வாவ்.. இதுக்காக மோடி தனிப்பட்ட முறையில் 100 மணி நேரம் ஒதுக்கினாராம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாடெங்கிலும் மிக பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் நிர்மலா சீதாராமனின் இரண்டாவது பட்ஜெட்டுக்காக, பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் 100 மணி நேரத்தை செலவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து வெளியான செய்தியில், பிசினஸ் டுடேவிடம், நிதி அமைச்சக வட்டாரங்கள் பிரதமர் நரேந்திர மோடி மத்திய பட்ஜெட் 2020க்காக 100 மணி நேரத்தை தனிப்பட்ட முறையில் செலவு செய்ததாக செய்திகள் கூறுகின்றன.

மேலும் நீங்கள் இந்த பட்ஜெட்டை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம், ஆனால் பிரதமரின் நூறு மணி நேரம் உழைப்பு இதில் உள்ளது என்றும், பிரதமரின் முத்திரை இந்த பட்ஜெட்டில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்றும் அந்த அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியுள்ளனராம்.

கொரோனாவின் கொடூர தாக்குதல்.. படு வீழ்ச்சி கண்ட சீனா சந்தை.. தெறித்து ஓடிய முதலீட்டாளர்கள்..!கொரோனாவின் கொடூர தாக்குதல்.. படு வீழ்ச்சி கண்ட சீனா சந்தை.. தெறித்து ஓடிய முதலீட்டாளர்கள்..!

ஒவ்வொருவராக சந்திப்பு

ஒவ்வொருவராக சந்திப்பு

மேலும் பிரதமர் தொழில் துறையினரிலிருந்து, பொருளாதார வல்லுனர்கள் வரை ஒவ்வொருவராக சந்தித்தார். மேலும் பணத்தை அச்சிடுமாறு அறிவுறுத்தியவர்கள் உட்பட ஒவ்வொருவரின் ஆலோசனையையும் கேட்டறிந்தார் பிரதமர் மோடி. மேலும் வரவு செலவு திட்டத்தின் நம்பகத்தன்மையை அதிகரிப்பது மற்றும் வாங்கும் தன்மையை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதில் அவர் மிக தெளிவாக இருந்தார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

பெண்கள் பற்றி பேசும் பட்ஜெட்

பெண்கள் பற்றி பேசும் பட்ஜெட்

குறிப்பாக சொல்லப்போனால் இந்த பட்ஜெட்டில் பல முதல் விஷயங்கள் உள்ளன. இது ஆட்சிக்கு இடத்தை ஒதுக்கும் முதல் பட்ஜெட் என்றும் கூறப்படுகிறது. இதில் நிதி மேலாண்மை குறித்த முழு அத்தியாயம் உள்ளதாகவும், இந்த பட்ஜெட் பாலினம் மற்றும் பெண்கள் பற்றி பேசுவதாகவும் உள்ளது. இது தவிர வாழ்க்கை முறைகளை பற்றியும் பேசுவதாக உள்ளதாகவும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இது பொருளாதாரத்தை வலுபடுத்தும்

இது பொருளாதாரத்தை வலுபடுத்தும்

பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் 2020 தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அது பார்வை மற்றும் செயல் (vision and action) ஆகிய இரண்டையும் பிரதிபலிப்பதாகவும் பிரதமர் கூறியிருந்தார். இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும். ஒவ்வொரு குடிமகனுக்கும் நிதி ரீதியாக அதிகாரம் அளிக்கும் மற்றும் புதிய தசாப்த்தத்தில் பொருளாதாரத்தின் அடிதளம் வலுப்படும் என்றும் கூறியுள்ளார்.

வருமானம், முதலீட்டை அதிகரிக்கும் பட்ஜெட்

வருமானம், முதலீட்டை அதிகரிக்கும் பட்ஜெட்

மேலும் இந்த பட்ஜெட் வருமானம் மற்றும் முதலீட்டையும் அதிகரிக்கும், தேவை மற்றும் நுகர்வையும் அதிகரிக்கும். நிதி அமைப்பில் புதிய வீரியம் மற்றும் கடன் ஓட்டத்தை கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன் என்று பிரதமர் கூறியதாகவும் செய்திகள் கூறுகின்றன. மேலும் முதலீடு வேலைவாய்ப்பின் மிகப்பெரிய இயக்கி என்றும் வர்ணித்ததாகவும் கூறப்படுகிறது.

முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை

முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை

இது தவிர முதலீட்டை ஊக்குவிப்பதில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் பத்திர சந்தையை வலுபடுத்தவும், உள்கட்டமைப்பின் நீண்டகால நிதியுதவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

படு வீழ்ச்சி

படு வீழ்ச்சி

கடந்த 2008 - 09 உலக நிதி நெருக்கடியிலிருந்தே மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஜிடிபி விகிதமானது ஆறு ஆண்டுகளில் இல்லாதளவுக்கு 4.5% ஆக படு வீழ்ச்சி கண்டது. ஆக மத்திய அரசின் இந்த பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பட்ஜெட் அறிக்கைகளை விரைவில் செயல்படுத்த வேண்டும்

பட்ஜெட் அறிக்கைகளை விரைவில் செயல்படுத்த வேண்டும்

இது குறித்து இந்தியா இன்க் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் விரைவில் நடைமுறைப்படுத்தலாம் என்று நம்புகிறது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் நீண்ட கால நோக்கில் வருவாயைக் கொடுக்கும், இருப்பினும் உடனடி தாக்கத்தை ஏற்படுத்த அரசு அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் இந்தியா இன்க் நிபுணர்கள் கூறியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2020: PM Narendra modi personally invested over 100 hours on it

Prime Minister Narendra modi personally invested 100 hours in making budget 2020. Said finance ministry sources.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X