் கவனிக்க வேண்டிய விஷயம்.

ஆத்ம நிர்பார்

ஆத்ம நிர்பார்

எனவே சீன பொருட்களை கைவிடுவது மற்றும் புறக்கணிப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. உண்மையாகவே ஆத்ம நிர்பார் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு, சீனாவின் இறக்குமதியை கணிசமாகக் குறைத்தால் நிச்சயம் மகிழ்ச்சி தான். அதோடு பொருளாதாரமும் வளரும், வேலை வாய்ப்பு பிரச்சனைகளை தீரும். இந்தியா, சீன பொருட்களை வெற்றிகரமாக புறக்கணித்து, சுய சார்பு நாடாக மாறும் என நம்புவோம்.

சீரியஸ் ஆகும் பிரச்சனை

சீரியஸ் ஆகும் பிரச்சனை

மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சி தான் இந்த ஒப்போ Find X2 லைவ். இந்த நிகழ்ச்சியையே, இந்தியா சீனா மோதல் பிரச்சனையாலும், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்கிற செண்டிமெண்ட் அதிகரிப்பதனாலும் ஒத்திப் போடுகிறார்கள் என்றால் பிரச்சனையில் ஆழத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆக இந்தியா சீனாவுக்கு இடையிலான பிரச்சனைவின் வீரியம் அதிகரித்துக் கொண்டிருப்பதின் ஒரு வெளிப்பாடாகத் தான் ஒப்போ நிகழ்ச்சி ரத்தை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Boycott Chinese product sentiment reflected in oppo find x2 live unveiling event

Indian China border face off problem is worsening more and more. The oppo find x2 live unveiling launch program had cancelled due to fear on boycotting Chinese products sentiment.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X