பட்ஜெட் ஹைலைட்ஸ்: யார் யார்க்கு என்ன கிடைத்தது..? நடுத்தர மக்களுக்கு சாதகமான அறிவிப்புகள் என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வரவிருக்கும் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

 

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்படும் கடைசி முழு ஆண்டுக்கான பட்ஜெட் இதுவாகும்.

இதனால் இந்த பட்ஜெட் பெரியளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.

1 அல்ல 2 இல்ல.. 35000 கோடி..! பட்ஜெட் 2023 அறிவிப்பால் கஜானாவில் ஓட்டை.. எந்த அறிவிப்பு..?! 1 அல்ல 2 இல்ல.. 35000 கோடி..! பட்ஜெட் 2023 அறிவிப்பால் கஜானாவில் ஓட்டை.. எந்த அறிவிப்பு..?!

பழைய திட்டத்தில் என்ன சலுகை?

பழைய திட்டத்தில் என்ன சலுகை?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் கவனம் ஈர்த்த சில அறிவிப்புகள் இதோ:

பழைய வருமான வரி முறையைப் பின்பற்றுவோருக்கு, தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 3 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.

பழைய திட்டத்தில் வரி?

பழைய திட்டத்தில் வரி?

ரூ.3 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வருமான வரி இல்லை.

ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5% வரி.
ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை ஆண்டு வருமானத்திற்கு 10 % வரி.
ரூ,12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 % வரி
ரூ.15 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உடையவர்கள் 30% வரி செலுத்த வேண்டும்.

புதிய வருமான வரி முறை
 

புதிய வருமான வரி முறை

புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு மொத்த வருமானம் 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது.

ஏற்கனவே இந்த உச்ச வரம்பு 5 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது இது 7 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது பயனுள்ளதா?

இது பயனுள்ளதா?

நாடு முழுவதும் சுமார் 20% குறைவானர்களே புதிய வருமான வரி முறையை பின்பற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில் இதனால் எத்தனை பேர் பயனடைவார்கள் என்பதே பெரும் கேள்வி.
புதிய வருமான வரி முறையில் சம்பளதாரரின் ஆண்டு மொத்த சம்பளமும் (Annual gross salary) மொத்த வருமானமாகக் கணக்கிடப்படுகிறது. இதனால், வரிவிகிதம் குறைவாக இருந்தும் கூட, கட்ட வேண்டிய வரி அதிகமாக இருக்கும். ஆக இது பெரியளவிலான லாபகரமான திட்டமாக இல்லை.

எதற்கெல்லாம் வரி உயர்வு?

எதற்கெல்லாம் வரி உயர்வு?

சிகரெட் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இனி சிகரெட் விலை அதிகரிக்கும்.

தங்கம், வெள்ளி, வைரம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றின் விலையும் அதிகரிக்க வழிவகுக்கலாம். ஏற்கனவே சர்வதேச சந்தையில் விலையானது அதிகரித்துள்ள நிலையில், இது மேற்கொண்டு விலையை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

தங்கக் கட்டியில் செய்யப்பட்ட பொருட்களுக்கு சுங்க வரி அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையலறையில் பயன்படுத்தப்படும் சிம்னி-க்கு சுங்க வரி 15% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல ரப்பர் மீதான இறக்குமதி வரியும் 25% அதிகரித்துள்ளது.

எதெல்லாம் வரி குறைவு?

எதெல்லாம் வரி குறைவு?

டிவி பேனல்கள் மீதான வரி 2.5% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது டிவி விலை குறைய காரணமாக அமையலாம்.

செல்போன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இது செல்போன் உற்பத்தியினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்படும் வைரங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படும் என அறிவிப்பு

இறால் உணவுகள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரி குறைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு என்ன?

விவசாயிகளுக்கு என்ன?

2023-24 நிதி ஆண்டுக்கான விவசாய கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய மானியம் வழங்கப்படும்.

இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக விவசாய துறையில் ஸ்டார்ட் அப்களை தொடங்குவோருக்கு சலுகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களுக்கு மேற்கொண்டு ஆர்வத்தை தூண்டும் எனலாம்.

தோட்ட கலைத் துறையை மேம்படுத்த 2200 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுவும் விவசாயிகளுக்கு மிக பயனுள்ள ஒன்றாக இருக்கும் எனலாம்.

உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க மாநில தலை நகரங்களில் ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தை படுத்த முக்கிய பங்கு வகிக்கும். இது உற்பத்தி துறைக்கு மட்டும் அல்ல, விவசாய துறைக்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

இயற்கை விவசாயத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை உருவாக்க 10 ஆயிரம் இடங்களில் உரம் தயாரிப்பு மையம் ஏற்படுத்தப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் எனலாம். இது குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பினை பெறலாம்.

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.10000 கோடி நிவாரணம்

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.10000 கோடி நிவாரணம்

வேளாண் பெருமக்கள் நலன் கருதி கால்நடை வளர்ப்பு, பால்வளம், மீன்வளத் துறை மேம்பாட்டுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மிகப்பெரிய ஆறுதல்

மிகப்பெரிய ஆறுதல்

கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100% இயந்திரப் பயன்பாடு உறுதி செய்யப்படும். இது நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது நீண்டகாலமாக இருந்து வரும் கோரிக்கையாக உள்ளது.

கல்வித் துறைக்கு என்ன?

கல்வித் துறைக்கு என்ன?

நாட்டில் கடந்த 2014 முதல் புதிதாக அமைக்கப்பட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுக்கு அருகிலேயே, 157 செவிலியர் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கானதாக இது இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் நோக்கில் பிரதமரின் கவுஷல் விகாஸ் 4.O திட்டம் கொண்டு வரப்படும்.

நாடு முழுவதும் 30 ஸ்கில் இந்தியா இன்டர்நேஷனல் மையங்கள் உருவாக்கப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் ஏகலைவா மாடல் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்காக 38, 800 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் 30 ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் அமைக்கப்படும்.

யுபிஎஸ் சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரதமர் சிறப்பு திட்டத்திற்கு ரூ.6000 கோடி ஒதுக்கப்படும்

செயற்கை நுண் அறிவு சார்ந்த மூன்று மத்திய கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்

ரயில்வே துறைக்கு

ரயில்வே துறைக்கு

ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. இதுவரை ரயில்வேக்கு செய்யப்பட்ட ஒதுக்கீட்டில் இதுவே அதிகம்.

மருத்துவம் & சுகாதாரம்

மருத்துவம் & சுகாதாரம்

2047-க்குள் சிக்கில் செல் அனீமியா எனப்படும் மோசமான ரத்தசோகை நோயை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பான வசிப்பிடம், சுகாதாரம், நீர் ஆதாரம், மின்சாரம் ஆகியனவற்றை உறுதி செய்ய ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

உள்கட்டமைப்பு துறை

உள்கட்டமைப்பு துறை

சாலை, ரயில், மின்துறைகளில் கூடுதல் முதலீடுகள் ஈர்க்கப்படும்

அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு துறைக்கு 33% அளவிற்கு நிதி ஒதுக்கீடு உயர்வு

நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்.

போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

சுற்றுலாத்துறைக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

புதிதாக 50 விமான நிலையங்கள் உருவாக்கப்படும்

உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க மாநில தலை நகரங்களில் ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள் கட்டப்படும்.

உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்

 

நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 10000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

போக்குவரத்து துறைக்காக ரூ.75000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

நாடு முழுவதும் 100 சிறப்பு பேருந்துகள் திட்டங்களுக்கு முன்னுரிமை என அறிவிப்பு

ரூ.7000 கோடியில் இ-கோர்ட் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

மின் திட்டங்களுக்கு ரூ.35000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

மூத்த குடிமக்களுக்கு என்ன?

மூத்த குடிமக்களுக்கு என்ன?

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வங்கி வைப்புத் தொகை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்வு.

பெண்கள் வங்கிகளில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வைக்கும் தொகைக்கு 7.5% வட்டி வழங்கப்படும். இது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் அமலில் இருக்கும்.

பிரதமரின் வீடு திட்டம்

பிரதமரின் வீடு திட்டம்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி 66 % உயர்த்தப்படும். அதாவது, இத்திட்டத்திற்கு 79000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற முக்கிய அறிவிப்புகள்

மற்ற முக்கிய அறிவிப்புகள்

பழங்குடி மக்களுக்கான வீடு, குடிநீர், சாலை, தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி

மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டுக்கு வழங்கப்படும். பான் கார்டு இனி அரசு துறைகளில் பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்.

 

5ஜி சேவைகளை மேம்படுத்துவதற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க ரூ.9000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு

தேக்னா அப்னா தேஷ் என்ற புதிய திட்டம் சுற்றுலாத்துறையில் உருவாக்கப்படும்

சிறு,குறு தொழில்களுக்கான கடன் வட்டியை 1% ஆக குறைக்க நடவடிக்கை

இந்தியாவில் தொழில் தொடங்கும் வசதி எளிமையாக்கப்படும்

பின்னடைவு?

பின்னடைவு?

எனினும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு துறை, தொழில் துறை என சில துறைகளுக்கு பெரிய அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. ஆக இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதேபோல நிதித் துறைக்கும் பெரியளவிலான அறிவிப்புகள் ஏதும் இல்லை எனலாம். ஆக இதுவும் பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

budget 2023 highlights : From increase in income tax slab to increase in tax on gold, silver and diamonds

budget 2023 highlights : From increase in income tax slab to increase in tax on gold, silver and diamonds
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X