வர விருக்கும் 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பல எதிர்ப்பார்ப்புகள் நிலவி வருகின்றது. இந்த பட்ஜெட் மீது முன் எப்போதும் இல்லாத அளவு எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
ஏனெனில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா என்னும் நுண்கிருமி மக்களை படுத்தி எடுத்து வருகின்றது. பொருளாதாரம் சரிவில் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக லட்சக்கணக்கானோர் தங்களது வேலையினை இழந்து தவித்து வருகின்றனர்.
அதோடு பல நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. ஆக மொத்தத்தில் 2020ம் ஆண்டில் மக்கள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனர். ஆக இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வரி விலக்கு அளிக்கலாம்
அந்த வகையில் கடந்த ஆண்டில் பல்வேறு தரப்பினரும் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். ஆக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வரும் இந்த வேளையில், ஏற்படும் செலவுகளுக்கு வரி விலக்கு அளிக்க முடியும். ஏனெனில் இது தேவையை அதிகரிக்கும் என்று ஆலோசனை நிறுவனமான பிடபள்யூசி இந்தியா கூறியுள்ளது.

இதில் கவனம் செலுத்தலாம்
இவர் ப்ரீபட்ஜெட் செசனில் பேசிய Pwc Indiaவின் மூத்த வரி பங்குதாரர் ராகுல் கார்க், மக்கள் கையில் பணம் அதிகம் புழங்கினால், தேவை அதிகரிக்கும். ஆக மக்களிடம் இருந்து வரியாக எடுக்கப்படுவது குறித்து கவனம் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளார். ஏனெனில் இந்த கொரோனா காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர வரி செலுத்துவோர் மட்டத்தில் இதனை எதிர்பார்க்கின்றனர்.

பணப்புழக்கம் அதிகரிக்கும்
ஒரு வேளை பட்ஜெட்டில் அரசு இதனை செய்தால், நடுத்தர மற்றும் சிறு மட்டத்திலும் மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிலும் கடந்த ஆண்டில் இருந்தே ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருவதால், இது ஒரு நியாயமான கோரிக்கையாகும். இன்றைய விலக்கு, ஊழியர்களின் கையில் செலவினங்களாக உள்ளன. ஆக விலக்கு அளிக்கப்படும் பட்சத்தில் அவை ஒரு கட்டத்தில் செலவினங்களாக மாறும். இதனால் நுகர்வு அதிகரிக்கும். இதனால் வரி வருவாயை தியாகம் செய்வதாக இல்லை.

தேவை அதிகரிக்கும்
அதோடு கொரோனா தொடர்பான செலவினங்களுக்கும் வரி சலுகை அளிக்கப்பட வேண்டும். இது தனி நபர்களின் கையில் பணப்புழக்கத்தினை அதிகரிப்பதற்கான வழிகளை உருவாக்கும். இதன் மூலம் மாதம் கணிசமான ரூபாயினை பார்க்க முடியும். இதன் மூலம் நிச்சயம் தேவையை அதிகரிக்க முடியும் என்றும் கார்க் கூறியுள்ளார்.