பட்ஜெட் 2020: A - Z..பட்ஜெட் ஹைலைட்கள் பாகம் - 2, சுகாதாரம் & நீர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் 2020 - 21-ன் ஹைலைட்களின் முதல் பாகத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

முதல் பாகத்தில் 16 அம்சத் திட்டத்துடன் முடித்தோம். இப்போது விட்ட இடத்தில் இருந்து தொடங்குவோம்.

இதோ விவசாய நிதி ஒதுக்கீட்டில் இருந்து தொடங்குவோம்

பட்ஜெட் 2020: A - Z..பட்ஜெட் ஹைலைட்கள் பாகம் -1பட்ஜெட் 2020: A - Z..பட்ஜெட் ஹைலைட்கள் பாகம் -1

விவசாய நிதி ஒதுக்கீடு

விவசாய நிதி ஒதுக்கீடு

மேலே சொன்ன 16 அம்சத் திட்டத்துக்கு, மத்திய அரசு இரண்டு பெரிய பிரிவுகளாக நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள்.
1. விவசாயம், நீர் பாசன மற்றும் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு 1.6 லட்சம் கோடி ரூபாய்.
2. கிராம புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் - 1.23 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து இருக்கிறார்களாம்.

மருத்துவமனைகள் வேண்டும்

மருத்துவமனைகள் வேண்டும்

பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் 20,000 மருத்துவமனைகள் இருக்கிறதாம். டயர் 2 & டயர் 3 நகரங்களில் இன்னும் நிறைய மருத்துவமனைகள் வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். பிரதமரின் ஜன் ஆரோக்ய திட்டம் மற்றும் ஆயுச்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள் இல்லாத மாவட்டங்களில் முதல் கட்டமாக மருத்துவமனைகளை பொதுத் துறை மற்றும் தனியார் கூட்டமைத்து கட்டப் போகிறார்களாம். இதில் தனியார்களுக்கு Viability Gap funding வழங்கபடுமாம். மருத்துவ கருவிகளின் மீது விதிக்கப்படும் வரிகளைக் கொண்டு நித மருத்துவமனை போன்ற சுகாதார கட்டமைப்புகளைக் கொண்டு வரப் போகிறார்களாம்.

நோய் தடுப்பு
 

நோய் தடுப்பு

1. மிஷின் லேர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்றவைகளை ஆயுஸ்மான் பாரத் திட்டத்தில் பயன்படுத்தச் சொல்லி இருக்கிறார்கள். சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் வர இருக்கும் நோயை முன் கூட்டியே தடுக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
2. 2025-ம் ஆண்டுக்குள் டிபியை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்களாம்.

மருந்துகள் & மருத்துவ கருவிகள்

மருந்துகள் & மருத்துவ கருவிகள்

2024-ம் ஆண்டுக்குள்,Jan Aushadhi Kendra திட்டத்தின் கீழ், இந்தியாவில் இருக்கும் மாவட்டங்களுக்கு 2000 மருந்துகள் மற்றும் 300 மருத்துவ கருவிகள் கொடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். மொத்தத்தில் சுகாதாரத் துறைக்கு மத்திய அரசு 69,000 கோடி ஒதுக்கி இருக்கிறார்களாம். அதில் 6,400 கோடி ரூபாய் பிரதமர் ஜன் ஆரோக்யா திட்டத்துக்கு மட்டும் ஒதுக்கி இருக்கிறார்களாம். ஸ்வச் பாரத் திட்டத்துக்கு 12,300 கோடி ஒதுக்கி இருக்கிறார்களாம்.

வீட்டுக்கு வீடு குழாய் நீர்

வீட்டுக்கு வீடு குழாய் நீர்

இந்தியாவில் இருக்கும் எல்லா வீட்டுக்கும் குழாயில் நீர் கொடுக்க ஜல் ஜீவன் திட்டத்தைக் கொண்டு வந்தார் மோடி. அந்த திட்டத்துக்கு அரசு 3.6 லட்சம் கோடி ஒதுக்கி இருக்கிறதாம். ஒரு ஊரில் இருக்கும் நீர் வளத்தை மேம்படுத்துவது, நீரை அதிகரிக்கச் செய்வது மற்ரும் மழை நீர் சேகரிப்பை ஊக்குவிப்பது, கடல் நீரை பயன்படுத்தும் நீராக மாற்றுவது என பலதும் இந்த திட்டத்தின் வழி செய்கிறார்களாம்.

2020 - 21 நிதி ஆண்டுக்குள்

2020 - 21 நிதி ஆண்டுக்குள்

இந்தியாவில், 10 லட்சம் பேருக்கு மேல் வாழும் ஊர்களில் இந்த திட்டத்தை இந்த 2020 - 21 நிதி ஆண்டுக்குள் முழுமையாக அமல்படுத்த ஊக்குவிக்க இருக்கிறார்களாம். இந்த நிதி ஆண்டில், ஜல் ஜீவன் திட்டத்துக்கு 11,500 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்களம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2020 A - Z highlights part 2 Health and water

Yesterday our finance minister nirmala sitharaman announced her budget 2020. we are extracting the highlights from A - Z. This is the part 2 of yesterdays budget 2020. Thsi article is saying the highlights of Health and Water related announcements.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X