பட்ஜெட் 2020: 2030ல் இந்தியா தான் டாப்.. கல்விதுறைக்கு புதிய பல அறிவிப்புகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Recommended Video

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது - நிர்மலா சீதாராமன்

டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியிலும் மோடி 2.0 அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டினை தாக்கல் செய்து வருகிறார். அதில் 2030 வாக்கில் இந்தியா உலகிலேயே மிகப்பெரிய உழைக்கும் வயதுடைய மக்களை கொண்ட நாடாக இருக்கும் என்றும், இப்படியாக கல்வித்துறைக்கும் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

மேலும் விரைவில் கல்வித்துறைக்கு புதிய கல்வித் கொள்கைகள் அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

பட்ஜெட் 2020: 2030ல் இந்தியா தான் டாப்.. கல்விதுறைக்கு புதிய பல அறிவிப்புகள்..!

ஒரு நாட்டின் மிகப்பெரிய மூலதனமாக இருக்கும் கல்வித்துறைக்கு இது போன்ற பல அறிவிப்புகளை கொடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட் 2020: விளை நிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.. நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் ஆத்திச்சூடி!பட்ஜெட் 2020: விளை நிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.. நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் ஆத்திச்சூடி!

2020 - 21ல் கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், திறன் மேம்பாட்டு துறைக்கு 3,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதெல்லாவற்றையும் விட விரைவில் கல்விக்கான புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார், மேலும் நாட்டின் மிகச் சிறந்த 100 நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டப்படிப்பை ஆன்லைன் மூலம் வழங்கும் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தவிர நாடும் முழுவதிலும் உள்ள நகர்புறம் உள்ளாட்சி அமைப்புகள் இளம் பொறியாளர்களுக்கு ஒரு வருடம் வரை இண்டர்ன்ஷிப் வழங்க வேண்டும் என்றும் தனது பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மேலும் 2030 வாக்கில் இந்தியா உலகிலேயே மிகப்பெரிய உழைக்கும் வயதுடைய மக்களை கொண்ட நாடாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இப்படியாக கல்வித்துறைக்கும் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

மேலும் தேசிய காவல்துறை பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். அறிவியல் துறை மாணவர்களுக்காக 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மாணவர்களுக்கு பயிற்சி வாய்ப்புகள் மார்ச் 2021க்குள் ஏற்படுத்தப்படும்.

ஒரு நாட்டின் கல்வி செல்வத்தை உயர்த்துவதன் மூலம் நிதிச் செல்வத்தை உயர்த்த முடியும் என்பதை புரிந்து கொண்டு இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், நன்றாகத்தான் இருக்கும்.

இது தவிர ஒரு லட்சம் கிராமங்கள் பாரத் நெட் மூலம் இணைக்கப்படும் என்றும் பல்வேறு திட்டங்களை தனது பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். மேலும் கல்வி சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும், அதிலும் கல்வித்துறையில் அன்னிய நேரடி முதலீடுகள் செய்யப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

எப்படியோங்க இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நாட்டில் கல்வி வளங்கள் அதிகரித்தால் அது நல்ல விஷயமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

budget 2020: FM nirmala sitharam said New education policy will be announced soon

Finance minister nirmala sitharam said new education policy will be announced soon. And she said By 2030 India will have the largest working-age population in the world.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X