உலகளவில் அதிக ரெஸ்டாரன்ட்களை வைத்துள்ள பாஸ்ட் புட் நிறுவனங்களில் 2வது இடத்தில் உள்ள பர்கர் கிங் இந்தியாவில் தனது வரத்தகத்தை விரிவாக்கம் செய்வதற்காகப் பெரிய அளவில் முதலீட்டை திரட்ட திட்டமிட்டு ஐபிஓ வெளியிட முடிவு செய்தது. இத்திட்டத்தின் டிசம்பர் 2ஆம் தேதி ஐபிஓ திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் முதலீடு கதவைத் திறந்தது.
2020ஆம் ஆண்டில் ஐபிஓ வெளியிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் சிறப்பான வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்ற நிலையில், உலகளவில் வர்த்தகம் செய்யும் பர்கர் கிங் நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஏகபோக வரவேற்பைக் கொடுத்துள்ளனர்.
ஹெச்டிஎப்சி வங்கியை போல் எஸ்பிஐ யோனோ சேவையும் முடங்கியது..! #SBI #Yono

810 கோடி ரூபாய் ஐபிஓ
பர்கர் கிங் இந்தியா மும்பை பங்குச்சந்தையில் சுமார் 74,491,524 பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 810 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்க்க உள்ளது.
இதில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 சதவீத பங்குகளைச் சுமார் 38 மடங்கிற்கு அதிகமாக முதலீடு செய்து அசத்தியுள்ளனர். இதேபோல் Qualified Institutional பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட பங்களை 2.7 மடங்கு அதிகமாகவும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 3.6 மடங்கு அதிகமாகவும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

முதல் நாள்
பர்கர் கிங் இந்தியா ஐபிஓ டிசம்பர் 2ஆம் தேதி துவங்கப்பட்ட நிலையில் முதல் நாள் முடிவில் மொத்தமாக 3.13 மடங்கிற்கும், 2வது நாள் முடிவில் 9.38 மடங்கிற்கும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
டிசம்பர் 3ஆம் தேதி கடைசி நாள் என்பதால் ரீடைல் முதலீட்டாளர்களின் வருகை மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக விரிவாக்கம்
அமெரிக்கா மற்றும் உலகின் 100 நாடுகளில் வர்த்தகம் செய்யும் பர்கர் கிங் சுமார் 18,000 ரெஸ்டாரன்ட்களை வைத்து உலகமும் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் பர்கர் கிங் இந்தியாவில் 2014ல் வர்த்தகத்தைத் துவங்கியது.
பர்கர் கிங் இந்தியா மற்றும் அதன் பிரான்சைஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் கடந்த 6 வருடத்தில் 16 மாவட்டங்களில் சுமார் 47 நகரங்களில் 202 ரெஸ்டாரன்ட்களை வைத்து வர்த்தகம் செய்து வருகிறது.

700 ரெஸ்டாரன்ட் இலக்கு
பர்கர் கிங் இந்தியாவில் வர்த்தகம் துவங்க திட்டமிட்டு மாஸ்டர் பிரான்சைஸ் மற்றும் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெரிய வர்த்தக இலக்குடன் ஆரம்பம் செய்தது. ஆனால் கடந்த 6 வருடத்தில் 202 ரெஸ்டாரன்ட்கள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் வருகிற டிசம்பர் 31, 2026க்குள் 700 ரெஸ்டாரன்ட்களைத் திறக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கு உள்ளது.