Budget 2023:நடுத்தர வர்த்தகத்தினருக்கு ஆறுதல் கிடைக்குமா.. 80சி பிரிவில் மாற்றம் இருக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Budget 2023: நடுத்தர மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில், வரவிருக்கும் மத்திய பட்ஜெட் 2023ல் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

 

இதற்கிடையில் பட்ஜெட் தாக்கலுக்கான பணியில் மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.

குறிப்பாக நடுத்தர மக்கள், சாமானியர்களுக்கு உதவும் விதமாக அறிவிப்புகள் வருமா? என்ற முக்கிய எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் விதமாக வரி விலக்குகள் குறித்தான அறிவிப்புகள் வருமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பல நாட்களுக்கு பிறகு சரிவு.. இனியும் தொடருமா?தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. பல நாட்களுக்கு பிறகு சரிவு.. இனியும் தொடருமா?

சலுகைகள் அதிகரிக்கப் படணும்

சலுகைகள் அதிகரிக்கப் படணும்

சில தினங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் சமானிய மக்கள் தான் மறைமுக வரிகளில் அதிகம் செலுத்துவதாக தகவல்கள் வெளியானது.ஆக அப்படிப்பட்ட சாமானியர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் உதவும் வகையில் பட்ஜெட்டில் சில முக்கிய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது. குறிப்பாக மக்கள் பெரும்பாலும் பலன் பெரும் 80சி பிரிவின் கீழ் சலுகைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

80சி பிரிவின் கீழ் விலக்கு

80சி பிரிவின் கீழ் விலக்கு

பொதுவாக இந்த 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரி விலக்கு கிடைக்கும். இந்த விகிதத்தினை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த வரி விலக்கானது கடந்த 2014ல் இருந்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆக இந்த முறையில் இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு சலுகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

புதிய வரி ஏதும் விதிக்க வேண்டாம்
 

புதிய வரி ஏதும் விதிக்க வேண்டாம்

இன்னும் ஒரு தரப்பு வரி விலக்கு அதிகரிக்காவிட்டாலும் பரவாயில்லை. புதியதாக எந்த வரியும் விதிக்காமல் இருந்தாலே போதும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன. சர்வதேச நாடுகள் சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சி சற்றே பரவாயில்லை என்று எதிர்பார்த்தாலும், மக்களுக்கு இன்னும் வரிச் சலுகைகளைக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். இது மக்கள் கைகளில் பணப்புழக்கத்தினை அதிகரிக்க வழிவகுக்கும். இது தேவையை அதிகரிக்க வழிவகுக்கும்.

ரூ.2.5 லட்சம் ஆக அதிகரிக்கணும்

ரூ.2.5 லட்சம் ஆக அதிகரிக்கணும்

குறிப்பாக வரவிருக்கும் பட்ஜெட் ஆனது நடப்பு மத்திய அரசு கடைசி முழு பட்ஜெட் ஆகும். ஏனெனில் 2024ல் மக்களை தேர்தல் வரவுள்ள நிலையில், இதில் மக்களுக்கு சாதகமாக, குறிப்பாக சம்பதளதாரர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முக்கிய எதிர்பார்ப்பு, 80 சி பிரிவின் கீழ் கிடைக்கும் 1.5 லட்சம் ரூபாய் சலுகையினை, 2.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்ற மற்றொரு தரப்பு கோரிக்கையும் எழுந்துள்ளது.

சம்பளதாரர்களுக்கு ஆறுதல் கிடைக்குமா?

சம்பளதாரர்களுக்கு ஆறுதல் கிடைக்குமா?

இதற்கிடையில் சம்பளதாரர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை தரவிருக்கும் அறிவிப்பினை இந்த பட்ஜெட்டில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது வருமான வரி உச்ச வரம்பில் அதிகரிப்பு இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இது உண்மையில் நடுத்தர மக்கள் சம்பளதாரர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையும் எனலாம்.

எவ்வளவு இருக்கலாம்?

எவ்வளவு இருக்கலாம்?

தற்போது வரியில்லா வரம்பானது 2.5 லட்சம் ரூபாயாக இருக்கும் நிலைய்ல், இது 3 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. இது மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2023: Taxpayers expect tax deduction under Section 80C to double

Budget 2023: Taxpayers expect tax deduction under Section 80C to double
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X