Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யப்பட விருக்கும் பட்ஜெட் 2023 அறிக்கையானது சாமானியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தற்போதைய அரசின் கடைசி முழு நேர பட்ஜெட் ஆகும். ஆக இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு என்பது மிக அதிகமாகவே இருக்கிறது.

இது சாமானிய மக்கள் தொடங்கி, தொழில்துறை சார்ந்தவர்கள் என பல தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

 பட்ஜெட் அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் முடிந்தது - நிர்மலா சீதாராமன்..! பட்ஜெட் அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் முடிந்தது - நிர்மலா சீதாராமன்..!

நடுத்தர வர்க்கத்தினருக்கு?

நடுத்தர வர்க்கத்தினருக்கு?

குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு வாழ்வாதரத்திற்கான வாய்ப்புகளை வழங்க உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்பினையும் அதிகரிக்க முடியும். இது சாமானிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மானியத்தை குறைக்கலாம்

மானியத்தை குறைக்கலாம்

அதேசமயம் மத்திய அரசு உணவு, எரிபொருள், உரங்களுக்கு வழங்கும் மானியத்தினை குறைக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறையானது நவம்பர் மாத இறுதியிலேயே 59% அதிகரித்துள்ளது̣. இது மூலதன செலவினங்களை குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரி அல்லாத வருவாயும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு மானியம்

உணவு மானியம்

அரசு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் செலவு கடந்த டிசம்பர் 2022 வரையிலான செலவு 3.91 லட்சம் கோடி ரூபாயாகும். இந்த திட்டத்தினை நிறுத்தினால் அரசு பெரும் தொகை மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிகிறது.

வரும் ஆண்டில் உணவு மானியம் சுமார் 2.3 லட்சம் கோடி ரூபாயாக எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கடந்த மார்ச் 2022 வரையிலான காலகட்டத்தில் 2.7 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

 

 உரங்களுக்கான மானியம்

உரங்களுக்கான மானியம்

நடப்பு நிதியாண்டில் அரசு உரங்களுக்கான மானியமாக 2.2 லட்சம் கோடி ரூபாயாக கணக்கிட்டுள்ளடு. இது பட்ஜெட்டில் 1.05 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது. இது நடப்பு ஆண்டில் 1.2 - 1.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கச்சா எண்ணெய்க்கான மானியமும் குறைக்கப்படலாம் என தெரிகிறது. இந்தியாவிம் மொத்த பட்ஜெட்டில் 8ல் ஒரு பகுதி செலவிடப்படுகின்றது. இந்த நிதியாண்டில் இந்திய பட்ஜெட்டில் 39.45 லட்சம் கோடி ரூபாயாக அரசு செலவிட திட்டமிட்டுள்ளது. இது தவிர இயற்கை எரிவாயு,மற்ற மூலதனங்கள், சமையல் எரிவாயுக்களுக்கான மானியங்களும் குறைக்கப்படலாம் என தெரிகிறது.

2021 - 22 நிதியாண்டு

2021 - 22 நிதியாண்டு

2021 - 22 நிதியாண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் மொத்த மானியங்கள் 4,33,108 கோடி ரூபாயாக இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உணவு மானியம் நடப்பு நிதியாண்டில் 2,86,469 கோடி ரூபாயாக இருக்கலாம். இது கடந்த 2020 - 21ல் 5,41,330 கோடி ரூபாயாக இருந்தது. இதே எரிபொருள் மீதான மானியம் 6517 கோடி ரூபாயாக சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் 38,455 கோடி ரூபாயாக இருந்தது.

 

மானிய தொகை

மானிய தொகை

ஆக மொத்தம் நடப்பு நிதியாண்டில் மானிய தொகை மதிப்பானது 3,17,866 கோடி ரூபாயாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உரங்கள் மீதான மானியமும் 25% குறைந்து, 1,05,222 கோடி ரூபாயாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2023: government may cut food, fertilizer, fuel subsidies next fiscal

Budget 2023: government may cut food, fertilizer, fuel subsidies next fiscal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X