தொடரும் பிரச்சனை.. கஃபே காபி டேவில் ரூ.2,000 கோடி மாயம்.. விசாரணையில் அம்பலம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: மிகவும் பிரபலமான கஃபே காபி டே நிறுவனரும், தொழில் அதிபருமான சித்தார்த்தா கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டார்.

 

கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான இவர் காணமல் போனதாக அறிவிக்கப்பட்டு பின்னர், 36 மணி நேரத்திற்கு பின்பு நேத்ராவதி ஆற்றங்கரையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

அந்த சமயத்தில் அவருக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு அதிகப்படியான கடன் பிரச்சனையினால் மனஅழுத்தம் இருந்திருக்கலாம், இதனால் இப்படி ஒரு மோசமான முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

பெரும் கடன்

பெரும் கடன்

சித்தார்த்தா தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதிய தனது கடைசி கடிதத்தில், நிறுவனத்தின் பெருகி வரும் கடனை சமாளிக்க முடியவில்லை என்றும் வருமான வரி அதிகாரிகளால், அவர் கடுமையான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகவும் சித்தார்த்தா குறிப்பிட்டிருந்தார். மேலும் இதனால் தான் ஊழியர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும் எழுதியிருந்ததாகவும் அப்போது வெளியான செய்திகள் கூறுகின்றன. .

பல தொழில்கள்

பல தொழில்கள்

நூறாண்டுகளுக்கும் மேலாக காஃபி உற்பத்தி மற்றும் காஃபி தொடர்பான தொழிலைச் செய்து வரும் குடும்பத்தில் இருந்து வந்த வி.ஜி.சித்தார்த்தா, இளைஞர்களை கவரும் வகையில் ஆடம்பரமான கஃபே காஃபி டே நிறுவனத்தை நிறுவினார். இது தவிர பல தொழில்களையும் செய்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் பல்வேறு இடங்களில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல், மிகப்பெரிய மன அழுத்தத்துக்கு ஆளாகினார் என்றும் கூறப்பட்டது.

மிக பரப்பரப்பு
 

மிக பரப்பரப்பு

அதன் பிறகு 2019-ம் ஆண்டில் தனது தொழில்களில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சித்தார்த்தா, 2019ம் ஆண்டு ஜூலை மாதம் மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் விழுந்து உயிரை விட்டார். அவரி இறப்பு இன்று வரை தொடரும் பரப்பரப்பான ஒரு விஷயமாகவே உள்ளது. இது அப்போதே நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

பணம் காணவில்லை

பணம் காணவில்லை

இந்த நிலையில் சித்தார்த்தாவின் காபி டே நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் குறைந்தபட்சம் 2,000 கோடி ரூபாய் பணம் ($270 மில்லியன்) மாயமாகியுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அந்த வாரியம் 100க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பரிவர்த்தனைகள் ஆய்வு

பரிவர்த்தனைகள் ஆய்வு

ஜூலை மாதம் சித்தார்த்தா இறந்ததை தொடர்ந்து, இந்தியாவின் மிகப் பிரபலமான காபி டே நிறுவனத்தின் பண பரிவர்த்தகளை அறிக்கையில், இது தொடர்பான மற்ற பல நிறுவங்களிடம் விசாரணை மற்றும் ஆய்வும் செய்யப்பட்டது. இது குறித்தான அந்த வரைவு அறிக்கையில் தான் பில்லியன் கணக்கான ரூபாய் காணமல் போயுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடரும் விசாரணை

தொடரும் விசாரணை

மேலும் விசாரணை இன்னும் நடந்து கொண்டு தான் உள்ளது. இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. காணமல் போன தொகை மொத்தம் 2,500 கோடி ரூபாய் வரையில் இருக்கலாம் என, அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடரும் அம்பலம்

தொடரும் அம்பலம்

கடந்த ஆண்டு 59 வயதான ஒரு பிரபலமான நிறுவனத்தின் நிறுவனர் காணமல் போனது, இன்று வரையில் திகைக்க வைக்கும் ஒரு நிகழ்வாகவே உள்ளது. மாலை நேரத்தில் சற்று நடை பயிற்சி மேற்கொள்வதாக கூறிய சித்தார்த்தா இரண்டு நாட்களுக்கு பின்னர் சடலமாக ஆற்றில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடரும் நிலையில் தான் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cafe Coffee day finds Rs.2,000 cr missing after Siddhartha suicide

Cafe coffee day finds $270 millions missing from its accounts.
Story first published: Tuesday, March 17, 2020, 10:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X