மீண்டும் போராட்ட களத்தில் குதிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.. என்ன ஆச்சு.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிஎஸ்என்எல் மறுமலர்ச்சி தொடர்பான அமைச்சரவை முடிவுகளை விரைவாக அமல்படுத்துவதற்காக, பிஎஸ்என்எல்லின் அனைத்து தொழிற்சங்கங்களும் பிப்ரவரி 24 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இந்த வேலை நிறுத்தமானது ஊழியர்களின் குறைகளை விரைவில் தீர்க்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல வகையில் முயற்சி எடுத்து வருகிறது.

மறுமலர்ச்சி திட்டம்

மறுமலர்ச்சி திட்டம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைத்ததோடு, இந்த திட்டத்தினை மறுசீரமைக்கும் பொருட்டு மறுமலர்ச்சிக்காக 69,000 கோடி ரூபாய் நிதி கொடுப்பதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டது. இதில் இரு நிறுவனங்களையும் இணைத்தல், அவர்களின் சொத்துகளை பணமாக்குதல், ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்குதல் உள்ளிட்டவை இந்த மறுமலர்ச்சி திட்டத்தில் அடங்கும்.

கைகொடுத்த விஆர்எஸ்

கைகொடுத்த விஆர்எஸ்

மேற்கூறிய இந்த மறுமலர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிறுவனத்தின் விஆர்எஸ் திட்டம் வெற்றிகரமாக இதற்காக நன்கு கைகொடுத்தது என்றே கூறலாம். ஏனெனில் கடந்த மாதம் 78,569 ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் வீட்டுக்கு அனுப்பட்டனர். ஆனால் மறுபுறம் மற்ற மறுமலர்ச்சி திட்டங்கள் எதுவும் இதுவரை செயல்படுத்தவில்லை. இதற்கான நடவடிக்கைகள் மிக மெதுவாக நடந்து வருவதாகவும் ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

4ஜி சேவை
 

4ஜி சேவை

மேலும் இந்த திட்டத்துக்கு தேவையான நிதி மற்றும் தனியார் நிறுவனங்கள் கூட 4ஜி சேவை வழங்கி வரும் நிலையில், அரசு பொதுத்துறையை சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜிக்கு சேவைக்கு மாறவில்லை என்பது இதன் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆக 4ஜி சேவைக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டது இதுவரை கிடைக்கவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை என்பது போன்ற பல திட்டங்களை செயல்படுத்த இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சொத்து விற்பனை

சொத்து விற்பனை

இந்த நிறுவனத்தினை மேம்படுத்தவும், சீரமைக்கும் பொருட்டும் நிதி திரட்டவும், அதன் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல்லின் 14 மிகப்பெரிய சொத்துக்கள் பட்டியல் ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு தொகுத்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகையை இந்த நிறுவனத்தின் சீரமைப்பு முதலீட்டுக்காக முதலீடு செய்ய முடியும் என்றும், இந்த நிறுவனம் சொத்து விற்பனை என்னும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.

கடன் பத்திரம் மூலம் நிதி திரட்ட முடிவு

கடன் பத்திரம் மூலம் நிதி திரட்ட முடிவு

மேலும் இந்த நிறுவனத்தினை மறுசீரமைக்கும் பொருட்டு சொத்துக்களை விற்க தீவிரமாக நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், நீண்டகால கடன் பத்திரங்கள் மூலம் 15,000 கோடி ரூபாய் நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான முயற்சிகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

4ஜி அலைவரிசை

4ஜி அலைவரிசை

மற்ற தனியார் நிறுவனங்கள் 5ஜி அலை வரிசை பரிசோதனை ரீதியாக அறிமுகம் செய்ய உள்ள நிலையில், நீண்ட போராட்டத்துக்கு பிறகு தற்போது தான் அந்த நிறுவனத்துக்கு 4ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனினும் 4ஜி சேவை வந்தாலும் கூட இந்த நிறுவனம் மற்ற தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதற்கான முயற்சிகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்றும் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL employees plans to strike on Monday

Last year cabinet approved Rs.69,000 crore revival package for both BSNL and MTNL, including 4G, issuing sovereign guarantee for fund raising Rs.15,000 cr, long term bonds, monetisation of assets, but still not any implemented any of this. So AUAB decided to organise a countrywide strike on Feb 24.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X