பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட போன்பே QR கோட்கள்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா என்ற பகுதியில் குவியல் குவியலாக போன்பே QR கோட்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து போன்பே தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழில் போட்டி காரணமாக ஊழியர்கள் இப்படியும் செய்வார்களா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ள நிலையில் போன்பே QR கோட்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

போன்பே QR கோட்கள் எரிப்பு

போன்பே QR கோட்கள் எரிப்பு

டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான போன்பே அதன் QR கோட்களை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறி போட்டி நிறுவனமான பேடிஎம் நிறுவனத்தின் ஊழியர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளது. மூன்று பேடிஎம் ஊழியர்கள் அதன் QR குறியீடுகளை எரித்ததாக போன்பே தனது புகாரில் கூறியுள்ளது.

காவல்துறையில் புகார்

காவல்துறையில் புகார்

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சூரஜ்பூர் லக்னாவாலி காவல் நிலையத்தில் ஜூலை 29ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோது போன்பே QR கோட்களை பெட்ரோல் ஊற்றி எரித்த வீடியோ போலீசாருக்கு சிக்கியது.

வீடியோ ஆதாரம்
 

வீடியோ ஆதாரம்

போன்பே QR கோட்கள் எரிக்கப்படுவதை காட்டும் அந்த வீடியோவின் அடிப்படையில் காவல்துறை விசாரணை செய்தபோது அந்த வீடியோவில் இருந்த மூன்று பேர் பேடிஎம் ஊழியர்கள் என்று தெரிய வந்தது. அதிலும் மூன்று நபர்களில் ஒருவர் பேடிஎம் பகுதி விற்பனை மேலாளர் (ASM) என்றும் மற்றவர் போன்பே நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என விசாரணையில் தெரிய வந்தது.

மூன்று பேர் கைது

மூன்று பேர் கைது

QR குறியீடுகளை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்கள் அமன் குமார் குப்தா, தேவன்சு குப்தா மற்றும் ராகுல் பால் ஆகியோர் என முதல்கட்ட காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் போன்பே ஊழியர்

முன்னாள் போன்பே ஊழியர்

கைது செய்யப்பட்ட முவரில் ஒருவரான தேவன்சு குப்தா கடந்த 2018 முதல் 2022 வரை போன்பே நிறுவனத்தில் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது. முன்னாள் ஊழியர் என்பதால் அவருக்கு எந்தெந்த பகுதியில் போன்பே QR குறியீடுகள் உள்ளது என்பது நன்றாக தெரியும் என்றும், அவற்றைத் திருடி எரித்துவிட்டால் பேடிஎம் QR குறியீடுகளுக்கு அதிக பணபரிவர்த்தனை கிடைக்கும் என திட்டமிட்டதாக தெரிகிறது.

விளக்கம்

விளக்கம்

இதுகுறித்து விளக்கமளித்த போன்பே செய்தித்தொடர்பாளர், இந்த சம்பவம் போன்பே நிறுவனத்திற்கும், அவர்களின் முன்னாள் ஊழியர்களுக்கும் இடையேயான பிரச்சனையாக இருக்கலாம் என்றும், இருப்பினும் இந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.

பணிநீக்கம்

பணிநீக்கம்

இதுகுறித்து பேடிஎம் அதிகாரி ஒருவர் கூறியபோது, 'இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற தவறான நடத்தையை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், எங்கள் நிறுவனம் எப்போதும் ஒழுக்க நெறிமுறைகளை கடைபிடிப்பதையே விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Burning QR Codes, PhonePe Files Complaint Against Paytm Employees!

Burning QR Codes, PhonePe Files Complaint Against Paytm Employees! | பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட PhonePe QR கோட்கள்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X