பட்ஜெட் 2020: வருமான வரியில் கண்டிப்பாக மாற்றம் வருகிறது.. ஆனால் கொஞ்சம் வேற மாதிரி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரி விகிதங்களில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அது எந்த மாதிரியான விகிதத்தில் இருக்கும் என்பது தொடர்பாகவும் இப்போது, சில செய்திகள் கசிந்துள்ளன. அது என்ன என்று பார்க்கலாம்.

ரூ .7 லட்சம் வரை வருமானம் கொண்டோருக்கு, 5% மட்டும் வருமான வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரம் ரூ .7 லட்சம் முதல் ரூ .10 லட்சம் வரை வருமானம் இருக்கலாம் 10% வரி விதிக்கப்பட்டலாம்.

ஜனவரி 27 முதல் மும்பை தூங்கா நகரம்.. லண்டன் தான் டார்கெட்..!ஜனவரி 27 முதல் மும்பை தூங்கா நகரம்.. லண்டன் தான் டார்கெட்..!

வருமான வரி

வருமான வரி

2019 பிப்ரவரியில் மோடி அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், ஆண்டு வருமானம் ரூ .5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், வருமான வரி கிடையாது என அறிவிக்கப்பட்டது. ரூ .10 லட்சம் முதல் ரூ .20 லட்சம் வரை வருமானத்திற்கு 20% வரி, ரூ .20 லட்சம் முதல் ரூ .10 கோடி வரை 30% வரி என அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாம். ஆண்டுக்கு ரூ .10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 35% புதிய ஸ்லாப் அறிவிக்கப்படும் வாய்ப்பை மறுக்க முடியாது.

கார்ப்பரேட் வரி

கார்ப்பரேட் வரி

ரூ .1.45 லட்சம் கோடி மதிப்புக்கான கார்ப்பரேட் வரி குறைப்பை நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்திருந்தார். பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டு வளர்ச்சியைத் தூண்டுவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இப்படி வரி குறைக்கப்படடது. ஆனால் அதில் பெரிய பலன் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, 10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு தனி நபர் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என ஒரு தகவல் வெளியானது. ஆனால் இப்போது ரூ.7 லட்சம் வரையிலான வருவாய்க்கு 5 சதவீதம் வரி என திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மெதுவான வளர்ச்சி
 

மெதுவான வளர்ச்சி

இந்திய பொருளாதாரம் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில், 4.5% ஆக இருந்தது. இது ஆறு ஆண்டுகளில் மிக மெதுவான வளர்ச்சியாகும். வளர்ச்சியை ஏறுமுகமாக்க, கடந்த நான்கு மாதங்களாக பல நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்திருந்தாலும், இன்னும் அவை, விரும்பிய முடிவுகளைத் தரவில்லை. செப்டம்பர் மாதத்தில், நிதி அமைச்சகம் புதிய மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதத்தை குறைத்து, மந்தநிலைக்கு மத்தியில் வணிகர்களை அதிக முதலீடு செய்ய ஊக்குவித்தது.

பண இருப்பு

பண இருப்பு

எந்தவொரு வரி ஊக்கத்தொகையும் பெறாத நிறுவனங்களுக்கு, வரி விகிதம் முந்தைய 30% இலிருந்து 22% ஆக குறைக்கப்பட்டது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலித்த பின்னர் கார்ப்பரேட் வரி விகிதம் 25.17% ஆக இருக்கும், இதில் செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் உள்ளடங்கும்.
தனிநபர் வருமான வரிகளை தளர்த்தினால், அரசுக்கு அது கூடுதல் அழுத்தம் கொடுக்கும். ஆனால், பொதுமக்களின் கையில் பண இருப்பு அதிகரித்து, அது நுகர்வை கூட்டும். மத்திய அரசு, அதன் வருடாந்திர நிதி பற்றாக்குறை இலக்கை 102.4% ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2020: 5% income tax for earning up to Rs 7 lakh

The government is mulling extending relief to tax payers by planning to change slabs on personal income, with 5% tax proposed to be levied on income up to Rs 7 lakh per year, while income between Rs 7 lakh and up to Rs 10 lakhs may be taxed at 10%.
Story first published: Thursday, January 23, 2020, 10:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X