BSNL: 2024ல் 5ஜி சேவை உறுதி.. டிசிஎஸ், C-DOT கூட்டணி.. அஷ்வினி வைஷ்னாவ் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் சேவை நிறுவனமான BSNL 2024 ஆம் ஆண்டில் தனது சொந்த 5G டெலிகாம் சேவையை மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

BSNL நிர்வாகம் ஏற்கனவே TCS மற்றும் C-DOT ஆகிய இரு நிறுவனங்களை 4G நெட்வொர்க்கை உருவாக்குவதற்கான தேர்வு செய்த மிகப்பெரிய முதலீட்டில் இத்திட்டம் நடந்து வருகிறது. இத்திட்டத்தை அப்படியோ ஒரு வருடத்தில் 5G க்கு மேம்படுத்தப்படும் என அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்துள்ளார்.

இந்திய டெலிகாம் சந்தையில் அனைத்து தனியார் நிறுவனங்களும் 4ஜி சேவையைப் பல வருடங்களுக்கு முன்பே அறிமுகம் செய்த நிலையில், 5ஜி சேவையைத் தற்போது வேகமாக அறிமுகம் செய்து வருகிறது.

5G முதல் அரிசு மாவு வரை.. 3 புதிய வர்த்தகம்.. ரிலையன்ஸ் மாஸ்டர் பிளான்..! 5G முதல் அரிசு மாவு வரை.. 3 புதிய வர்த்தகம்.. ரிலையன்ஸ் மாஸ்டர் பிளான்..!

அஷ்வினி வைஷ்ணவ்

அஷ்வினி வைஷ்ணவ்

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 5ஜி அறிமுகம் செய்த பின்னர்ச் செய்தியாளர்களிடம் பேசிய அஷ்வினி வைஷ்னாவ் BSNL 2024 ஆம் ஆண்டில் தனது சொந்த 5G டெலிகாம் சேவையை மக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.

ஒடிசா

ஒடிசா

ஒடிசாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அஷ்வினி வைஷ்ணவ் உடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணைந்து இந்தச் சேவையைத் தொடங்கி வைத்தார்.

புவனேஸ்வர் மற்றும் கட்டாக்

புவனேஸ்வர் மற்றும் கட்டாக்


மேலும் அஷ்வினி வைஷ்ணவ் இக்கூட்டத்தில் ஒடிசா முழுவதும் 2 ஆண்டுகளில் 5ஜி சேவை வழங்கப்படும். இன்று புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தொலைத்தொடர்பு அமைச்சர் கூறினார்.

5,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு

5,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஜனவரி 26ஆம் தேதிக்கு முன் ஒடிசா மாநிலத்தில் 5ஜி சேவை மக்களின் பயன்பாட்டு வரும் என உறுதியளித்த அஷ்வினி வைஷ்ணவ், ஒடிசா மாநிலத்தில் தொலைத்தொடர்பு இணைப்பை வலுப்படுத்த மத்திய அரசு 5,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது எனவும் குறிப்பிட்டார். ஒடிசாவில் 100 கிராமங்களை உள்ளடக்கிய 4ஜி சேவைக்கான 100 டவர்கள் இன்று பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டுள்ளன.

 மொபைல் காங்கிரஸ்

மொபைல் காங்கிரஸ்

BSNL நிறுவனம் 2022 இந்தியன் மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் 2023, ஆகஸ்ட் 15க்குள் 5ஜி சேவை அறிமுகம் செய்யும் என அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் தற்போது இதை 2024 ஆம் ஆண்டு எனத் திருத்தி அறிவித்துள்ளார்.

BSNL நிறுவனம்

BSNL நிறுவனம்

BSNL நிறுவனம் இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்ய நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.16000 கோடி ரூபாய் மதிப்பிலான இக்கூட்டணி திட்டத்தில் டாடா குழுமம் இந்தியாவில் முதல் முறையாகச் சொந்தமாக டெலிகாம் நெட்வொர்க் சொல்யூஷன்களை வழங்க உள்ளது.

டிசிஎஸ் முயற்சி

டிசிஎஸ் முயற்சி


இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்ய டிசிஎஸ் மற்றும் அரசு அமைப்பான C-DOT உடன் இணைந்து 4ஜி தொழில்நுட்பத்தையும், டிசிஎஸ் - அரசு அமைப்பான ITI உடன் இணைந்து 4ஜி நெட்வொர்க்கிற்குத் தேவையான டெலிகாம் கருவிகளைத் தயாரிக்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL will launch 5G services by 2024; TCS, C-DOT consortium rollout 4G soon then upgrade to 5G

BSNL will launch 5G services by 2024; TCS, C-DOT consortium rollout 4G soon then upgrade to 5G
Story first published: Thursday, January 5, 2023, 20:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X