ஹூண்டாய், கியா-வை எதிர்க்கும் இந்திய மக்கள்.. டிவிட்டரில் டிரென்டிங்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காஷ்மீர் ஒற்றுமை தினம் குறித்துக் கியா மற்றும் ஹூண்டாய் கார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பாகிஸ்தான் ஹேண்டிலில் இருந்து ட்வீட் செய்ததை அடுத்து, 'பாய்காட் ஹூண்டாய்' பாய்காட் கியாமோட்டார்ஸ்' ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இது மட்டும் அல்லாமல் இந்தியாவில் ஹூண்டாய் மற்றும் கியா கார்களை இனி யாரும் வாங்க கூடாது என்றும், பலர் புக்கிங் செய்யப்பட்ட ஹூண்டாய் மற்றும் கியா கார்களைக் கேன்சல் செய்தும், இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மற்றும் மஹிந்திரா-வை ஆதரிக்க வேண்டும் என டிவிட்டரில் கருத்து நிலவுகிறது.

சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு தொடர் சரிவுக்கு இதுதான் காரணம்..!சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு தொடர் சரிவுக்கு இதுதான் காரணம்..!

காஷ்மீர் ஒற்றுமை தினம்

காஷ்மீர் ஒற்றுமை தினம்

காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 5, ஹூண்டாய் பாகிஸ்தான் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில், "நம்முடைய காஷ்மீரி சகோதரர்களின் தியாகங்களை நினைவு கூர்வோம், அவர்கள் சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து போராடி வருவதற்கு ஆதரவாக நிற்போம்." எனத் தெரிவிக்கப்பட்டது.

கியா மோட்டார்ஸ்

கியா மோட்டார்ஸ்

இதேபோல் கியா மோட்டார்ஸ்-ன் கிராஸ்ரோடு என்னும் கணக்கில் இருந்து காஷ்மீர் விடுதலைக்காக இணைந்து நிற்போம் என டிவீட் செய்யப்பட்டது, இந்த டிவீட்டில் கியா மோட்டார்ஸ் முகவரியும் பதிவிடப்பட்டு உள்ளது. இந்த இரண்டு டிவீட்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை பெற்றுள்ளது.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இதன் எதிரொலியாக டிவிட்டரில் கடந்த இரண்டு நாட்களாக BoycottHyundai BoycottKiaMotors ஆகிய இரு ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வருகிறது. மேலும் பலர் இனி ஹூண்டாய் மற்றும் கியா கார்களை வாங்கப்போவது இல்லை என வெளிப்படையாகவே ஹூண்டாய் மற்றும் கியா பேஜ்களை டேக் செய்து பதிவிட்டு உள்ளனர்.

மன்னிப்பும் விளக்கமும்

மன்னிப்பும் விளக்கமும்

இதைத் தொடர்ந்து பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த ஹூண்டாய் இந்தியா நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் மன்னிப்பும் விளக்கமும் கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், டிவிட்டர் வாசிகள் இதைச் சும்மா விடுவது இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

'Boycott Hyundai, BoycottKiaMotors' Still Trending on twitter Apology is not enought to Indians

Boycott Hyundai, BoycottKiaMotors' Still Trending on twitter Apology is not enought to Indians ஹூண்டாய், கியா-வை எதிர்க்கும் இந்திய மக்கள்.. டிவிட்டரில் டிரென்டிங்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X