பட்ஜெட் 2020: A - Z..பட்ஜெட் ஹைலைட்கள் பாகம் -1

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைத்து தரப்பு மக்களும் அதிக ஆவலுடன் எதிர்பார்த்த 2020 - 21 பட்ஜெட்டை நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சிறப்பாக தாக்கல் செய்து இருக்கிறார்.

கிட்டத் தட்ட, பட்ஜெட் தாக்கல் செய்த வரலாற்றிலேயே அதிக நேரம் பேசிய பட்ஜெட் உரை என்கிற சாதனையையும் நம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் படைத்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தொடர்ந்து 2 மணி நேரம் 41 நிமிடங்களுக்கு பேசி பட்ஜெட்டின் ஹைலைட்களைத் தான் வரி விடாமல் சாராகப் பிழிந்து உங்களுக்கு கொடுத்து இருக்கிறோம். அடுத்தடுத்த பாகம் 2,3, என நிதி அமைச்சரின் மொத்த பட்ஜெட்டையும் உங்களுக்கு கொடுக்கிறோம்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

கடந்த இரண்டு ஆண்டில் 60 லட்சம் ஜிஎஸ்டி வரி தாரர்கள் ஜிஏஸ்டியில் சேர்ந்து இருக்கிறார்கள். மொத்தம் 40 கோடி ஜிஎஸ்டி வரிப் படிவங்கள் மற்றும் 800 கோடி இன்வாய்ஸ்கள், 105 கோடி இ-வே பில்கள் வந்திருக்கின்றன. ஏப்ரல் 01, 2020 முதல், புதிய எளிய ஜிஎஸ்டி வரிப் படிவங்கள் அறிமுகப்படுத்த இருக்கிறார்களாம்.

வளர்ச்சி

வளர்ச்சி

தற்போது இந்தியா, உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. கடந்த 1950களில் இந்தியவின் பொருலாதார வளர்ச்சி 4 சதவிகிதமாகவும், 1980 மற்றும் 90-களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவிகிதமாகவும் இருந்தது. 2014 - 19 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (பணவீக்கத்துடன்) 7.4 சதவிகிதமாக இருந்தது.

முதலீடுகள்

முதலீடுகள்

2009 - 14 காலத்தில் 190 பில்லியன் டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடுகள் (FDI), இந்த 2014 - 19 காலத்தில் 284 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. இந்தியவின் கடன் கடந்த மார்ச் 2014-ல் இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 52.2 சதவிகிதமாக இருந்தது. இப்போது மார்ச் 2019 காலத்தில் அது 48.7 %-மாக குறைந்து இருக்கிறது.

விவசாயத் துறை 1. நீர்பாசனம் & கிராம புற மேம்பாடு

விவசாயத் துறை 1. நீர்பாசனம் & கிராம புற மேம்பாடு

2022-க்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம். விவசாயிகள் வளம் பெற விவசாயம் போட்டி நிறைந்ததாக இருக்க வேண்டும். எனவே விவசாய சந்தைகள் தாராளமயமாக்கப்பட வேண்டும். விவசாயம் மற்ரும் கோழி ஆடு மாடு போன்ற சந்தைகளில் தலையீடுகள் நீக்கப்பட வேண்டும். விவசாயப் பொருட்களை வாங்குவது, போக்குவரத்து செய்வது மற்றும் விவசாய சேவைகளுக்கு நிறைய முதலீடுகள் தேவை.

விவசாயத் துறை 1 தொடர்ச்சி

விவசாயத் துறை 1 தொடர்ச்சி

விவசாயம் சார்ந்த ஆடு , மாடு, கோழி, தேனி, மீன் பிடித்தல் போன்ற தொழில்களுக்கு கை பிடித்து அழைத்துச் செல்லக் கூடிய அளவுக்கு நிறைய உதவிகள் வேண்டும். விவசாயத் தொழிலில் ஸ்டோரேஜ், நிதி, பதப்படுத்துதல், சந்தைப்படுத்தல் என விவசாயிகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த தீர்வு தேவைப்படுகிறது. நிலையான பயிரிடும் திட்டங்கள் (Sustainable Cropping patterns) மற்றும் அதிக தொழில்நுட்பங்களை விவசாயத்துக்குள் கொண்டு வரவது அரசின் திட்டத்தில் இருக்கிறதாம்.

விவசாயத் துறை 16 அம்சத் திட்டம் 1

விவசாயத் துறை 16 அம்சத் திட்டம் 1

ஏற்கனவே மத்திய அரசு சொல்லி இருக்கும் கீழ் காணும் திட்டங்களை, எந்த மாநிலங்கள் கொண்டு வருகிறார்களோ அந்த மாநிலங்களை, மேலும் ஊக்குவிக்கச் சொல்லி இருக்கிறது மத்திய அரசு. திட்டங்கள் பின் வருமாறு
அ. Model Agricultural Land Leasing Act, 2016
ஆ. Model Agricultural Produce and Livestock Marketing
(Promotion and Facilitation) Act, 2017;, இ. Model Agricultural Produce and Livestock Contract Farming
and Services (Promotion and Facilitation) Act, 2018

16 அம்சத் திட்டம் 2

16 அம்சத் திட்டம் 2

இந்தியாவின் 100 மாவட்டங்களில், தண்ணீர் பஞ்சம் தொடர்பாக உள்ள அனைத்து பிரனைகளுக்கும் தீர்வு காணும் விதத்தில் நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். என்ன நடவடிக்கைகள் என நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் பேச்சில் குறிப்பிடவில்லை. அதே போல் 100 மாவட்டங்களை எப்படி தேர்வு செய்ய இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடவில்லை.

16 அம்சத் திட்டம் 3

16 அம்சத் திட்டம் 3

பிரதமரின் KUSUM திட்டத்தின் கீழ், மேலும் 20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் வழியாக தங்கள் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பெற வழி வகை செய்யப் போகிறார்களாம். மேலும் 15 லட்சம் விவசாயிகள் கிரிட் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் பம்ப் செட்களையும் சோலார் மயமாக்க உதவ இருக்கிறார்களாம். விவசாயிகள் வைத்திருக்கும் பயனற்ற மொட்டை நிலங்களில் சோலார் மூலம் மின்சார தயாரித்து, அதை கிரிட்களுக்கு விற்க ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வர இருகிறார்கல்ளாம்.

16 அம்சத் திட்டம் 4

16 அம்சத் திட்டம் 4

ஆர்கானிக் உரங்கள் மற்ரும் புதிய ரசாயன உரங்கள் பயன்பாட்டை சமநிலைப் படுத்த அரசு ஊக்குவிக்க வேண்டும். தற்போது இருக்கும் விவசாய உரங்கள் தொடர்பான திட்டங்கள், விவசாயிகளை, ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்த ஊக்குவிப்பதாக இருக்கிறது எனச் சொன்னார் நிர்மலா சீதாராமன். இந்த திட்டங்கள் மாற்றப்பட வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்.

16 அம்சத் திட்டம் 5

16 அம்சத் திட்டம் 5

இந்தியாவில் 162 மில்லியன் டன் விவசாய பொருட்களை சேகரிக்க குடோன் வசதிகள் இருக்கின்றன. இதில் குடோன், குளிர்பதன வசதி, ரீஃபர் வேன் (குளிர்சாதன வேன்கள்) எல்லாம் அடக்கம். நபார்ட் அமைப்பு இந்த குடோன் வசதிகளை மேப் செய்து ஜியோ டேக் செய்யப் போகிறார்களாம். கூடுதலாக குடோன் வசதிகளைக் தாலுகா அளவில் கொண்டு வர மத்திய அரசு Viability Gap funding கொடுப்பார்களாம். மாநில அரசுகள் நிலம் கொடுத்து உதவினால் தான் இது சாத்தியசம் எனச் சொல்லி இருக்கிறார்கள். இல்லை என்றால் PPP - Public Private Partnership முறையிலும் அமைக்க இருக்கிறார்கள். மத்திய அரசின் Food Corporation of India (FCI) and Central Warehousing
Corporation (CWC) போன்ற நிறுவனங்களும் தங்கள் நிலங்களில் விவசாய குடோன்களைக் கட்ட வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள்

16 அம்சத் திட்டம் 6

16 அம்சத் திட்டம் 6

கிராமங்களில் இருக்கும் சுய உதவிக் குழுக்களைக் கொண்டு, ஒரு கிராம குடோன்களை அமைக்க ஒரு திட்டம் கொண்டு வந்து இருக்கிறார்கள். அந்த திட்டத்தின் பெயர் Village Storage scheme. இதனால் விவசாயிகளுக்கு குடோன் சேவைகள் கிடைப்பதுடன் போக்குவரத்து செலவுகளும் குறையும் என்கிறார்கள். இதில் பெண்களும் பங்கெடுக்கலாம்.

16 அம்சத் திட்டம் 7

16 அம்சத் திட்டம் 7

இந்தியாவில் குளிர்சாதன வசதியை மேம்படுத்த, கிஷான் ரயில் என்கிற பெயரில் குளிர்சாதன சரக்கு ரயில் பெட்டிகளைக் கொண்டு வர இருக்கிறார்களாம். இந்த கிஷான் ரயிலை பொதுத் துறை மற்றும் தனியார் பங்கெடுப்புடன் தொடங்க இருக்கிறார்களாம். இதனால் எளிதில் கெட்டுப் போகும் பால், இறைச்சி போன்ற விவசாயப் பொருட்களை எளிதில் போக்குவரத்து செய்ய முடியுமாம்.

16 அம்சத் திட்டம் 8

16 அம்சத் திட்டம் 8

க்ருஷி உடான் என்கிற திட்டத்தை பயணிகள் விமான அமைச்சகம் தொடங்குவார்களாம். இந்த் அதிட்டம் சர்வதேச மற்றும் தேசிய வழித் தடங்களில் கூட இயங்குமாம். இதனால் வட கிழக்கு மற்றும் மலைகளில் அமைந்து இருக்கும் மாவட்டங்களும் பெரிதும் பயன் அளிப்பதாக இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த திட்டம் குறித்து இன்னும் முழுமையாக தெளிபடுத்தவில்லை.

16 அம்சத் திட்டம் 9

16 அம்சத் திட்டம் 9

இந்தியாவில் ஹார்டிகல்சர் என்று சொல்லப்படும் மலர்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி 311 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்து இருக்கிறது. இந்த மலர்கள், காய்கறிகள் மற்ரும் பழங்களை மேலும் சிறப்பாக சந்தைப்படுத்த, ஏற்றுமதியை அதிகரிக்க புதிய திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்களாம். அந்த திட்டத்தின் பெயர் ஒரு பொருள் ஒரு மாவட்டம் (One Product One District). க்ளஸ்டர் அடிப்படையில் ஆதரிக்கும் மாநிலங்களில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுமாம்.

16 அம்சத் திட்டம் 10

16 அம்சத் திட்டம் 10

Integrated farming systems - ஒருங்கிணைந்த விவசாய அமைப்பு, இந்தியாவில் வானம் பார்த்த பூமியாக இருக்கும் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த இருக்கிறார்களாம். விவசாயம் செய்யப்படாத காலங்களில்... பல அடுக்கு பயிர் முறை, தேனி வளர்ப்பு, சோலார் பம்புகள், சோலார் மின்சார தயாரிப்பு போன்றவைகளைக் கொண்டு வர இருகிறார்களாம். ஜிரோ பட்ஜெட் முறையும் கொண்டு வர இருக்கிறார்களாம். "jaivik
kheti என்கிற ஆன்லைன் தேசிய ஆர்கானிக் பொருட்கள் சந்தை மேலும் வலுப்படுத்த இருக்கிறார்களாம்.

16 அம்சத் திட்டம் 11

16 அம்சத் திட்டம் 11

Negotiable Warehousing Receipts (e-NWR) திட்டத்தின் கீழ் சுமார் 6000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி உதவி செய்து இருக்கிறார்களம். இந்த e-NWR திட்டத்தை தேசிய ஆன்லைன் விவசாய சந்தை திட்டத்துடன் ( e-NAM - Online National Agriculture Market)ஒருங்கினைக்க இருக்கிறார்களாம்.

16 அம்சத் திட்டம் 12

16 அம்சத் திட்டம் 12

நபார்டின் மறு கடன் கொடுக்கும் திட்டம் (Refinance Scheme) விரிவாக்கப்படும். விவசாய கடன்களுக்கான இலக்கு 2020 - 21 நிதி ஆண்டுக்கு 15 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயித்து இருக்கிறார்களாம். பிரதமரின் கிஷான் திட்டத்தின் கீழ் இருப்பவர்கள் அனைவரும் கிஷான் க்ரெடிட் கார்ட் திட்டத்தின் கீழும் வருவார்களாம்.

16 அம்சத் திட்டம் 13

16 அம்சத் திட்டம் 13

தற்போது 30%-மாக இருக்கும் ஆடுகளுக்கான செயற்கை கருத்தறிப்பு விரைவில் 70 சதவிகிதமாக அதிகரிக்கப் படுமாம். கால் நடைகளுக்கான புல் போன்ற தீவனங்களுக்கு, ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் புல் பண்ணைகள் உருவாக்கப்படுமாம். இந்தியாவில் பால் பதப்படுத்தும் அளவு தற்போது 53.5 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கிறது. அதை அடுத்த 2025-ம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்க இருக்கிறார்களாம்.

16 அம்சத் திட்டம் 14

16 அம்சத் திட்டம் 14

நீலப் பொருளாதாரம் என்று அழைக்கப்படும் மீன் பிடித் தொழிலை மேம்படுத்த, சரியாக நிர்வகிக்க, இருக்கும் மீன் வளங்களைப் பாதுகாக்க அரசு ஒரு புதிய வரைவைக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார்கள். மீன் பொருளாதாரம் என்ற உடன் இறால் வறுவல் தான் நினைவுக்கு வருகிறது.

16 அம்சத் திட்டம் 15

16 அம்சத் திட்டம் 15

2022 - 23-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மீன் பிடித் தொழிலும் உற்பத்தி 200 லட்சம் டன்னாக அதிகரிக்குமாம். கடல் பாசிகள் வளர்ப்பு மற்றும் பாத்தி கட்டி மீன் வளர்ப்பது போன்றவைகளும் ஊக்குவிக்கப்படுமாம். இளைஞர்களை மீன் பிடித் தொழிலில் கொண்டு வர 3,477 சாகர் மிதரா மற்றும் 500 மீன் விவசாயிகள் உற்பத்தி அமைப்புகளைப் பயன்படுத்த இருக்கிறார்களாம். 2024 - 25 நிதி ஆண்டுக்குள் இந்தியாவின் மீன் ஏற்றுமதி 1 லட்ட்சம் கோடி ரூபாயைத் தொடும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

16 அம்சத் திட்டம் 16

16 அம்சத் திட்டம் 16

இந்தியாவின் வறுமையை ஒழிக்க, தீன தயாள் அந்த்யோத்தயா யோஜனா திட்டத்தின் மூலம் 58 லட்சம் சுய உதவிக் குழுக்களைக் கொண்டு வந்திருக்கிறார்களாம். இந்த சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இருக்கிறார்களாம். இது தான் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மொத்த பட்ஜெட்டில் அதிக கவனம் ஈர்த்த 16 அம்ச விவசாயத் திட்டம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2020 A - Z highlights part 1

Yesterday our finance minister nirmala sitharaman announced her budget 2020. we are extracting the highlights from A - Z. This is the part 1 of yesterdays budget 2020.
Story first published: Sunday, February 2, 2020, 15:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X