இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் பிரிட்டன் பிரதமருமான ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவியும், இன்போசிஸ் நாராயண மூர்த்தி-யின் ஓரே மகளான அக்ஷதா மூர்த்தி-யும் பிரிட்டன் நாட்டின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் முறையாக நுழைந்துள்ளனர்.
ஹிந்துஜா குடும்பம் இப்பட்டியில் தொடர்ந்து முதலிடம் வகித்து வரும் நிலையில், முதல் முறையாக இப்பட்டியலில் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி ஆகியோர் நுழைந்துள்ளார்.

ஆசிய பணக்காரர்கள் பட்டியல்
பிரிட்டன் நாட்டின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் டாப் 20 பேரில் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்திச் சுமார் 790 மில்லியன் பவுண்டு அதாவது 7800 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 17வது இடத்தைப் பெற்றுள்ளனர்.

ஹிந்துஜா குடும்பம்
இப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ஹிந்துஜா குடும்பம் 8வது முறையாக முதல் இடத்தில் இருப்பது மட்டும் அல்லாமல் இந்த ஆண்டு 30.5 பில்லியன் பவுண்டு அதாவது 3 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்த வருடம் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

113.2 பில்லியன் பவுண்டு
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஹிந்துஜா குடும்பத்தின் சொத்து மதிப்பு 3 பில்லியன் பவுண்டு அதிகமாகும். 20 பேர் கொண்ட பிரிட்டன் நாட்டின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலின் மொத்த சொத்து மதிப்பு 113.2 பில்லியன் பவுண்டு ஆகும்.
இந்திய ரூபாய் மதிப்பின் படி கிட்டதட்ட 11 லட்சம் கோடி ரூபாய், இப்பட்டியலின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 13.5 பில்லியன் பவுண்டு அதிகரித்துள்ளது.

சிய வர்த்தக விருதுகள்
பிரிட்டன் நாட்டின் ஆசிய பணக்காரர்கள் பட்டியல் 2022 அறிக்கையை Westminster Park Plaza ஹோட்டலில் நடைபெற்ற ஆசிய வர்த்தக விருதுகள் நிகழ்ச்சியின் போது லண்டன் மேயர் சாதிக் கான் ஹிந்துஜா குரூப் தலைவர் கோபிசந்த் ஹிந்துஜா-வின் ரிது சாப்ரியா-விடம் அளிக்கப்பட்டது.

இந்தியர்கள்
இந்த விழாவில் அரசியல் தலைவர்கள் மட்டும் அல்லாமல் பல நிறுவன தலைவர்கள், பிரதிநிதிகளும் கலந்துகொண்டு ஆசிய மக்களின் முக்கியத்துவம், அந்நாட்டின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு ஆகியவற்றைக் குறித்துப் பாராட்டப்பட்டனர்.

ரிஷி சுனக்
பிரிட்டன் நாட்டின் கடந்த 210 ஆண்டு வரலாற்றில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தான் இளம் பிரிட்டன் பிரதமர் ஆவார். 42 வயதான ரிஷி சுனக் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் பிரிவில் பணியாற்றிப் பின்னர் அரசியலுக்கு வந்து குறுகிய காலகட்டத்திலேயே நிதியமைச்சராகித் தற்போது பிரதமராகி அசத்தியுள்ளார்.

16 பேர்
இங்கிலாந்தின் ஆசிய பணக்காரர்கள் பட்டியல் 2022 இல் பிரிட்டனில் இருந்து 16 பில்லியனர்கள் உள்ளனர், இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை விட ஒன்று அதிகம்.

ஸ்ரீ பிரகாஷ் லோஹியா மற்றும் குடும்பம்
ஸ்ரீ பிரகாஷ் லோஹியா மற்றும் குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 4 பில்லியன் பவுண்டுகள் உயர்ந்து நிகரச் சொத்து மதிப்பு 8.8 பில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இப்பட்டியலில் அதிகப்படியான செல்வ வளர்ச்சியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.

மற்றவர்கள்
இந்தப் பட்டியலில் லட்சுமி மிட்டல் மற்றும் அவரது மகன் ஆதித்யா 12.8 பில்லியன் பவுண்டுகள் உடனும், பிரகாஷ் லோஹியா மற்றும் குடும்பம் 8.8 பில்லியன் பவுண்டுகள் உடனும், நிர்மல் சேத்தியா 6.5 பில்லியன் பவுண்டுகள் உடனும் இடம்பெற்றுள்ளனர்.