தேஜஸ் ரயிலை போல 1,150 தனியார் ரயில்கள் இயக்கப்படும்.. பட்ஜெட்டில் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பல ஆண்டுகளாக மத்திய பட்ஜெட்டில் ரயில்வே பட்ஜெட் தனியாகவும், பொது பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில், ரயில்வே பட்ஜெட்டும் பொது பட்ஜெட்டிலேயே கொண்டு வந்தது.

 

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாருங்கள் பார்ப்போம்.

தேஜஸ் பாணியில் கூடுதல் ரயில்கள்

தேஜஸ் பாணியில் கூடுதல் ரயில்கள்

நாட்டின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான ரயில்வே துறைக்கு புதிய பல அறிவிப்புகளைத் கொடுத்துள்ளார். வரும் ஆண்டுகளில் தேஜஸ் ரயில் பாணியில் ரயில்கள் சேவை அதிகரிக்கப்படும். இந்த பிரிமியம் ரயில் சேவைகள் நாடு முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா பாதைகளில் இயக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

எத்தனை ரயில்கள் தனியாருக்கு?

எத்தனை ரயில்கள் தனியாருக்கு?

சொல்லப்போனால் அரசு தனியார் கூட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் 1,150 தனியார் ரயில்கள் இயக்கப்படும். குறிப்பாக இந்த ரயில்கள் முக்கிய சுற்றுலா வழித்தடங்களில் இயக்கப்படும். இந்த ரயில்கள் சதாப்தி ஏசி ரயில்களை விட வசதி மிகுந்ததாக இருக்கும். தற்போது இயக்கப்பட்டு வரும் இரண்டு தேஜஸ் ரயில்களும் ஐஆர்சிடிசி கீழ் செயல்பட்டு வருகிறது.

உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள்
 

உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள்

மேலும் விரைவில் நாக்பூர், சபர்மதி, அமிர்தசரஸ் மற்றும் குவாலியர் ரயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரயில்வே துறைக்கு 70,000 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் மூலதன செலவினங்களுக்காக 1.61 லட்சம் கோடி ரூபாய். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 3% அதிகமாகும்.

எதற்கு எவ்வளவு ஒதுக்கீடு?

எதற்கு எவ்வளவு ஒதுக்கீடு?

2020 - 21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் புதிய கட்டமைப்புகளுக்கு 12,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும், பாதைகள் மாற்ற 2,250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், இதே doublingக்கு 700 கோடி ரூபாயும், ரோலிங் பங்குகளுக்கு 5,786.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், இதே சிக்னலிங் மற்றும் தொலைத்தொடர்ப்புக்கு 1,650 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

இது தவிர இந்த நிதியாண்டில் ரயில் பயணிகள் வசதிக்காக 2,725.63 கோடி ரூபாய் நிதியும், இதே போல் 1,265 மெட்ரிக் டன் சரக்கு ஏற்றுதல் முன்மொழியப்பட்டது. பயணிகள் வருவாய் மூலம் 61,000 கோடி ரூபாயும், பொருட்கள் வருவாயில் 1,47,000 கோடி ரூபாயும் வரும் நிதியாண்டில் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

புற நகர் ரயில்

புற நகர் ரயில்

மேலும் 148 கீமீ பெங்களுரு புறநகர் ரயில் போக்குவரத்து திட்டத்திற்காக 18,600 கோடி ரூபாய் செலவில் திட்டத்தினையும் முன்மொழிந்துள்ளார். இது மெட் ரோ ரயில் மாடலில் கட்டணம் வசூலிக்கும் என்றும், இதற்காக மத்திய அரசு 20% நிதியையும், 60% வெளிப்புற உதவியுடன் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளய்து.

புல்லட் ரயில் திட்டம்

புல்லட் ரயில் திட்டம்

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை - அஹமதாபாத் வரையிலான திட்டம் விரைவில் முடிக்கப்படும். 4 ரயில்வே ஸ்டேஷன்கள், தனியாரியின் உதவியுடன் மேம்படுத்தப்படும். 550 ரயில் நிலையங்களில் வைபை வசதி செய்யப்படும். இதோடு ரயில் பாதையில் பெரிய சூரிய சக்தி திறன் அமைப்பதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கான கிசான் ரயில்

விவசாயிகளுக்கான கிசான் ரயில்

விவசாய பொருட்களை எடுத்துசெல்ல குளிர் சாதன ரயிலான கிசான் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரயில்வேயின் செலவினங்கள் ரயில்வேக்கு ஒரு பெரிய தலைவலியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சம்பள செலவினம் கடந்த ஆண்டை விட 6,000 கோடி ரூபாய் அதிகமாகும். மொத்த சம்பள செலவு 92,993.07 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உடையில் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2020: railway budget highlights

The railways got a budgetary allocation Rs.70,000 crore. But she said will remain a major headache of the railways is the revenue expenditure. This budget estimated salary payout of Rs 92,993.07 cr, about Rs 6,000 crore more than last year.
Story first published: Sunday, February 2, 2020, 15:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X