Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் 2023 தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும். இதனால் நடுத்தர மக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு ஹெல்த் கேர் துறைக்கு அதிக ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி தேவையும் அதிகரித்துள்ளது. ஆக டிஜிட்டல் கல்வி முறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக ஒதுக்கீடு எதிர்பார்ப்பு

அதிக ஒதுக்கீடு எதிர்பார்ப்பு

குறிப்பாக மத்திய அரசின் கடைசி பட்ஜெட் ஆக இருப்பதால், இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பல தரப்பினரின் முக்கிய எதிர்பார்ப்பாக ஹெல்த் கேர் மற்றும் கல்வி துறைக்கு அதிக ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது. இது சாமானியர்களையும் நடுத்தர மக்களையும் பாதுகாக்க உதவும் என்பதோடு, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும்.

பயனளிக்கலாம்

பயனளிக்கலாம்

குறிப்பாக கல்வித் துறையில் பள்ளிகள், பல்கலைக் கழகங்கள் உள்கட்டமைப்பு துறைக்கு ஒதுகீடுகள் அதிகம் செய்யபப்ட வேண்டும். அப்படி செய்யப்படும்போது கல்வியின் தரம் மேம்படலாம்0

இதே மருத்துவ துறைக்கு ஒதுக்கீடு அதிகம் செய்யப்படும்போது, மக்கள் அதிக பயனடைலாம். ஹெல்த்கேர் மற்றும் கல்வித் துறைக்கு மொத்த பட்ஜெட்டில் 45% நிதியும், உள்கட்டமைப்பு துறைக்கு 32.3% நிதி ஒதுக்கீடும் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோசமான சுகாதார பிரச்சனை

மோசமான சுகாதார பிரச்சனை

இந்தியாவில் உள்கட்டமைப்பு பிரச்சனை என பலவற்றை மேம்படுத்த வேண்டும் என்பது தான். கொரோனா காலகட்டத்தில் ஒரு ஆய்வில் 10,000 பேருக்கு ஒரே ஒரு பெட் தான் இருப்பதாக கூறப்பட்டது. அந்தளவுக்கு இந்தியாவின் சுகாதாரம் என்பது மோசமான நிலையில் உள்ளது. இந்தியா தனது ஜிடிபி விகிதத்தில் 3% ஹெல்த்கேர் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மருத்துவ துறைக்கு ஒதுக்கீடு

மருத்துவ துறைக்கு ஒதுக்கீடு


குறிப்பாக மருந்துகள் ஏற்றுமதியினை அதிகரிக்கும் விதமாக மருத்துவ நிறுவனங்களுக்கான தேவையான அனுமதியினை எளிதாக வழங்க வேண்டும். மேலும் மருத்து சம்பந்தமான ஆய்வுக்கூடங்கள், விதிமுறைகளில் எளிமை உள்ளிட்ட பலவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎல்ஐ போன்ற திட்டம்

பிஎல்ஐ போன்ற திட்டம்

குறிப்பாக மருந்துத் துறையின் வளர்ச்சிக்கு உதவும் கொள்கைகள், ஜிஎஸ்டி விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இதுபோன்ற அறிவிப்புகள் இந்திய மருத்துவ துறையில் எதிர்கால வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். மேலும் பிஎல்ஐ திட்டம் போன்ற மருத்துவ துறையினை ஊக்குவிக்க ஒரு திட்டத்தினை அறிமுக்கப்படுத்த வேண்டும். அப்படி இல்லை எனில், பி எல் ஐ திட்டத்திலேயே மருத்துவ நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு சலுகைகளை அறிவிக்க வேண்டும்.

கல்வி துறைக்கு சலுகை

கல்வி துறைக்கு சலுகை

இந்த பட்ஜெட்டில் தரமான கல்வித்துறையை ஊக்குவிக்க, டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்க நிதியினை அதிக ஒதுக்கீடு செய்ய வேண்டும். குறிப்பாக இந்த ஆன்லைன் கல்வி முறையை ஊக்குவிப்பதற்காக இணையம், உள்கட்டமைப்பு, டேட்டா உற்பத்தி, வரி சலுகை அளிக்க வேண்டும். துல்லியமான இணைய வேகம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற இணைப்பு சாதனங்களை நாட்டின் மூலை முடுக்கெங்கும் கொண்டு செல்ல வேண்டும். இந்த இலக்கினை அடைவது அரசின் பொறுப்பாகும். இதன் மூலம் டிஜிட்டல் கல்விக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாறும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2023: Will health care, education sectors be given importance in the budget?

Budget 2023: Will health care, education sectors be given importance in the budget?
Story first published: Thursday, January 26, 2023, 23:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X