பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நடுத்தர வர்த்தக சம்பளதாரர்களுக்கு பயன் அளிக்கும் விதமாக பட்ஜெட் 2023 அமர்வில் 5 முக்கிய அறிவிப்புகளை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

குறிப்பாக வரி விதிப்பு நடைமுறையில் மாற்றம், வரி விலக்கு அதிகரிப்பு, கூடுதல் வரி அதிகரிப்பு என 5 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இதில் குறிப்பாக பலரின் கவனத்தையும் ஈர்த்தது புதிய வரி விகித திட்டத்தில் 7 லட்சம் ரூபாய் வரையில் வரி விலக்கு அளிக்கப்பட்டது தான்.

Budget 2023: இது தேர்தல் பட்ஜெட் அல்ல.. ஒரு சமநிலையான பட்ஜெட்.. இலவசங்கள் கிடையாது..! Budget 2023: இது தேர்தல் பட்ஜெட் அல்ல.. ஒரு சமநிலையான பட்ஜெட்.. இலவசங்கள் கிடையாது..!

ரூ. 7 லட்சம் வரையில் வரி இல்லை

ரூ. 7 லட்சம் வரையில் வரி இல்லை

நேற்றைய பட்ஜெட் அமர்வில் பெரும் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகளில் ஒன்று, தனி நபர் வருமான வரி விதிப்பில் புதிய முறையில் வருமான வரி உச்ச வரம்பு ஆனது, 5 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சம்பளதாரர்களுக்கு மத்தியில் பெரும் திருப்தியாக இருக்கலாம்.

வரி விதிப்பு முறையில் மாற்றம்

வரி விதிப்பு முறையில் மாற்றம்

0 - 3 லட்சம் ரூபாய்க்கு வரி கிடையாது

3 - 6 லட்சம் ரூபாய்க்கு - 5% வரி

6 - 9 லட்சம் ரூபாய்க்கு - 10% வரி

9 - 12 லட்சம் ரூபாய்க்கு - 15% வரி

12 - 15 லட்சம் ரூபாய்க்கு - 20% வரி

15 லட்சம் ரூபாய்க்கு மேல் - 30%

பிரதான வரி முறை

பிரதான வரி முறை

புதிய வருமான வரி முறையே இனி பிரதான ஒரு வரி திட்டமாக இருக்கும். எனினும், விருப்பப்பட்டவர்கள் பழைய வரி முறையை தேர்வு செய்துகொள்ளலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

ரூ.45,000 வரி செலுத்தணும்

ரூ.45,000 வரி செலுத்தணும்

 

ஆண்டு வருமானம் என்பது 9 லட்சம் ரூபாய் கொண்டுள்ள ஒரு தனி நபர் 45,000 ரூபாய் வரியாக செலுத்த வேண்டியிருக்கும். இது 3 - 6 லட்சம் ரூபாய்க்கு 15,000 ரூபாயும், 6 லட்சம் ரூபாயில் இருந்து 9 லட்சம் ரூபாய் வரையில் 10% என்ற அளவுக்கு 30,000 ரூபாயும் வரியாக செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலம் 45,000 ரூபாய் வரியாக செலுத்த வேண்டியிருக்கும். இது முன்னதாக 60,000 ரூபாயாக இருந்தது. பட்ஜெட்டுக்கு பிறகு 15,000 ரூபாய் சலுகை கிடைக்கும்.

இதே 15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டினால் 1.5 லட்சம் வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். இது முன்னதாக 1,87,500 ரூபாயாக வரி விதிக்கப்பட்டது.

பணி ஓய்வுக்கான ஈட்டிய விடுப்பு

பணி ஓய்வுக்கான ஈட்டிய விடுப்பு

அரசு ஊழியர்களுக்கான பணி ஓய்வுக்கான ஈட்டிய விடுப்பு 2002ம் ஆண்டில் 3 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வரம்பு தற்போது 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

அதிகப்படியான வரி

அதிகப்படியான வரி

ஊதியதாரர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வருமான வரி முறையிலும் அடிப்படை விலக்கு (Standard deduction) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் அதிகபட்சமாக 42.74% தனிநபர் வருமான வரி விதிக்கப்படுகிறது. இது உலகிலேயே மிக அதிக வருமான வரி விகிதங்களில் ஒன்று. எனவே, புதிய வரி முறையில், கூடுதல் கட்டண விகிதத்தை (Surcharge rate) 37%ல் இருந்து 25% ஆக குறைக்கப்படும். இதனால் அதிகபட்ச வரி விகிதம் 39% ஆக குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

budget 2023 : FM Nirmala sitharaman announced 5 important changes on income tax for salaried peoples

budget 2023 : FM Nirmala sitharaman announced 5 important changes on income tax for salaried peoples
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X