இனி பான் கார்டு போதும்.. எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்.. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பான் கார்டை பொது அடையாள அட்டையாக மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பலவிதமான முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதில் ஆதார், பான், டிஜிலாக்கர் சேவை, தனி நபர் பயன்பாட்டிற்கு என பான் எண்ணிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மேலும் வங்கி கேஓய்சி நடமுறையும் எளிமைப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இனி ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் போன்றே பான் கார்டு அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் ஆதார் இணைப்பு செய்தாச்சா.. மார்ச்-க்குள் இதை செய்திடுங்க.. இல்லாட்டி என்ன ஆகும் தெரியுமா? பான் ஆதார் இணைப்பு செய்தாச்சா.. மார்ச்-க்குள் இதை செய்திடுங்க.. இல்லாட்டி என்ன ஆகும் தெரியுமா?

பான் கார்டு முக்கியம்

பான் கார்டு முக்கியம்

சமீபத்திய ஆண்டுகளாகவே வருமான வரி தாக்கல் முதல் கொண்ட, வங்கிகள் வரையில் ஆதார் கார்டினை முன்னிலைப்படுத்தி வந்த மத்திய அரசு, தற்போது மீண்டும் பான் கார்டிற்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கியுள்ளது.

ஆதார் கார்டினை அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அரசின் கவனம் மீண்டும் பான் கார்டின் மீதே திரும்ப தொடங்கியுள்ளது.

 

பான் எண்ணுக்கு விலக்கா?

பான் எண்ணுக்கு விலக்கா?

முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு பான் கார்டுகளுக்கு பதிலாக ஆதார் கார்டுகளை காண்பித்தாலே பண பரிவர்த்தனை வங்கிகளில் எளிதாக செய்து கொள்ளலாமெனவும், மேலும் பல சேவைகளில் இருந்து பான் எண்ணுக்கு விலக்கு அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் அப்படி எல்லாம் இல்லை, வழக்கம்போல பான் எண் தேவை என மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் அறிவித்துள்ளது.

7 விஷயங்களுக்கு முன் உரிமை

7 விஷயங்களுக்கு முன் உரிமை

 

பொதுவாக இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் நடுத்தர மக்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் இந்த பட்ஜெட் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைநிலைக்கும் வளர்ச்சி, உள்கட்டமைப்பு & முதலீடு, திறனை வெளிக்கொணர்தல், பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி, நிதித் துறை என 7 சப்தரிஷிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சவாலான காலகட்டம்

சவாலான காலகட்டம்

உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்நேரத்தில், G20 தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த , இது ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

budget 2023: pan card to be made single business identifier for firms: Nirmala sitharaman

budget 2023: pan card to be made single business identifier for firms: Nirmala sitharaman
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X