அடடே இது நல்ல விஷயமாச்சே.. பிஎஸ்இ கொடுத்த சூப்பர் அப்டேட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்கு சந்தைக்கு (BSE) SSE என்ற தனி பிரிவிற்காக செபி அனுமதி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த தனி பிரிவானது சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (Social Stock Exchange) என்று கூறப்படுகின்றது.

இது குறித்து பி எஸ் இ தனது அறிக்கையில் சமூக நிறுவனங்களுக்காக, லாப நோக்கமற்ற நிறுவனங்களுக்காகவும் (non-profit organizations), லாப நோக்கற்ற சமூக நிறுவனங்கள் நிதியினை திரட்ட கூடிய அமைப்புகளும், இதில் அடங்கும் என தெரிவித்துள்ளது.

நஷ்டத்தில் இருந்து லாபத்திற்கு திரும்பிய BSE.. ரூ.32.57 கோடி லாபம்.. டிவிடெண்டும் பரிந்துரை..! நஷ்டத்தில் இருந்து லாபத்திற்கு திரும்பிய BSE.. ரூ.32.57 கோடி லாபம்.. டிவிடெண்டும் பரிந்துரை..!

 என்னவெல்லாம் இதில் அடங்கும்

என்னவெல்லாம் இதில் அடங்கும்

கடந்த 2019 - 20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்த யோசனையினை வழங்கினார் என பிடிஐ தெரிவித்துள்ளது.

எனினும் சமூக நிறுவனங்கள் என அடையாளம் காணப்படாத நிறுவனங்கள் என பல அமைப்புகள் உள்ளன. இவற்றில் கார்ப்பரேட் நிறுவனங்களின் அறக்கட்டளைகள்., அரசியல் அமைப்புகள், மத அமைப்புகள் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் உள்ளிட்ட பலவும் அடங்கும்.

பயன் என்ன?

பயன் என்ன?

பி எஸ் இ-யின் இந்த அறிவிப்பினால் சமூக அக்கறை காட்டும் லாப நோக்கமற்ற நிறுவனங்களை எளிதில் அடையாளம் காண முடியும். இது முதலீட்டாளர்களுக்கு மேற்கொண்டு உதவிகரமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த நிறுவனங்கள்
 

எந்தெந்த நிறுவனங்கள்

எனினும் இந்த பிரிவில் எந்தெந்த நிறுவனங்கள் பட்டியலிடப்படும், எத்தனை சமூக நலன் சார்ந்த நிறுவனங்கள் உள்ளன என்பது குறித்தான விவரங்களும் வெளியாகவில்லை.

இதுபோன்ற நிறுவனங்கள் SSE-யின் கீழ் வகைப்படுத்தப்படும்போது, அதனை எளிதில் கண்டறிய உதவும். இது நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வந்த பிறகே இது குறித்து முழுமையான விஷயங்கள் முழுவதும் தெரியவரும்.

மற்றொரு அறிவிப்பு

மற்றொரு அறிவிப்பு

முன்னதாக ஒரு அறிவிப்பில், புதிய செபி விதிமுறைகளின் படி, தரகு நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் தங்களது டீமேட் கணக்கில் பயன்படுத்தாத தொகையை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு, ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அல்லது ஒவ்வொரு காலாண்டின் முதல் வெள்ளிக்கிழமையன்று திரும்ப செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE gets nod for SSE as a separate segment: check details

bombay Stock Exchange (BSE) has been given approval by Sebi for a separate segment called SSE.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X