மோடி அரசின் 10வது பட்ஜெட்.. என்று தாக்கல்.. நேரம் என்ன.. மற்ற முக்கிய விஷயங்கள் என்னென்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மத்திய 2022 - 23ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 அன்று தொடங்கவுள்ளது. பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யபடவிருக்கின்றது.

இந்த பட்ஜெட்டினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கின்றார். இந்த பட்ஜெட்டினை கடந்த ஆண்டிலேயே காகிதமில்லாத பட்ஜெட் ஆக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவு செய்தார்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் வரவிருக்கும் பட்ஜெட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு அல்வா தயாரிப்பது ஏன்..?! #Budget2022 பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு அல்வா தயாரிப்பது ஏன்..?! #Budget2022

பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் தாக்கல்

நடப்பு ஆண்டிலும் ஓமிக்ரான் தாக்கம் பரவி வரும் நிலையில், சுகாதார உள்கட்டமைப்பு துறைகளுக்கு முக்கிய நடவடிக்கை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் 112 ஆவது பிரிவு, மத்திய அரசின் வருடாந்திர நிதி நிலை அறிக்கையை வரையறுக்கின்றது. ஒவ்வொரு ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி மார்ச் 31 அன்று முடிவடையவுள்ள நிதியாண்டுக்கான பட்ஜெட்டினை, மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.

மோடி அரசின் 10வது பட்ஜெட்

மோடி அரசின் 10வது பட்ஜெட்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 10 வது பட்ஜெட் இதுவாகும். இது கடந்த 2014ல் இருந்து தொடர்ந்து பட்ஜெட் தாக்கலை செய்து வருகின்றது. இதே மத்திய நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள 4வது பட்ஜெட் ஆகும்.

பொருளாதார ஆய்வறிக்கை
 

பொருளாதார ஆய்வறிக்கை

வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்னரே பொருளாதார ஆய்வறிக்கையானது தாக்கல் செய்யப்படும். இது ஜனவரி 31 அன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இது கடந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் பற்றிய மதிப்பாய்வாக இருக்கும். இது தொழிற்துறை, விவசாயத் துறை, உற்பத்தி போன்ற அனைத்து துறைகளையும் மதிப்பாய்வு செய்கின்றது.

பட்ஜெட் கூட்டத் தொடர்

பட்ஜெட் கூட்டத் தொடர்

இந்தியாவில் முதல் பொருளாதார ஆய்வறிக்கையானது 1950 - 51ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மற்றும் பொருளாதார ஆய்வறிக்கை என்பது 1964 வரையில் ஒன்றாக தாக்கல் செய்யப்பட்டது. எனினும் 1964க்கு பிறகு தனித் தனியாக பிரிக்கப்பட்டது.

இதற்கிடையில் ஜனவரி 31 அன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரானது, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கும். இது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரையில் நடைபெறும்.

நேரம் என்ன?

நேரம் என்ன?

கடந்த 2017 முதல் பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த பட்ஜெட் உரையானது 90 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்கள் வரையில் இருக்கும். கடந்த ஆண்டில் நிர்மலா சீதாராமன் 160 நிமிடங்கள் இந்த உரையை வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

budget day, time, key things to look for Budget 2022

budget day, time, key things to look for Budget 2022/மோடி அரசின் 10வது பட்ஜெட்.. என்று தாக்கல்.. நேரம் என்ன.. மற்ற முக்கிய விஷயங்கள் என்னென்ன?
Story first published: Monday, January 24, 2022, 15:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X